திருப்புகழ் 460 தத்தையென்று (சிதம்பரம்)

Thiruppugal 460 Thaththaiyenroppidu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன – தந்ததான

தத்தையென் றொப்பிடுந் தோகைநட் டங்கொளுவர்
பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள்
சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை – யென்பநீலச்

சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ
டொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர்
சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர் – சங்கமாதர்

சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர்
முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர்
சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் – விஞ்சையோர்பால்

தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை
விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு
துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி – யெந்தநாளோ

குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு
பொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர்
கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி – கொண்டவேலா

கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி
பத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளி
கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி – மங்கைபாலா

சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர
செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி
சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு – மெங்கள்கோவே


சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்
ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில்
தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன – தந்ததான

தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர்
பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள்
சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை – என்ப நீலச்

சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு
ஒற்றி நன் சித்திரம் போல எத்தும் பறியர்
சக் க(ள்)ளம் சக்கடம் சாதி துக்க கொலையர் – சங்க மாதர்


சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர்
முன் பணம் கைக் கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர்
சொக்கி இடும்புக் கடன் சேரு மட்டும் தனகும் – விஞ்சையோர் பால்

தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை
விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு
துப்பு அடங்கிப் படும் சோரனுக்கும் பதவி – எந்த நாளோ

குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு
பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர் கொற்றமும் கட்டியம் பாட நிர்த்தம் பவுரி – கொண்ட வேலா

கொற்றர் பங்கு உற்ற சிந்தாமணிச் செம் குமரி
பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி
கொட்(கு) புரம் தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி – மங்கை பாலா

சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர
செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி
சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் – எங்கள் கோவே

சிற் பரன் தற்பரன் சீர் திகழ்த் தென் புலியூர்
ருத்திரன் பத்திர அம் சூல(ம்) கர்த்தன் சபையில்
தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் – தம்பிரானே.

English

thaththaiyen Roppidun thOkainat tangkoLuvar
paththirang katkayang karaiyop punguzhalkaL
sacchaiyang kecchaiyun thALavoth thumpathumai – yenpaneelac

chakkaram poRkudam pAliruk kunthanamo
dotRinan chiththiram pOlaeth thumpaRiyar
sakkaLanj chakkadanj chAthithuk kangkolaiyar – sangamAthar

suththidum piththidum cUthukaR kumchathiyar
muRpaNang kaikkodun thArumit tangkoLuvar
chokkidum pukkadan sErumat tunthanakum – vinjaiyOrpAl

thokkidung kakkalunj cUlaipak kampiLavai
vikkalun thukkamum seethapith thangaLkodu
thuppadang kippadunj chOranuk kumpathavi – yenthanALO

kuththirang katRasaN dALarsath thangkuvadu
pottezhun thittunin RAdaet tanthikaiyar
kotRamung kattiyam pAdanirth thampavuri – koNdavElA

kotRarpang kutRasin thAmaNic chengkumari
paththaran putRaen thAyezhiR konjukiLi
kotpuran thokkaven thAdavit tangivizhi – mangaipAlA

chiththiram poRkuRam pAvaipak kampuNara
chettiyen Reththivan thAdinirth thangaLpuai
chiRchitham poRpuyanj chEramut RumpuNaru – mengaLkOvE

chiRparan thaRparan seerthikazhth thenpuliyur
ruththiran paththiranj cUlakarth thansapaiyil
thiththiyen Roththinin RAduchit Rampalavar – thambirAnE.

English Easy Version

thaththai enRu oppidum thOkai nattam koLuvar
paththiram kaN kayal kAri oppum kuzhalkaL
sacchai am kecchaiyum thALa oththum – pathumai enpa neelac


chakkaram pon kudam pAl irukkum thanamodu
otRi nan chiththiram pOla eththum paRiyar
chak ka(L)Lam chakkadam sAthi thukka kolaiyar – sanga mAthar

suththidum piththidum cUthu kaRkum sathiyar
mun paNam kaik kodu unthu Arum ittam koLuvar
chokki idumpuk kadan sEru mattum thanakum – vinjaiyOr pAl

thokkidum kakkalum cUlai pakkam piLavai
vikkalum thukkamum seetha piththangaL kodu
thuppu adangip padum chOranukkum pathavi – entha nALO

kuththiram katRa saNdALar saththa am kuvadu
pottu ezhunthittu ninRu Ada ettu am thikaiyar
kotRamum kattiyam pAda nirththam pavuri – koNda vElA

kotRar pangu utRa sinthAmaNic chem kumari
paththar anputRa em thAy ezhil konju kiLi
kot(ku) puram thokka venthu Adavittu angi vizhi – mangai pAlA

chiththiram pon kuRam pAvai pakkam puNara
chetti enRu eththi vanthu Adi nirththangaL puri
chil chitham pon puyam sEra mutRum puNarum – engaL kOvE


chiR paran thaRparan seer thikazhth then puliyUr
ruththiran paththira am cUla(m) karththan sapaiyil
thiththi enRu oththi ninRu Adu chitRampalavar – thambirAnE.