திருப்புகழ் 466 மதவெம் கரி (சிதம்பரம்)

Thiruppugal 466 Madhavemkari

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
தனனந் தனத்த தந்த – தனதான

மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு
வளரும் தனத்த ணிந்த – மணியாரம்

வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு
வரருந் திகைத்தி ரங்க – வருமானார்

விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள்
மிகைகண் டுறக்க லங்கி – மருளாதே

விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து
மிகவிஞ் சுபொற்ப தங்கள் – தருவாயே


நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த
நடநம் பருற்றி ருந்த – கயிலாய

நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்
நவதுங் கரத்ந முந்து – திரடோளுஞ்

சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல்
திறல்செங் கணச்சு தன்றன் – மருகோனே


தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த
திருவம் பலத்த மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
தனனந் தனத்த தந்த – தனதான

மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு எனத் திரண்டு
வளரும் தனத்து அணிந்த – மணி ஆரம்

வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நி(நீ)த்து இலங்கு
வரரும் திகைத்து இரங்க – வரும் மானார்

வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள்
மிகை கண்டு உறக் கலங்கி – மருளாதே

வி(து)டு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உனைப் புகழ்ந்து
மிக விஞ்சு பொன் பதங்கள் – தருவாயே

நதியும் திருக் கரந்தை மதியும் சடைக்கு அணிந்த
நடநம்பர் உற்று இருந்த – கயிலாய

நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம்
நவ துங்க ரத்நம் உந்து – திரள் தோளும்

சிதையும்படிக்கு ஒர் அம்பு தனை முன் தொடுத்த கொண்டல்
திறல் செம் கண் அச்சுதன் தன் – மருகோனே

தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உறப் பணிந்த
திரு அம்பலத்து அமர்ந்த – பெருமாளே.

English

mathaveng karikki raNdu valukom penaththi raNdu
vaLarum thanaththa Nintha – maNiyAram

vaLaiseng kaiyiRchi Rantha voLikaN duniththi langu
vararun thikaiththi ranga – varumAnAr

vithavin githapri yangaL nakaikon juthaRku NangaL
mikaikaN duRakka langi – maruLAthE

vidusan gaiyatRu Narnthu valamvan thunaippu kazhnthu
mikavin jupoRpa thangaL – tharuvAyE

nathiyun thirukka ranthai mathiyunj chadaikka Nintha
nadanam parutRi runtha – kayilAya

nakaman gaiyiRpi dungu masuran siraththo dangam
navathun garathna munthu – thiradOLum

sithaiyum padikko rampu thanaimun thoduththa koNdal
thiRalseng kaNacchu thanRan – marukOnE

thinamum karuththu Narnthu surarvan thuRappa Nintha
thiruvam palaththa marntha – perumALE.

English Easy Version

matha vem karikku iraNdu valu kompu enath thiraNdu
vaLarum thanaththu aNintha – maNi Aram

vaLai sem kaiyil siRantha oLi kaNdu ni(nee)ththu ilangu
vararum thikaiththu iranga – varum mAnAr

vitha ingitha priyangaL nakai konjuthal kuNangaL
mikai kaNdu uRak kalangi – maruLAthE

vi(t)tu sangai atRu uNarnthu valam vanthu unaip pukazhnthu
mika vinju pon pathangaL – tharuvAyE

nathiyum thiruk karanthai mathiyum chadaikku aNintha
nadanampar utRu iruntha – kayilAya

nakam angaiyil pidungum asuran siraththodu angam
nava thunga rathnam unthu – thiraL thOLum

sithaiyumpadikku or ampu thanai mun thoduththa koNdal
thiRal sem kaN acchuthan than – marukOnE

thinamum karuththu uNarnthu surar vanthu uRap paNintha
thiru ampalaththu amarntha – perumALE.