திருப்புகழ் 454 கங்குலின் குழல் (சிதம்பரம்)

Thiruppugal 454 Kangkulinkuzhal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்த தந்தனத் தான தந்தன
தந்த தந்தனத் தான தந்தன
தந்த தந்தனத் தான தந்தன – தந்ததான

கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி
மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு
கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக – செம்பொனாரம்

கந்த ரந்தரித் தாடு கொங்கைக
ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி
கந்த முஞ்சிறுத் தேம லும்பட – சம்பைபோல

அங்க மைந்திடைப் பாளி தங்கொடு
குந்தி யின்குறைக் கால்ம றைந்திட
அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி – கொஞ்சமேவும்

அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல்
அங்கை பொன்பறிக் கார பெண்களொ
டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ – தென்றுபோமோ

சங்கு பொன்தவிற் காள முந்துரி
யங்கள் துந்துமிக் காட திர்ந்திட
சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட – அண்டகோசம்

சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட
இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட
தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட – வந்தசூரைச்

செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ
அந்த கன்புரத் தேற வஞ்சகர்
செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி – கந்தவேளே

திங்க ளொண்முகக் காமர் கொண்டவன்
கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு
செம்பொ னம்பலத் தேசி றந்தருள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தந்த தந்தனத் தான தந்தன
தந்த தந்தனத் தான தந்தன
தந்த தந்தனத் தான தந்தன – தந்ததான

கங்குலின் கார் குழல் முகம் சசி
மஞ்சளின் புயத்தார் சரம் பெறு
கண்கள் கொந்தளக் காதுகொஞ்சுக – செம் பொன் ஆரம்

கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள்
உம்பலின் குவட்டு ஆம் எனும்
கிரிகந்தமும் சிறு தேமலும் பட – சம்பை போல

அங்கு அமைந்து இடை பாளிதம் கொடு
குந்தியின் குறைக் கால் மறைந்திட
அண் சிலம்பு ஒலிப் பாடகம் சரி – கொஞ்ச மேவும்

அஞ்சுகம் குயில் பூவையின் குரல்
அம் கை பொன் பறிக்கார பெண்கள் ஓடு
அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது – என்று போமோ

சங்கு பொன் தவில் காளமும்
துரியங்கள் துந்துமிக் காடு அதிர்ந்திட
சந்த செம் தமிழ்ப் பாணர் கொஞ்சிட – அண்ட கோசம்

சந்திரன் பதத்தோர் வணங்கிட
இந்திரன் குலத்தார் பொழிந்திட
தந்திரம் புயத்தார் புகழ்ந்திட – வந்த சூரை

செம் கையும் சிரத்தோடு பங்கு எழ
அந்தகன் புரத்து ஏற வஞ்சகர்
செம் சரம் தொடுத்தே நடம் புரி – கந்தவேளே

திங்கள் ஒண் முகக் காமர் கொண்ட வன்
கொங்கை மென் குறப் பாவையும் கொடு
செம் பொன் அம்பலத்தே சிறந்து அருள் – தம்பிரானே.

English

kangu linkuzhaR kArmu kanjasi
manja Linpuyath thArsa rampeRu
kaNkaL konthaLak kAthu konjuka – semponAram

kantha rantharith thAdu kongaika
Lumpa linkuvat tAme nungiri
kantha munjiRuth thEma lumpada – sampaipOla

anga mainthidaip pALi thangodu
kunthi yinkuRaik kAlma Rainthida
aNsi lampolip pAda kanjari – konjamEvum

anju kanguyiR pUvai yinkural
angai ponpaRik kAra peNkaLo
daNdi maNdaiyark kUzhi yanjeyva – thenRupOmO

sangu ponthaviR kALa munthuri
yangaL thunthumik kAda thirnthida
santha senthamizhp pANar konjida – aNdakOsam

santhi ranpathath thOrva Nangida
inthi rankulath thArpo zhinthida
thanthi rampuyath thArpu kazhnthida – vanthacUraic

chengai yunjirath thOdu pangezha
antha kanpurath thERa vanjakar
senja ranthoduth thEna dampuri – kanthavELE

thinga LoNmukak kAmar koNdavan
kongai menkuRap pAvai yungodu
sempo nampalath thEsi RantharuL – thampirAnE.

English Easy Version

kangulin kAr kuzhal mukam sasi
manjaLin puyaththAr saram peRu
kaNkaL konthaLak kAthukonjuka – sem pon Aram

kantharam thariththu Adu kongaikaL
umpalin kuvattu Am enum kiri
kanthamum siRu thEmalum pada – sampai pOla

angu amainthu idai pALitham kodu
kunthiyin kuRaik kAl maRainthida
aN silampu olip pAdakam sari – konja mEvum

anjukam kuyil pUvaiyin kural
am kai pon paRikkAra peNkaL Odu
aNdi maNdaiyarkku Uzhiyam seyvathu – enRu pOmO

sangu pon thavil kALamum thuriyangaL
thunthumik kAdu athirnthida
santha sem thamizhp pANar konjida – aNda kOsam

santhiran pathaththOr vaNangida
inthiran kulaththAr pozhinthida
thanthiram puyaththAr pukazhnthida – vantha cUrai

sem kaiyum siraththOdu pangu ezha
anthakan puraththu ERa vanjakar
sem saram thoduththE nadam puri – kanthavELE

thingaL oN mukak kAmar koNda van
kongai men kuRap pAvaiyum kodu
sem pon ampalaththE siRanthu aruL – thampirAnE.