திருப்புகழ் 467 முகசந்திர புருவம் (சிதம்பரம்)

Thiruppugal 467 Mugasandhirapuruvam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் – தனதான

முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல
முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட
மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் – குழையாட


முழவங்கர சமுகம்பரி மளகுங்கும வாச
முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில்
முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் – கொடிபோலத்

துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை
மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு
துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் – செயல்மேவித்

தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட
விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும்
சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் – கருள்வாயே

அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி
உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி
அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக் – கொருசேயே

அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு
சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய
அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத் – திகழ்வோனே

மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை
மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத
மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் – கதிர்வேலா

வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக
சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில்
மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் – தனதான

முக(ம்) சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல
முகில் அம்குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் – குழை ஆட

அம் கர சமுகம் முழவ பரிமள குங்கும வாச
முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில்
முரணும் சிறு பவளம் தரள வடம் தொடை ஆட – கொடி போலத்

துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை
மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு
துதை பஞ்சு அணை மிசை அங்கசன் ரதி இன்பம் அதாகச் – செயல் மேவி

தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட
விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும்
சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு – அருள்வாயே

அகர அம் திரு உயிர் பண்பு உற அரி என்பதும் ஆகி
உறையும் சுடர் ஒளி என் க(ண்)ணில் வளரும் சிவகாமி
அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு – ஒரு சேயே

அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு
சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய
அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போலத் – திகழ்வோனே

மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை
மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத
மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழைக் – கதிர் வேலா

வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக
சரசம் குற மகள் பங்கொடு வளர் தென் புலியூரில்
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேசப் – பெருமாளே.

English

mukachanthira puruvanjchilai vizhiyungkayal neela
mukilangkuzha loLirthongalo disaivaNdukaL pAda
mozhiyungkiLi yithazhpangaya nakaisangoLi kAthiR – kuzhaiyAda

muzhavangkara kamukampari maLakunguma vAsa
mulaiyinpara sakudangkuva diNaikoNdunal mArpil
muraNunjchiRu pavaLanthara Lavadanthodai yAdak – kodipOlath

thukirinkodi yodiyumpadi nadananthodai vAzhai
maRaiyumpadi thuyalsunthara sukamangaiya rOdu
thuthaipanjchaNai misaiyangasan rathiyinpama thAkac – cheyalmEvith

thodaisinthida mozhikonjida aLakanjchuzha lAda
vizhithunjhida idaithoynjida mayalkoNdaNai kInum
sukachanthira mukamumpatha azhakunthami yEnuk – karuLvAyE

akaranthiru uyirpaNpuRa ariyenpathu mAki
uRaiyunjchuda roLiyenkaNil vaLarunjchiva kAmi
amuthampozhi paraiyanthari umaipangara nAruk – korusEyE


asuransira mirathampari silaiyungkeda kOdu
saramumpala padaiyumpodi kadalungiri sAya
amarkoNdayil vidusengkara voLisengkathir pOlath – thikazhvOnE

makarangkodi nilavinkudai mathananthiru thAthai
marukenRaNi viruthumpala murasangkalai yOtha
maRaiyanRalai yudaiyumpadi nadanangkoLu mAzhaik – kathirvElA

vadivinthiran makaLsunthara maNamungkodu mOka
sarasangkuRa makaLpangodu vaLarthenpuli yUril
makizhumpukazh thiruvampala maruvungkuma rEsap – perumALE.

English Easy Version

muka(m) chanthira puruvam silai vizhiyum kayal neela
mukil amkuzhal oLir thongalOdu isai vaNdukaL pAda
mozhiyum kiLi ithazh pangayam nakai sangu oLi kAthil – kuzhai Ada

am kara samukam muzhava parimaLa kunguma vAsa
mulai inpa rasa kudam kuvadu iNai koNdu nal mArpil
muraNum siRu pavaLam tharaLa vadam thodai Ada – kodi pOlath

thukirin kodi odiyumpadi nadanam thodai vAzhai
maRaiyumpadi thuyal sunthara suka mangaiyarOdu
thuthai panju aNai misai angasan rathi inpam athAkach – cheyal mEvi

thodai sinthida mozhi konjida aLakam chuzhal Ada
vizhi thunjida idai thoynjida mayal koNdu aNaikeenum
suka santhira mukamum patha azhakum thamiyEnukku – aruLvAyE

akara am thiru uyir paNpu uRa ari enpathum Aki
uRaiyum sudar oLi en ka(N)Nil vaLarum sivakAmi
amutham pozhi parai anthari umai panga aranArukku – oru sEyE

asuran siram iratham pari silaiyum keda kOdu
saramum pala padaiyum podi kadalum giri sAya
amar koNdu ayil vidu sem kara oLi sem kathir pOlath – thikazhvOnE

makaram kodi nilavin kudai mathanan thiru thAthai
marukan enRu aNi viruthum pala murasam kalai Otha
maRaiyan thalai udaiyumpadi nadanam koLu mAzhaik – kathir vElA

vadivu inthiran makaL sunthara maNamum kodu mOka
sarasam kuRa makaL pangodu vaLar then puliyUril
makizhum pukazh thiru ampalam maruvum kumarEsap – perumALE.