திருப்புகழ் 464 தியங்கும் சஞ்சலம் (சிதம்பரம்)

Thiruppugal 464 Thiyangkumsanjalam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்தந்தம் தனந்தந்தம்
தனந்தந்தம் தனந்தந்தம்
தனந்தந்தம் தனந்தந்தம் – தனதான

தியங்குஞ்சஞ் சலந்துன்பங்
கடந்தொந்தஞ் செறிந்தைந்திந்
த்ரியம்பந்தந் தருந்துன்பம் – படுமேழை

திதம்பண்பொன் றிலன்பண்டன்
தலன்குண்டன் சலன்கண்டன்
தெளிந்துன்றன் பழந்தொண்டென் – றுயர்வாகப்

புயங்கந்திங் களின்துண்டங்
குருந்தின்கொந் தயன்றன்கம்
பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் – சடைசூடி

புகழ்ந்துங்கண் டுகந்துங்கும்
பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும்
புலம்பும்பங் கயந்தந்தென் – குறைதீராய்

இயம்புஞ்சம் புகந்துன்றுஞ்
சுணங்கன்செம் பருந்தங்கங்
கிணங்குஞ்செந் தடங்கண்டுங் – களிகூர

இடும்பைங்கண் சிரங்கண்டம்
பதந்தந்தங் கரஞ்சந்தொன்
றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் – செயும்வேலா

தயங்கும்பைஞ் சுரும்பெங்குந்
தனந்தந்தந் தனந்தந்தந்
தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் – சிறுகூரா

தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ்
சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந்
தலந்துன்றம் பலந்தங்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனந்தந்தம் தனந்தந்தம்
தனந்தந்தம் தனந்தந்தம்
தனந்தந்தம் தனந்தந்தம் – தனதான

தியங்கும் சஞ்சலம் துன்பம்
கடம் தொந்தம் செறிந்து ஐந்து
இந்த்ரியம் பந்தம் தரும் துன்பம் – படும் ஏழை

திதம்பண்பு ஒன்று இலன் பண்டன்
தலன் குண்டன் சலன் கண்டன்
தெளிந்து உன்றன் பழம் தொண்டென்று – உயர்வாக

புயங்கம் திங்களின் துண்டம்
குருந்தின் கொந்து அயன் தன்கம்
பொருந்தும் கம் கலந்த அம் செம் – சடை சூடி

புகழ்ந்தும் கண்டு உகந்தும்
கும்பிடும் செம் பொன் சிலம்பு என்றும்
புலம்பும் பங்கயம் தந்து என் – குறை தீராய்

இயம்பும் சம்புகம் துன்றும்
சுணங்கன் செம் பருந்து அங்கு அங்கு
இணங்கும் செம் தடம் கண்டும் – களி கூர

இடும்பை கண் சிரம் கண்டம்
பதம் தம் தம் கரம் சந்து ஒன்று
எலும்பும் சிந்திடும் பங்கம் – செ(ய்)யும் வேலா

தயங்கும் பைம் சுரும்பு எங்கும்
தனந்தந்தந் தனந்தந்தந்
தடம் தண் பங்கயம் கொஞ்சும் – சிறு கூரா

தவம் கொண்டும் செபம் கொண்டும்
சிவம் கொண்டும் ப்ரியம் கொண்டும்
தலம் துன்று(ம்) அம்பலம் தங்கும் – பெருமாளே.

English

thiyangunjcan calanthunpam
kadanthonthanj ceRinthainthin
thriyampanthan tharunthunpam – padumEzhai

thithampaNpon RilanpaNdan
thalankuNdan salankaNdan
theLinthunRan pazhanthoNden – RuyarvAkap

puyanganthing kaLinthuNdang
kurunthinkon thayanRankam
porunthungkang kalanthansenj – cadaicUdi

pukazhnthungkaN dukanthungkum
pidunjcempon silampenRum
pulampumpan gayanthanthen – kuRaitheerAy

iyampunjcam pukanthunRunj
suNangansem parunthangam
kiNangunjcen thadangkaNdung – kaLikUra

idumpaingkaN sirangkaNdam
pathanthanthang karanjcanthon
Relumpunjcin – thidumpangam – seyumvElA

thayangumpainj curumpengun
thananthanthan thananthanthan
thadanthaNpan gayangkonjum – siRukUrA

thavangkoNdunj cepangkoNdum
sivangkoNdum priyangkoNdum
thalanthunRam palanthangum – perumALE.

English Easy Version

thiyangunj cancalan thunpam
kadan thonthanj ceRinthu ainth
inthriyam panthan tharunthunpam – padumEzhai

thithampaNpon RilanpaNdan
thalankuNdan salankaNdan
theLinthunRan pazhanthoNden – RuyarvAka

puyanganthing kaLinthuNdang
kurunthin konth ayanRan kam
porunthungkang kalanth an senj – cadaicUdi

pukazhnthungkaN dukanthung
kumpidunj cempon silampenRum
pulampum pangayan thanthen – kuRaitheerAy

iyampunj campukan thunRunj
suNangansem parunthu angamk
iNangunj cen thadang kaNdung – kaLikUra

idumpaingkaN sirangkaNdam
pathanthanthang karanjcanth
onRelumpunj cinthidum pangam – seyumvElA

thayangumpainj curumpengun
thananthanthan thananthanthan
thadanthaNpan gayangkonjum – siRukUrA

thavangkoNdunj cepangkoNdum
sivangkoNdum priyangkoNdum
thalanthunRam palanthangum – perumALE.