திருப்புகழ் 458 கதித்துப் பொங்கலு (சிதம்பரம்)

Thiruppugal 458 Kadhiththuppongalu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத் – தனதான

கதித்துப்பொங் கலுக்கொத்துப்
பணைத்துக்கொம் பெனத்தெற்றிக்
கவித்துச்செம் பொனைத்துற்றுக் – குழலார்பின்

கழுத்தைப்பண் புறக்கட்டிச்
சிரித்துத்தொங் கலைப்பற்றிக்
கலைத்துச்செங் குணத்திற்பித் – திடுமாதர்

பதித்துத்தந் தனத்தொக்கப்
பிணித்துப்பண் புறக்கட்டிப்
பசப்பிப்பொன் தரப்பற்றிப் – பொருள்மாளப்

பறித்துப்பின் துரத்துச்சொற்
கபட்டுப்பெண் களுக்கிச்சைப்
பலித்துப்பின் கசுத்திப்பட் – டுழல்வேனோ

கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற்
கொதித்துச்சங் கரித்துப்பற்
கடித்துச்சென் றுழக்கித்துக் – கசுரோரைக்

கழித்துப்பண் டமர்க்குச்செப்
பதத்தைத்தந் தளித்துக்கைக்
கணிக்குச்சந் தரத்தைச்சுத் – தொளிர்வேலா

சிதைத்திட்டம் புரத்தைச்சொற்
கயத்தைச்சென் றுரித்துத்தற்
சினத்தக்கன் சிரத்தைத்தட் – சிவனார்தஞ்

செவிக்குச்செம் பொருட்கற்கப்
புகட்டிச்செம் பரத்திற்செய்த்
திருச்சிற்றம் பலச்சொக்கப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத் – தனதான

கதித்துப் பொங்கு அ(ல்)லுக்கு ஒத்துப்
பணைத்துக் கொம்பு எனத் தெற்றிக்
கவித்துச் செம் பொ(ன்)னைத் துற்றுக் – குழலார் பின்

கழுத்தைப் பண்புறக் கட்டிச்
சிரித்துத் தொங்கலைப் பற்றிக்
கலைத்துச் செம் குணத்தில் பித்து – இடு மாதர்

பதித்து தம் தனத்து ஒக்கப்
பிணித்துப் பண்புறக் கட்டிப்
பசப்பிப் பொன் தரப் பற்றிப் – பொருள் மாளப்

பறித்துப் பின் துரத்துச் சொல்
கபட்டுப் பெண்களுக்கு இச்சைப்
பலித்துப் பின் கசுத்திப் பட்டு – உழல்வேனோ

கதித்துக் கொண்டு எதிர்த்துப் பின்
கொதித்துச் சங்கரித்துப் பல்
கடித்துச் சென்று உழக்கித் துக்க – அசுரோரைக்

கழித்து பண்டு அமர்க்குச் செம்
பதத்தைத் தந்து அளித்துக் கைக்கு
அணிக் குச்சம் தரத்து ஐச் சுத்த – ஒளிர் வேலா

சிதைத்திட்டு அம்புரத்தைச் சொல்
கயத்தைச் சென்று உரித்துத் தன்
சினத் தக்கன் சிரத்தைத் தள் – சிவனார்தம்

செவிக்குச் செம் பொருள் கற்கப்
புகட்டிச் செம் பரத்தில் செய்த்
திருச்சிற்றம்பலச் சொக்கப் – பெருமாளே.

English

kathiththuppong kalukkoththup
paNaiththukkom penaththetRik
kaviththucchem ponaiththutRuk – kuzhalArpin

kazhuththaippaN puRakkattic
chiriththuththong kalaippatRik
kalaiththuccheng kuNaththiRpith – thidumAthar

pathiththuththan thanaththokkap
piNiththuppaN puRakkattip
pasappippon tharappatRip – poruLmALap

paRiththuppin thuraththucchoR
kapattuppeN kaLukkicchaip
paliththuppin kasuththippat – tuzhalvEnO

kathiththukkoN dethirththuppiR
kothiththucchang kariththuppaR
kadiththucchen Ruzhakkiththuk – kasurOraik

kazhiththuppaN damarkkucchep
pathaththaiththan thaLiththukkaik
kaNikkucchan tharaththaicchuth – thoLirvElA

sithaiththittam puraththaicchoR
kayaththaicchen RuriththuththaR
chinaththakkan siraththaiththat – sivanArtham

chevikkucchem porutkaRkap
pukatticchem paraththiRcheyth
thiruchchitRam palacchokkap – perumALE.

English Easy Version

kathiththup pongku a(l)lukku oththup
paNaiththuk kompu enath thetRik
kaviththuc chem po(n)naith thutRuk – kuzhalAr pin

kazhuththaip paNpuRak kattic
chiriththuth thongkalaip patRik
kalaiththuc chem kuNaththil piththu – idu mAthar

pathiththuth tham thanaththu okkap
piNiththup paNpuRak kattip
pasappip pon tharap patRip – poruL mALap

paRiththup pin thuraththuc chol
kapattup peNkaLukku icchaip
paliththup pin kasuththip pattu – uzhalvEnO

kathiththuk koNdu ethirththup pin
kothiththuc changkariththup pal
kadiththuc chenRu uzhakkith thukka – asurOraik

kazhiththu paNdu amarkkuc chem
pathaththaith thanthu aLiththuk kaikku
aNik kuccham tharaththu aic chuththa – oLir vElA

sithaiththittu ampuraththaic chol
kayaththaic chenRu uriththuth than
sinath thakkan siraththaith thaL – sivanArtham

sevikkuc chem poruL kaRkap
pukattic chem paraththil seyth
thiruchchitRampalac chokkap – perumALE.