திருப்புகழ் 463 கொந்தரம் குழல் (சிதம்பரம்)

Thiruppugal 463 Kondharamkuzhal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன – தந்ததான

கொந்த ரங்குழ லிந்து வண்புரு
வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை
கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி – துண்டமாதர்

கொந்த ளங்கதி ரின்கு லங்களி
னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி
கொண்ட நண்பித ழின்சு கங்குயி – லின்சொல்மேவுந்

தந்த வந்தர ளஞ்சி றந்தெழு
கந்த ரங்கமு கென்ப பைங்கழை
தண்பு யந்தளி ரின்கு டங்கைய – ரம்பொனாரந்

தந்தி யின்குவ டின்த னங்களி
ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர்
தங்க டம்படி யுங்க வண்டிய – சிந்தையாமோ

மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்
தங்க டைந்தவ னஞ்சு மங்குலி
மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற – எந்தவாழ்வும்

வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந
டங்கொ ளுந்திரு மங்கை பங்கினன்
வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி – கண்டமாயோன்

உந்தி யின்புவ னங்க ளெங்கும
டங்க வுண்டகு டங்கை யன்புக
ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் – பங்கின்மேவும்

உம்ப லின்கலை மங்கை சங்கரி
மைந்த னென்றய னும்பு கழ்ந்திட
வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன – தந்ததான

கொந்தர் அம் குழல் இந்து வண்
புருவங்கள் கண் கயலும் சரம் கணை
கொண்டு அரம்பையர் அந்தமும் சசி – துண்டம் மாதர்

கொந்தளம் கதிரின் குலங்களில்
உஞ்சு உழன்று இரசம் பலம் கனி
கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் – சொல் மேவும்

தந்த(ம்) அம் தரளம் சிறந்து எழு
கந்தரம் கமுகு என்ப பைங் கழை
தண் புயம் தளிரின் குடங்கையர் – அம் பொன் ஆரம்

தந்தியின் குவடின் தனங்கள்
இரண்டையும் குலை கொண்டு விண்டவர்
தம் கடம் படியும் கவண் தீய – சிந்தையாமோ

மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம்
கடைந்தவன் அஞ்சு மங்குலி
மந்திரம் செல்வமும் சுகம் பெற – எந்த வாழ்வும்

வந்த அரம்பையர் எணும் பகிர்ந்து
நடம் கொளும் திரு மங்கை பங்கினன்
வண்டர் லங்கை உளன் சிரம் பொடி – கண்ட மாயோன்

உந்தியில் புவனங்கள் எங்கும்
அடங்க உண்ட குடங்கையன் புகழ்
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் – பங்கின் மேவும்

உம்பலின் கலை மங்கை சங்கரி
மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் – தம்பிரானே.

English

kontha rangkuzha linthu vaNpuru
vangaL kaNkaya lunja rangkaNai
koNda rampaiya rantha mumsasi – thuNdamAthar

kontha Langkathi rinku langaLi
numchu zhanRira sampa langkani
koNda naNpitha zhinsu kangkuyi – linsolmEvun

thantha vanthara Lamchi Ranthezhu
kantha rangamu kenpa paingazhai
thaNpu yanthaLi rinku dangaiya – ramponAran

thanthi yinkuva dintha nangaLi
raNdai yungkulai koNdu viNdavar
thanga dampadi yunga vaNdiya – sinthaiyAmO

mantha rangkada lunju zhanRamir
thangka dainthava nanju manguli
manthi ramchelva munju kampeRa – enthavAzhvum

vantha rampaiye Numpa kirnthuna
dangko Lunthiru mangai panginan
vaNdar langaiyu Lansi rampodi – kaNdamAyOn

unthi yinpuva nanga Lenguma
danga vuNdaku dangai yanpuka
zhoNpu rampodi kaNda enthaiyar – panginmEvum

umpa linkalai mangai sangari
maintha nenRaya numpu kazhnthida
voNpa ranthiru vampa lanthikazh – thambirAnE.

English Easy Version

konthar am kuzhal inthu vaN
puruvangaL kaN kayalum saram kaNai
koNdu arampaiyar anthamum sasi – thuNdam mAthar

konthaLam kathirin kulangaLil
umchu uzhanRu irasam palam kani
koNda naNpu ithazhin sukam – kuyilin sol mEvum

thantha(m) am tharaLam siRanthu ezhu
kantharam kamuku enpa paing kazhai
thaN puyam thaLirin kudangaiyar – am pon Aram

thanthiyin kuvadin thanangaL
iraNdaiyum kulai koNdu viNdavar
tham kadam padiyum kavaN theeya – sinthaiyAmO

mantharam kadalum chuzhanRu amirtham
kadainthavan anju manguli
manthiram selvamum sukam peRa – entha vAzhvum

vantha arampaiyar eNum pakirnthu
nadam koLum thiru mangai panginan
vaNdar langai uLan siram podi – kaNda mAyOn

unthiyil puvanangaL engum
adanga uNda kudangaiyan pukazh
oN puram podi kaNda enthaiyar – pangin mEvum

umpalin kalai mangai sangari
mainthan enRu ayanum pukazhnthida
oN param thiru ampalam thikazh – thambirAnE.