Thiruppugal 456 Mandharamenkuvadar
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தன தந்தன தான தந்தன
தான தனந்தன தான தந்தன
தந்தன தந்தன தான தந்தன
தான தனந்தன தான தந்தன
தந்தன தந்தன தான தந்தன
தான தனந்தன தான தந்தன – தந்ததான
மந்தர மென்குவ டார்த னங்களி
லார மழுந்திட வேம ணம்பெறு
சந்தன குங்கும சேறு டன்பனி
நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி
மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல்
வாள்வி ழிசெங்கழு நீர்த தும்பிய – கொந்தளோலை
வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை
வாட நடம்புரி வார்ம ருந்திடு
விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
மோக னவஞ்சியர் போல கம்பெற
வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர்
போல இருந்ததெ னாம யங்கிட – இன்சொல்கூறிச்
சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர்
வாரு மெனும்படி யால கங்கொடு
பண்சர சங்கொள வேணு மென்றவர்
சேம வளந்துறு தேன ருந்திட
துன்றுபொ னங்கையின் மீது கண்டவ
ரோடு விழைந்துமெ கூடி யின்புறு – மங்கையோரால்
துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு
சீபு ழுவுஞ்சல மோடி றங்கிய
புண்குட வன்கடி யோடி ளஞ்சனி
சூலை மிகுந்திட வேப றந்துடல்
துஞ்சிய மன்பதி யேபு குந்துய
ராழி விடும்படி சீர்ப தம்பெறு – விஞ்சைதாராய்
அந்தர துந்துமி யோடு டன்கண
நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய
ரிந்திர சந்திரர் சூரி யன்கவி
வாணர் தவம்புலி யோர்ப தஞ்சலி
அம்புய னந்திரு மாலொ டிந்திரை
வாணி யணங்கவ ளோட ருந்தவர் – தங்கள்மாதர்
அம்பர ரம்பைய ரோடு டன்திகழ்
மாவு ரகன்புவி யோர்கள் மங்கையர்
அம்புவி மங்கைய ரோட ருந்ததி
மாதர் புகழ்ந்திட வேந டம்புரி
அம்புய செம்பதர் மாட கஞ்சிவ
காம சவுந்தரி யாள்ப யந்தருள் – கந்தவேளே
திந்திமி திந்திமி தோதி மிந்திமி
தீத திதிந்தித தீதி திந்திமி
தந்தன தந்தன னாத னந்தன
தான தனந்தன னாவெ னும்பறை
செந்தவில் சங்குட னேமு ழங்கசு
ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் – கண்டவேலா
செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில்
வாழு மிளங்கொடி யாள்ப தங்களில்
வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு
தாள ழகங்கையின் வேலு டன்புவி
செம்பொனி னம்பல மேல கம்பிர
கார சமந்திர மீத மர்ந்தருள் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தந்தன தந்தன தான தந்தன
தான தனந்தன தான தந்தன
தந்தன தந்தன தான தந்தன
தான தனந்தன தான தந்தன
தந்தன தந்தன தான தந்தன
தான தனந்தன தான தந்தன – தந்ததான
மந்தரம் என் குவடு ஆர் தனங்களில்
ஆரம் அழுந்திடவே மணம் பெறு
சந்தன குங்கும சேறுடன் பனி
நீர்கள் கலந்திடுவார் முகம் சசி
மஞ்சு உறையும் குழலார் சரம் கயல்
வாள் விழி செம் கழு நீர் ததும்பிய – கொந்தள ஓலை
வண் சுழலும் செவியார் நுடங்கு இடை
வாட நடம் புரிவார் மருந்திடு
விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில்
மோகன வஞ்சியர் போல் அகம் பெற
வந்தவர் எந்த உ(ஊ)ர் நீர் அறிந்தவர்
போல இருந்தது எனா மயங்கிட – இன் சொல் கூறி
சுந்தர வங்கணமாய் நெருங்கி நி(நீ)ர்
வாரும் எனும் படி ஆல அகம் கொடு
பண் சரசம் கொள வேணும் என்று அவர்
சேம வளம் துறு தேன் அருந்திட
துன்று பொன் அங்கையின் மீது கண்டு
அவரோடு விழைந்துமே கூடி இன்புறு – மங்கையோரால்
துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு
சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய
புண் குடவன் கடியோடு இளம் ச(ன்)னி
சூலை மிகுந்திடவே பறந்து உடல்
துஞ்சிய மன் பதியே புகும் துயர்
ஆழி விடும்படி சீர் பதம் பெறு – விஞ்சை தாராய்
அந்தர துந்துமியோடு உடன் கண
நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர்
இந்திர சந்திரர் சூரியன் கவி
வாணர் தவம் புலியோர் பதஞ்சலி
அம்புயன் அம் திருமாலொடு இந்திரை
வாணி அணங்கு அவளோடு அரும் தவர் – தங்கள் மாதர்
அம்பர ரம்பையரோடு உடன் திகழ்
மா உரகன் புவியோர்கள் மங்கையர்
அம் புவி மங்கையரோடு அருந்ததி
மாதர் புகழ்ந்திடவே நடம் புரி
அம் புய செம் பதர் மாடு அகம் சிவ
காம சவுந்தரியாள் பயந்து அருள் – கந்த வேளே
திந்திமி திந்திமி தோதி மிந்திமி
தீத திதிந்தித தீதி திந்திமி
தந்தன தந்தன னாத னந்தன
தான தனந்தன னா எனும் பறை
செம் தவில் சங்குடனே முழங்க
அசுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல் – கண்ட வேலா
செம் தினையின் புனம் ஏர் குறிஞ்சியில்
வாழும் இளம் கொடியாள் பதங்களில்
வந்து வணங்கி நிணே முகம் பெறு
தாள் அழக அம்கையின் வேலுடன் புவி
செம் பொ(ன்)னின் அம்பலம் மேல் அகம்
பிரகார ச மந்திர மீது அமர்ந்து அருள் – தம்பிரானே.
English
manthara menkuva dArtha nangaLi
lAra mazhunthida vEma NampeRu
santhana kunguma sERu danpani
neerkaL kalanthidu vArmu kanjasi
manjuRai yumkuzha lArsa ramkayal
vALvi zhisengazhu neertha thumpiya – konthaLOlai
vaNchuzha lumchevi yArnu dangidai
vAda nadampuri vArma runthidu
vinjaiyar konjidu vAri Languyil
mOka navanjiyar pOla kampeRa
vanthava renthavur neera Rinthavar
pOla irunthathe nAma yangida – insolkURic
chunthara vangaNa mAyne runginir
vAru menumpadi yAla kangodu
paNsara sangoLa vENu menRavar
sEma vaLanthuRu thEna runthida
thunRupo nangaiyin meethu kaNdava
rOdu vizhainthume kUdi yinpuRu – mangaiyOrAl
thunpamu dangazhi nOysi rangodu
seepu zhuvunjala mOdi Rangiya
puNkuda vankadi yOdi Lamsani
cUlai mikunthida vEpa Ranthudal
thunjiya manpathi yEpu kunthuya
rAzhi vidumpadi seerpa thampeRu – vinjaithArAy
anthara thunthumi yOdu dankaNa
nAthar pukazhnthida vEtha vinjaiya
rinthira chanthirar cUri yankavi
vANar thavampuli yOrpa thanjali
ampuya nanthiru mAlo dinthirai
vANi yaNangava LOda runthavar – thangaLmAthar
ampara rampaiya rOdu danthikazh
mAvu rakanpuvi yOrkaL mangaiyar
ampuvi mangaiya rOda runthathi
mAthar pukazhnthida vEna dampuri
ampuya sempathar mAda kamsiva
kAma savunthari yALpa yantharuL – kanthavELE
thinthimi thinthimi thOthi minthimi
theetha thithinthitha theethi thinthimi
thanthana thanthana nAtha nanthana
thAna thananthana nAve numpaRai
senthavil sanguda nEmu zhangasu
rArkaL sirampodi yAyvi dumcheyal – kaNdavElA
senthinai yinpuna mErku Rinjiyil
vAzhu miLangodi yALpa thangaLil
vanthuva Nangini NEmu kampeRu
thALa zhakangaiyin vElu danpuvi
semponi nampala mEla kampira
kAra samanthira meetha marntharuL – thambirAnE.
English Easy Version
mantharam en kuvadu Ar thanangaLil
Aram azhunthidavE maNam peRu
chanthana kunguma sERudan pani
neerkaL kalanthiduvAr mukam sasi
manju uRaiyum kuzhalAr saram kayal
vAL vizhi sem kazhu neer thathumpiya – konthaLa Olai
vaN chuzhalum seviyAr nudangu idai
vAda nadam purivAr marunthidu
vinjaiyar konjiduvAr iLam kuyil
mOkana vanjiyar pOl akam peRa
vanthavar entha u(U)r neer aRinthavar
pOla irunthathu enA mayangida – in sol kURic
chunthara vangaNamAy nerungi ni(nee)r
vArum enum padi Ala akam kodu
paN sarasam koLa vENum enRu avar
sEma vaLam thuRu thEn arunthida
thunRu pon angaiyin meethu kaNdu
avarOdu vizhainthumE kUdi inpuRu – mangaiyOrAl
thunpam mudangu azhi nOy sirangodu
see puzhuvum jalam Odu iRangiya
puN kudavan kadiyOdu iLam sa(n)ni
cUlai mikunthidavE paRanthu udal
thunjiya man pathiyE pukum thuyar
Azhi vidumpadi seer patham peRu – vinjai thArAy
anthara thunthumiyOdu udan kaNa
nAthar pukazhnthida vEtha vinjaiyar
inthira chanthirar cUriyan kavi
vANar thavam puliyOr pathanjali
ampuyan am thirumAlodu inthirai
vANi aNangu avaLOdu arum thavar – thangaL mAthar
ampara rampaiyarOdu udan thikazh
mA urakan puviyOrkaL mangaiyar
am puvi mangaiyarOdu arunthathi
mAthar pukazhnthidavE nadam puri
am puya sem pathar mAdu akam siva
kAma savunthariyAL payanthu aruL – kantha vELE
thinthimi thinthimi thOthiminthimi
theethathi thinthitha theethithinthimi
thanthana thanthana nAthananthana
thAnathananthananA enum paRai
sem thavil sangudanE muzhanga
asurArkaL siram podiyAy vidum seyal – kaNda vElA
sem thinaiyin punam Er kuRinjiyil
vAzhum iLam kodiyAL pathangaLil
vanthu vaNangi niNE mukam peRu
thAL azhaka amkaiyin vEludan puvi
sem po(n)nin ampalam mEl akam pira
kAra sa manthira meethu amarnthu – aruL thambirAnE.