Thiruppugal 459 Siriththuchchangkoli
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தத் தந்தன தானன தானன
தனத்தத் தந்தன தானன தானன
தனத்தத் தந்தன தானன தானன – தனதான
சிரித்துச் சங்கொளி யாமின லாமென
வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு
செணத்திற் சம்பள மேபறி காரிகள் – சிலபேரைச்
சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல்
புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை
திருத்திப் பண்குழ லேய்முகி லோவிய – மயில்போலே
அருக்கிப் பண்புற வேகலை யால்முலை
மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க
ளளித்துப் பொன்குயி லாமென வேகுரல் – மிடறோதை
அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி
மினுக்கிச் சந்தன வாசனை சேறுட
னமைத்துப் பஞ்சணை மீதணை மாதர்க – ளுறவாமோ
இரைத்துப் பண்டம ராவதி வானவ
ரொளித்துக் கந்தசு வாமிப ராபர
மெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் தூள்பட – அசுரார்கள்
இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ
டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ
டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு – மயில்வீரா
சிரித்திட் டம்புர மேமத னாருட
லெரித்துக் கண்டக பாலியர் பாலுறை
திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல் – கியசேயே
திருச்சித் தந்தனி லேகுற மானதை
யிருத்திக் கண்களி கூர்திக ழாடக
திருச்சிற் றம்பல மேவியு லாவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தத் தந்தன தானன தானன
தனத்தத் தந்தன தானன தானன
தனத்தத் தந்தன தானன தானன – தனதான
சிரித்துச் சங்கு ஒளியாம் மி(ன்)னலாம் என
உருக்கிக் கொங்கையினால் உற மேல் விழு
செணத்தில் சம்பளமே பறி காரிகள் – சில பேரைச்
சிமிட்டிக் கண்களினால் உறவே மயல்
புகட்டிச் செம் துகிலால் வெளியாய் இடை
திருத்திப் பண் குழல் ஏய் முகில் ஓவிய – மயில் போலே
அருக்கி பண்பு உறவே கலையால் முலை
மறைத்துச் செம் துவர் வாய் அமுது ஊறல்கள்
அளித்துப் பொன் குயிலாம் எனவே குரல் – மிடறு ஓதை
அசைத்து கொந்தள ஓலைகள் ஆர் பணி
மினுக்கிச் சந்தன வாசனை சேறுடன்
அமைத்துப் பஞ்சு அணை மீது அணை மாதர்கள் – உறவாமோ
இரைத்துப் பண்டு அமராவதி வானவர்
ஒளித்துக் கந்த சுவாமி பராபரம்
எனப் பட்டு எண்கிரி ஏழ் கடல் தூள் பட – அசுரார்கள்
இறக்க சிங்கம் தேர் பரி யானையொடு
உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு
இரத்தச் சங்கமது ஆடிட வேல் விடு – மயில் வீரா
சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல்
எரித்துக் கண்ட கபாலியர் பால் உறை
திகழ் பொன் சுந்தரியாள் சிவகாமி – நல்கிய சேயே
திருச் சித்தம் தனிலே குற மான் அதை
இருத்திக் கண் களி கூர் திகழ் ஆடக
திருச் சிற்றம்பலம் மேவி உலாவிய – பெருமாளே.
English
chiriththuc changoLi yAmina lAmena
vurukkik kongaiyi nAluRa mElvizhu
seNaththiR champaLa mEpaRi kArikaL – silapEraic
chimittik kaNkaLi nAluRa vEmayal
pukattic chenthuki lAlveLi yAyidai
thiruththip paNkuzha lEymuki lOviya – mayilpOlE
arukkip paNpuRa vEkalai yAlmulai
maRaiththuc chenthuvar vAyamu thURalka
LaLiththup ponkuyi lAmena vEkural – midaROthai
asaiththuk konthaLa vOlaika LArpaNi
minukkic chanthana vAsanai chERuda
namaiththup panjaNai meethaNai mAtharka – LuRavAmO
iraiththup paNdama rAvathi vAnava
roLiththuk kanthasu vAmipa rApara
menappat teNkiri Ezhkadal thULpada – asurArkaL
iRakkac chingama thErpari yAnaiyo
duRuppiR chengazhu kOrikaL kULiyo
diraththac changama thAdida vElvidu – mayilveerA
chiriththit tampura mEmatha nAruda
leriththuk kaNdaka pAliyar pAluRai
thikazhppoR chunthari yALsiva kAminal – kiyasEyE
thiruchchith thanthani lEkuRa mAnathai
yiruththik kaNkaLi kUrthika zhAdaka
thiruchchit Rampala mEviyu lAviya – perumALE.
English Easy Version
chiriththuc changu eLiyAm mi(n)nalAm ena
urukkik kongaiyinAl uRa mEl vizhu
seNaththil sampaLamE paRi kArikaL – sila pEraic
chimittik kaNkaLinAl uRavE mayal
pukattic chem thukilAl veLiyAy idai
thiruththip paN kuzhal Ey mukil Oviya – mayil pOlE
arukki paNpu uRavE kalaiyAl mulai
maRaiththuc chem thuvar vAy amuthu
URalkaL aLiththup pon kuyilAm enavE kural – midaRu Othai
Asaiththu konthaLa OlaikaL Ar paNi
minukkic chanthana vAsanai sERudan
amaiththup panju aNai meethu aNai mAtharkaL – uRavAmO
iraiththup paNdu amarAvathi vAnavar
eLiththuk kantha suvAmi parAparam
enap pattu eNkiri Ezh kadal thUL pada – asurArkaL
iRakka singam thEr pari yAnaiyodu
uRuppil sem kazhuku orikaL kULiyodu
iraththac changamathu Adida vEl vidu – mayil veerA
chiriththittu am puramE mathanAr udal
eriththuk kaNda kapAliyar pAl uRai
thikazh pon sunthariyAL sivagAmi – nalkiya sEyE
thiruc chiththam thanilE kuRa mAn athai
iruththik kaN kaLi kUr thikazh Adaka
thiruc chiRRampalam mEvi ulAviya – perumALE.