திருப்புகழ் 468 சந்திர வோலை (சிதம்பரம்)

Thiruppugal 468 Sandhiravolai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தன தானன தான தந்தன
தந்தன தானன தான தந்தன
தந்தன தானன தான தந்தன – தந்ததான

சந்திர வோலைகு லாவ கொங்கைகள்
மந்தர மாலந னீர்த தும்பநல்
சண்பக மாலைகு லாவி ளங்குழல் – மஞ்சுபோலத்

தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை
விண்புரு வாரிதழ் கோவை யின்கனி
தன்செய லார்நகை சோதி யின்கதிர் – சங்குமேவுங்

கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்
சந்தன சேறுட னார்க வின்பெறு
கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய – ரம்பையாரைக்

கண்களி கூரவெ காசை கொண்டவர்
பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு
கண்களி ராறுமி ராறு திண்புய – முங்கொள்வேனே

இந்திர லோகமு ளாரி தம்பெற
சந்திர சூரியர் தேர்ந டந்திட
எண்கிரி சூரர்கு ழாமி றந்திட – கண்டவேலா

இந்திரை கேள்வர்பி தாம கன்கதி
ரிந்துச டாதரன் வாச வன்தொழு
தின்புற வேமனு நூல்வி ளம்பிய – கந்தவேளே

சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு
பெண்கள்சி காமணி மோக வஞ்சியர்
செந்தினை வாழ்வளி நாய கொண்குக – அன்பரோது

செந்தமிழ் ஞானத டாக மென்சிவ
கங்கைய ளாவும காசி தம்பர
திண்சபை மேவும னாச வுந்தர – தம்பிரானே.

பதம் பிரித்தது

தந்தன தானன தான தந்தன
தந்தன தானன தான தந்தன
தந்தன தானன தான தந்தன – தந்ததான

சந்திர ஓலை குலாவ கொங்கைகள்
மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல்
சண்பக மாலை குலாவு இளம் குழல் – மஞ்சு போல

தண் கயல் வாளி க(ண்)ணார் இளம் பிறை
விண் புருவர் இதழ் கோவையின் கனி
தன் செயலார் நகை சோதியின் கதிர் – சங்கு மேவும்

கந்தரர் தேமலு(ம்) மார் பரம்ப நல்
சந்தன சேறு உடன் ஆர் கவின் பெறு
கஞ்சுகமாம் மிடறு ஓதை கொஞ்சிய – ரம்பையாரை

கண் களி கூர வெகு ஆசை கொண்டு அவர்
பஞ்சணை மீது குலாவினும் திரு
கண்கள் இராறும் இராறு திண் புயமும் – கொள்வேனே

இந்திர லோகம் உளார் இதம் பெற
சந்திர சூரியர் தேர் நடந்திட
எண் கிரி சூரர் குழாம் இறந்திட – கண்ட வேலா

இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர்
இந்து சடாதரன் வாசவன் தொழுது
இன்புறவே மனு நூல் விளம்பிய – கந்த வேளே

சிந்துர(ம்) மால் குவடு ஆர் தனம் சிறு
பெண்கள் சிகா மணி மோக வஞ்சியர்
செம் தினை வாழ் வ(ள்)ளி நாயக ஒண் குக – அன்பர் ஓது

செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ
கங்கை அளாவும் மகா சிதம்பர
திண் சபை மேவும் ம(ன்)னா சவுந்தர – தம்பிரானே.

English

chanthira vOlaiku lAva kongaikaL
manthara mAlana neertha thumpanal
shaNpaka mAlaiku lAvi Languzhal – manjupOlath

thaNkayal vALika NAri LampiRai
viNpuru vArithazh kOvai yinkani
thanseya lArnakai sOthi yinkathir – sangumEvum

kantharar thEmalu mArpa rampanal
santhana sERuda nArka vinpeRu
kanjuka mAmida ROthai konjiya – rampaiyAraik

kaNkaLi kUrave kAsai koNdavar
panjaNai meethuku lAvi nunthiru
kaNkaLi rARumi rARu thiNpuya – mumkoLvEnE

inthira lOkamu LAri thampeRa
santhira cUriyar thErna danthida
eNkiri cUrarku zhAmi Ranthida – kaNdavElA

inthirai kELvarpi thAma kankathi
rinthusa dAtharan vAsa vanthozhu
thinpuRa vEmanu nUlvi Lampiya – kanthavELE

sinthura mAlkuva dArtha namchiRu
peNkaLsi kAmaNi mOka vanjiyar
senthinai vAzhvaLi nAya koNkuka – anparOthu

senthamizh njAnatha dAka mensiva
gangaiya LAvuma kAsi thampara
thiNsapai mEvuma nAsa vunthara – thambirAnE.

English Easy Version

chanthira Olai kulAva kongaikaL
mantharam Ala nal neer thathumpa nal
shaNpaka mAlai kulAvu iLam kuzhal – manju pOla

thaN kayal vALi ka(N)NAr iLam piRai
viN puruvAr ithazh kOvaiyin kani
than seyalAr nakai sOthiyin kathir – sangu mEvum

kantharar thEmalu(m) mAr parampa nal
santhana sERu udan Ar kavin peRu
kanjukamAm midaRu Othai konjiya – rampaiyArai

kaN kaLi kUra veku Asai koNdu avar
panjaNai meethu kulAvinum thiru
kaNkaL irARum irARu thiN puyamum – koLvEnE

inthira lOkam uLAr itham peRa
santhira cUriyar thEr nadanthida
eN kiri cUrar kuzhAm iRanthida – kaNda vElA

inthirai kELvar pithA makan kathir
inthu sadAtharan vAsavan thozhuthu
inpuRavE manu nUl viLampiya – kantha vELE

sinthura(m) mAl kuvadu Ar thanam siRu
peNkaL sikA maNi mOka vanjiyar
sem thinai vAzh va(L)Li nAyaka oN kuka – anpar Othu

senthamizh njAna thadAkam en siva
gangai aLAvum makA sithampara
thiN sapai mEvum ma(n)nA savunthara – thambirAnE.