திருப்புகழ் 465 பருவம் பணை (சிதம்பரம்)

Thiruppugal 465 Paruvampanai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
தனனந் தனத்த தந்த – தனதான

பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு
பவளம் பதித்த செம்பொ – னிறமார்பிற்

படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த
பலவிஞ் சையைப்பு லம்பி – யழகான

புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று
புளகஞ் செலுத்தி ரண்டு – கயல்மேவும்

பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
பொடிகொண் டழிக்கும் வஞ்ச – ருறவாமோ

உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து
உறவும் பிடித்த ணங்கை – வனமீதே

ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து
ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த – மணிமார்பா

செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
சிவமஞ் செழுத்தை முந்த – விடுவோனே

தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு
திருவம் பலத்த மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
தனனந் தனத்த தந்த – தனதான

பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு எனத் திரண்டு
பவளம் பதித்த செம் பொன் – நிற மார்பில்

படரும் கனத்த கொங்கை மி(ன்)னல் கொந்தளித்து சிந்த
பல விஞ்சையைப் புலம்பி – அழகான

புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று
புளகம் செலுத்து இரண்டு – கயல் மேவும்

பொறிகள் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர் – உறவாமோ

உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து
உறவும் பிடித்த அணங்கை – வனம் மீதே

ஒளிர் கொம்பினைச் சவுந்தரிய உம்பலைக் கொணர்ந்து
ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த – மணி மார்பா

செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க
சிவம் அஞ்செழுத்தை முந்த – விடுவோனே

தினமும் களித்து செம் பொன் உலகம் துதித்து இறைஞ்சு
திரு அம்பலத்து அமர்ந்த – பெருமாளே.

English

paruvam paNaiththi raNdu karikom penaththi raNdu
pavaLam pathiththa sempo – niRamArpiR

padarum kanaththa kongai minalkon thaLiththu sintha
palavin jaiyaippu lampi – yazhakAna

puruvam suzhatRi yinthra thanuvan thuthiththa thenRu
puLakam seluththi raNdu – kayalmEvum

poRikaN suzhatRi rampa parisam payitRi manthra
podikoN dazhikkum vanja – ruRavAmO

uruvan thariththu kanthu karamum pidiththu vanthu
uRavum pidiththa Nangai – vanameethE

oLirkom pinaiccha vuntha riyavum palaikko Narnthu
oLirvan jiyaippu Narntha – maNimArpA

seruveng kaLaththil vantha avuNan theRiththu manga
sivaman jezhuththai muntha – viduvOnE

thinamum kaLiththu sempo nulakan thuthiththi Rainju
thiruvam palaththa marntha – perumALE.

English Easy Version

paruvam paNaiththu iraNdu kari kompu enath thiraNdu
pavaLam pathiththa sem pon – niRa mArpil

padarum kanaththa kongai mi(n)nal konthaLiththu sintha
pala vinjaiyaip pulampi – azhakAna

puruvam suzhatRi inthrathanu vanthu uthiththathu enRu
puLakam seluththu iraNdu – kayal mEvum

poRikaL suzhatRi rampa parisam payitRi manthra
podi koNdu azhikkum vanjar – uRavAmO

uruvam thariththu ukanthu karamum pidiththu uvanthu
uRavum pidiththa aNangai – vanam meethE

oLir kompinaic chavunthariya umpalaik koNarnthu
oLir vanjiyaip puNarntha – maNi mArpA

seru vem kaLaththil vantha avuNan theRinthu manga
sivam anjezhuththai muntha – viduvOnE

thinamum kaLiththu sem pon ulakam thuthiththu iRainju
thiru ampalaththu amarntha – perumALE.