Thiruppugal 455 Kondhalampuzhu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன – தனதான
கொந்த ளம்புழு கெந்த வண்பனி
ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர
கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய – மடமாதர்
கொந்த ணங்குழ லின்ப மஞ்சள
ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி
கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் – மயில்போலே
வந்து பஞ்சணை யின்ப முங்கொடு
கொங்கை யும்புய முந்த ழும்புற
மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ – மயல்மேலாய்
வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி
யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த
வஞ்சி னங்களு டன்கி டந்துட – லழிவேனோ
தந்த னந்தன தந்த னந்தன
திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
சங்கு வெண்கல கொம்பு துந்துமி – பலபேரி
சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி
தங்கு டுண்டுடு டுண்டு டன்பல
சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் – களமீதே
சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு
செம்பு ளங்கரு டன்ப ருந்துகள்
செங்க ளந்திகை யெங்கு மண்டிட – விடும்வேலா
திங்க ளிந்திர னும்ப ரந்தர
ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை
செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன – தனதான
கொந்தளம் புழுகு கெந்த வண் ப(ன்)னிர்
ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர
கொங்கை வெண் கரி கொம்பு இணங்கிய – மட மாதர்
கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள்
அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி
கொஞ்சு பைங்கிளி அன்பு எனும் குயில் – மயில் போலே
வந்து பஞ்சணை இன்பமும் கொடு
கொங்கையும் புயமும் தழும்பு உற
மஞ்சு ஒண் கலையும் குலைந்து அவ(ம்) – மயல் மேலாய்
வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும்
சுகங்கள் திரும்பி முன் செய்த
வஞ்சினங்களுடன் கிடந்து உடல் – அழிவேனோ
தந்தனந்தன தந்தனந்தன
திந்திமிந்திமி திந்திமிந்திமி
சங்கு வெண்கல கெம்பு துந்துமி – பல பேரி
சஞ்சலஞ் சல கொஞ்சு கிண்கிணி
தங்கு டுண்டுடு டுண்டுடன் பல
சந்திர அம்பறை பொங்கு வஞ்சகர் – களம் மீதே
சிந்த வெண் கழுகு ஒ(ஓ)ங்கு பொங்கு எழு
செம் புள் அம் கருடன் பருந்துகள்
செம் களம் திகை எங்கும் அண்டிட – விடும் வேலா
திங்கள் இந்திரன் உம்பர்
அந்தரரும் புகழ்ந்து உருகும் பரன் சபை
செம் பொன் அம்பலம் அம்கொள் அன்பர்கள் – பெருமாளே.
English
kontha Lampuzhu kentha vaNpani
rampa samprama Nintha manthara
kongai veNkari kompi Nangiya – madamAthar
kontha Nanguzha linpa manjaLa
Ninthu saNpaka vanji Langodi
konju paingiLi yanpe nunguyil – mayilpOlE
vanthu panjaNai yinpa mungodu
kongai yumpuya muntha zhumpuRa
manju voNkalai yungu lainthava – mayalmElAy
vanji nangaLthi raNdu kaNsevi
yunju kangaLthi rumpi munseytha
vanji nangaLu danki danthuda – lazhivEnO
thantha nanthana thantha nanthana
thinthi minthimi thinthi minthimi
sangu veNkala kompu thunthumi – palapEri
sanja lanjala konju kiNkiNi
thangu duNdudu duNdu danpala
santhi rampaRai pongu vanjakar – kaLameethE
sintha veNkazhu kongu pongezhu
sempu Langaru danpa runthukaL
senga Lanthikai yengu maNdida – vidumvElA
thinga Linthira numpa ranthara
rumpu kazhnthuru kumpa ransapai
sempo nampala mango LanparkaL – perumALE.
English Easy Version
konthaLam puzhuku kentha vaN pa(n)nir
rampa sampram aNintha manthara
kongai veN kari kompu iNangiya – mada mAthar
konthu aN am kuzhal inpa manjaL
aNinthu saNpaka vanji iLam kodi
konju paingiLi anpu enum kuyil – mayil pOlE
vanthu panjaNai inpamum kodu
kongaiyum puyamum thazhumpu uRa
manju oN kalaiyum kulainthu ava(m) – mayal mElAy
vanjinangaL thiraNdu kaN seviyum
sukangaL thirumpi mun seytha
vanjinangaLudan kidanthu udal – azhivEnO
thanthananthana thanthananthana
thinthiminthimi thinthiminthimi
sangu veNkala kempu thunthumi – pala pEri
sanjalanj chala konju kiNkiNi
thangu duNdudu duNdudan pala
santhira ampaRai pongu vanjakar – kaLam meethE
sintha veN kazhuku o(O)ngu pongu ezhu
sem puL am karudan parunthukaL
sem kaLam thikai engum aNdida – vidum vElA
thingaL inthiran umpar anthararum
pukazhnthu urukum paran sapai
sem pon ampalam amkoL anparkaL – perumALE.