திருப்புகழ் 462 திருடிகள் இணக்கி (சிதம்பரம்)

Thiruppugal 462 Thirudigalinakki

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனத்தத் தந்த தந்தன
தனதன தனத்தத் தந்த தந்தன
தனதன தனத்தத் தந்த தந்தன – தனதான

திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி
நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள்
சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் – சதிகாரர்

செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள்
அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள்
செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் – வெகுமோகக்


குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக
ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள்
குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் – விழியாலே

கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள்
நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள்
குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக – ளுறவாமோ

இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு
மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு
மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட – வருசூரர்

இபமொடு வெதித்தச் சிங்க மும்பல
இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட
இவுளியி ரதத்துற் றங்க மங்கிட – விடும்வேலா

அரிகரி யுரித்திட் டங்க சன்புர
மெரிதர நகைத்துப் பங்க யன்சிர
மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ – ரருள்கோனே


அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல்
குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற
அழகிய திருச்சிற் றம்ப லம்புகு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனத்தத் தந்த தந்தன
தனதன தனத்தத் தந்த தந்தன
தனதன தனத்தத் தந்த தந்தன – தனதான

திருடிகள் இணக்கிச் சம்பளம் பறி
நடுவிகள் மயக்கிச் சங்க(ம்) உண்கிகள்
சிதடிகள் முலைக் கச்சு உம்பல் கண்டிகள் – சதி காரர்

செவிடிகள் மதப்பட்டு உங்கு(ம்) குண்டிகள்
அசடிகள் பிணக்கிட்டும் புறம்பிகள்
செழுமிகள் அழைத்து இச்சம் கொ(ள்)ளும் செ(ய்)யர் – வெகு மோகக்

குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள்
உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள்
குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் – விழியாலே

கொளுவிகள் மினுக்குச் சங்கு இரங்கிகள்
நடனமு(ம்) நடித்திட்டு ஒங்கு சண்டிகள்
குணம் அதில் முழுச் சுத்த அசங்க்ய சங்கிகள் – உறவு ஆமோ

இருடியர் இனத்து உற்று உம் பதம் கொ(ள்)ளும்
மறையவன் நிலத் தொக்கும் சுகம் பெறும்
இமையவர் இனக் கட்டும் குலைந்திட – வரு சூரர்

இபமொடு வெதித்தச் சிங்கமும் பல
இரதமொடு எ(ந்)தத் திக்கும் பிளந்திட
இவுளி இரதத்து உற்று அங்க(ம்) மங்கிட – விடும் வேலா

அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம்
எரிதர நகைத்துப் பங்கயன் சிரம்
அளவொடும் அறுத்துப் பண்டு அணிந்தவர் – அருள் கோவே

அமரர் த(ம்) மகட்கு இட்டம் புரிந்து நல்
குறவர் த(ம்) மகள் பக்கம் சிறந்து உற
அழகிய திருச் சிற்றம்பலம் புகு – பெருமாளே.

English

thirudika LiNakkic champa LampaRi
naduvikaL mayakkic changa muNkikaL
sithadikaL mulaikkac chumpal kaNdikaL – sathikArar

sevidikaL mathappat tungu kuNdikaL
asadikaL piNakkit tumpu RampikaL
sezhumika Lazhaiththic chango Lumcheyar – vekumOkak

kurudikaL nakaiththit tampu lampuka
LuthadikaL kaNakkit tumpi NangikaL
kusalikaL maruththit tumko dunguNar – vizhiyAlE

koLuvikaL minukkuc changi rangikaL
nadanamu nadiththit tongu saNdikaL
kuNamathil muzhucchuth thasankya sangika – LuRavAmO

irudiya rinaththut Rumpa thamkoLu
maRaiyava nilaththok kumsu kampeRu
mimaiyava rinakkat tungu lainthida – varucUrar

ipamodu vethiththac chinga mumpala
irathamo dethaththik kumpi Lanthida
ivuLiyi rathaththut Ranga mangida – vidumvElA

arikari yuriththit tanga sanpura
merithara nakaiththup panga yansira
maLavodu maRuththup paNda Ninthava – raruLkOnE

amarartha makatkit tampu rinthunal
kuRavartha makatpak kamchi RanthuRa
azhakiya thiruchchit Rampa lampuku – perumALE.

English Easy Version

thirudikaL iNakkic champaLam paRi
naduvikaL mayakkic changa(m) uNkikaL
sithadikaL mulaik kacchu umpal kaNdikaL – sathi kArar

sevidikaL mathappattu ungu(m) kuNdikaL
asadikaL piNakkittum puRampikaL
sezhumikaL azhaiththu iccham ko(L)Lum se(y)yar – veku mOkak

kurudikaL nakaiththu ittam pulampu kaL
uthadikaL kaNakkittum piNangikaL
kusalikaL maruththu ittum kodum kuNar – vizhiyAlE

koLuvikaL minukkuc changu irangikaL
nadanamu(m) nadiththittu ongu saNdikaL
kuNam athil muzhuc chuththa asankya sangikaL – uRavu AmO

irudiyar inaththu utRu um patham ko(L)Lum
maRaiyavan nilath thokkum sukam peRum
imaiyavar inak kattum kulainthida – varu cUrar

ipamodu vethiththac chingamum pala
irathamodu e(n)thath thikkum piLanthida
ivuLi irathaththu utRu anga(m) mangida – vidum vElA

ari kari uriththittu angasan puram
erithara nakaiththup pangayan siram
aLavodum aRuththup paNdu aNinthavar – aruL kOvE

amarar tha(m) makatku ittam purinthu nal
kuRavar tha(m) makaL pakkam siRanthu uRa
azhakiya thiruc chitRampalam puku – perumALE.