திருப்புகழ் 461 தனத்தில் குங்குமத்தை (சிதம்பரம்)

Thiruppugal 461 Thanaththilkungkumaththai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந் – தனதான

தனத்திற்குங் குமத்தைச்சந்
தனத்தைக்கொண் டணைத்துச்சங்
கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன்
தனிற்கொத்துந் தரித்துச்சுந்
தரத்திற்பண் பழித்துக்கண்
சுழற்றிச்சண் பகப்புட்பங் – குழல்மேவித்

தரத்தைக்கொண் டசைத்துப்பொன்
தகைப்பட்டுந் தரித்துப்பின்
சிரித்துக்கொண் டழைத்துக்கொந்
தளத்தைத்தண் குலுக்கிச்சங்
கலப்புத்தன் கரத்துக்கொண்
டணைத்துச்சம் ப்ரமித்துக்கொண் – டுறவாடிப்

புனித்தப்பஞ் சணைக்கட்டிண்
படுத்துச்சந் தனப்பொட்டுங்
குலைத்துப்பின் புயத்தைக்கொண்
டணைத்துப்பின் சுகித்திட்டின்
புகட்டிப்பொன் சரக்கொத்துஞ்
சிதைப்பப்பொன் தரப்பற்றும் – பொதுமாதர்

புணர்ப்பித்தும் பிடித்துப்பொன்
கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன்
திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண்
சிறுப்பப்புண் பிடித்தப்புண்
புடைத்துக்கண் பழுத்துக்கண்
டவர்க்குக்கண் புதைப்பச்சென் – றுழல்வேனோ

சினத்துக்கண் சிவப்பச்சங்
கொலிப்பத்திண் கவட்டுச்செங்
குவட்டைச்சென் றிடித்துச்செண்
டரைத்துக்கம் பிடிக்கப்பண்
சிரத்தைப்பந் தடித்துக்கொண்
டிறைத்துத்தெண் கடற்றிட்டுங் – கொளைபோகச்

செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங்
களித்துக்கொண் டளிப்புட்பஞ்
சிறக்கப்பண் சிரத்திற்கொண்
டிறைத்துச்செம் பதத்திற்கண்
திளைப்பத்தந் தலைத்தழ்த்தம்
புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண் – புயவேளே

பனித்துட்கங் கசற்குக்கண்
பரப்பித்தன் சினத்திற்றிண்
புரத்தைக்கண் டெரித்துப்பண்
கயத்தைப்பண் டுரித்துப்பன்
பகைத்தக்கன் தவத்தைச்சென்
றழித்துக்கொன் றடற்பித்தன் – தருவாழ்வே

படைத்துப்பொன் றுடைத்திட்பன்
தனைக்குட்டும் படுத்திப்பண்
கடிப்புட்பங் கலைச்சுற்றும்
பதத்தப்பண் புறச்சிற்றம்
பலத்திற்கண் களித்தப்பைம்
புனத்திற்செங் குறத்திப்பெண் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந் – தனதான

தனத்தில் குங்குமத்தைச் சந்
தனத்தைக் கொண்டு அணைத்துச்
சங்கிலிக் கொத்தும் பிலுக்குப் பொன்
தனில் கொத்தும் தரித்துச்
சுந்தரத்தில் பண்பு அழித்து கண்
சுழற்றிச் சண்பகப் புட்பம் – குழல் மேவித்

தரத்தைக் கொண்டு அசைத்துப் பொன்
தகைப் பட்டும் தரித்துப் பின்
சிரித்துக் கொண்டு அழைத்துக்
கொந்தளத்தைத் தண் குலுக்கி சங்கு
அலப்புத் தன் கரத்துக் கொண்டு
அணைத்துச் சம்ப்ரமித்துக் கொண்டு – உறவாடிப்

புனித்தப் பஞ்சு அணைக் கண்
திண் படுத்துச் சந்தனப் பொட்டும்
குலைத்துப் பின் புயத்தைக் கொண்டு
அணைத்து பின் சுகித்திட்டு இன்பு
கட்டிப் பொன் சரக் கொத்தும்
சிதைப்பப் பொன் தரப்பற்றும் – பொது மாதர்

புணர்ப் பித்தும் பிடித்துப் பொன்
கொடுத்துப் பின் பிதிர்ச் சித்தன்
திணிக் கட்டும் சிதைத்துக் கண்
சிறுப்பப் புண் பிடித்த அப்புண்
புடைத்துக் கண் பழுத்துக்
கண்டவர்க்குக் கண் புதைப்பச் சென்று – உழல்வேனோ

சினத்துக் கண் சிவப்பச் சங்கு
ஒலிப்பத் திண் கவட்டுச் செம்
குவட்டைச் சென்று இடித்துச் செண்
தரைத் துக்கம் பிடிக்கப் பண்
சிரத்தைப் பந்தடித்துக் கொண்டு
இறைத்துத் தெண் கடல் திட்டும் – கொ(ள்)ளை போக

செழித்துப் பொன் சுரர் சுற்றம்
களித்துக் கொண்டு அளிப் புட்பம்
சிறக்கப் பண் சிரத்தில் கொண்டு
இறைத்துச் செம் பதத்தில் கண்
திளைப்பத் தந்து தலைத் தழ்த்து அம்
புகழ்ச் செப்பும் சயத்துத் திண் – புய வேளே

பனித்து உட்க அங்கசற்குக் கண்
பரப்பித் தன் சினத்தில் திண்
புரத்தைக் கண்டு எரித்துப் பண்
கயத்தைப் பண்டு உரித்துப்பன்
பகைத் தக்கன் தவத்தைச் சென்று
அழித்துக் கொன்ற அடல் பித்தன் – தரு வாழ்வே

படைத் துப்பு ஒன்றுடைத் திட்பன்
தனைக் குட்டும் படுத்திப் பண்
கடிப் புட்பம் கலைச் சுற்றும்
பதத்த பண்புறச் சிற்றம்பலத்தின்
கண் களித்தப் பைம்
புனத்தில் செம் குறத்திப் பெண் – பெருமாளே.

English

thanaththiRkung kumaththaicchan
thanaththaikkoN daNaiththucchang
kilikkoththum pilukkuppon
thaniRkoththun thAiththucchun
tharaththiRpaN pazhiththukkaN
chuzhatRicchaN pakapputpang – kuzhalmEvith

tharaththaikkoN dasaiththuppon
thakaippattun thariththuppin
siriththukkoN dazhaiththukkon
thaLaththaiththaN kulukkicchang
kalappuththan karaththukkoN
daNaiththuccham pramiththukkoN – duRavAdip

puniththappan jaNaikkattiN
paduththucchan thanappottung
kulaiththuppin puyaththaikkoN
daNaiththuppin sukiththittin
pukattippon sarakkoththunj
chithaippappon tharappatRum – pothumAthar

puNarppiththum pidiththuppon
koduththuppin pithircchiththan
thiNikkattunj chithaiththukkaN
chiRuppappuN pidiththappuN
pudaiththukkaN pazhuththukkaN
davarkkukkaN puthaippacchen – RuzhalvEnO

sinaththukkaN sivappacchan
golippaththiN kavattuccheng
kuvattaicchen RidiththuccheN
daraiththukkam pidikkappaN
siraththaippan thadiththukkoN
diRaiththuththeN kadatRittung – koLaipOkac

chezhiththuppon surarcchutRang
kaLiththukkoN daLipputpanj
chiRakkappaN siraththiRkoN
diRaiththucchem pathaththiRkaN
thiLaippaththan thalaiththazhththam
pukazhccheppunj chayaththuththiN – puyavELE

paniththutkang kasaRkukkaN
parappiththan sinaththitRiN
puraththaikkaN deriththuppaN
kayaththaippaN duriththuppan
pakaiththakkan thavaththaicchen
Razhiththukkon RadaRpiththan – tharuvAzhvE

padaiththuppon Rudaiththitpan
thanaikkuttum paduththippaN
kadipputpang kalaicchutRum
pathaththappaN puRacchitRam
palaththiRkaN kaLiththappaim
punaththiRcheng kuRaththippeN – perumALE.

English Easy Version

thanaththil kungumaththaic chantha
naththaik koNdu aNaiththuc changilik
koththum pilukkup pon
thanil koththum thariththuc
chuntharaththil paNpu azhiththu kaN
chuzhatRic chaNpakap putpam – kuzhal mEvith

tharaththaik koNdu asaiththup pon
thakaip pattum thariththup pin
siriththuk koNdu azhaiththuk kontha
Laththaith thaN kulukki sangu
alapputh than karaththuk koNdu
aNaiththuc champramiththuk koNdu – uRavAdip

puniththap panju aNaik kaN thiN
paduththuc chanthanap pottum
kulaiththup pin puyaththaik koNdu
aNaiththu pin sukiththittu inpu
kattip pon sarak koththum
chithaippap pon tharappatRum – pothu mAthar

puNarp piththum pidiththup pon
koduththup pin pithirc chiththan
thiNik kattum chithaiththuk kaN
chiRuppap puN pidiththa appuN
pudaiththuk kaN pazhuththuk
kaNdavarkkuk kaN puthaippac chenRu – uzhalvEnO

sinaththuk kaN sivappac changu
olippath thiN kavattuc chem
kuvattaic chenRu idiththuc cheN
tharaith thukkam pidikkap paN
siraththaip panthadiththuk koNdu
iRaiththuth theN kadal thittum – ko(L)Lai pOka

chezhiththup pon surar chutRam
kaLiththuk koNdu aLip putpam
siRakkap paN siraththil koNdu
iRaiththuc chem pathaththil kaN
thiLaippath thanthu thalaith thazhththu am
pukazhc cheppum sayaththuth thiN – puya vELE

paniththu utka angasaRkuk kaN
parappith than sinaththil thiN
puraththaik kaNdu eriththup paN
kayaththaip paNdu uriththuppan
pakaith thakkan thavaththaic chenRu
azhiththuk konRa adal piththan – tharu vAzhvE

padaith thuppu onRudaith thitpan
thanaik kuttum paduththip paN
kadip putpam kalaic chutRum
pathaththa paNpuRac chitRam
palaththin kaN kaLiththap paim
punaththil chem kuRaththip peN – perumALE.