திருப்புகழ் 469 காய மாய வீடு (சிதம்பரம்)

Thiruppugal 469 Kayamayaveedu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தான தான தானன தான தந்த
தத்த தந்த தத்த தந்த – தந்ததான

காய மாய வீடு மீறிய கூடு நந்து
புற்பு தந்த னிற்கு ரம்பை – கொண்டுநாளுங்

காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி
யப்ர மந்த டித்த லைந்து – சிந்தைவேறாய்

வேயி லாய தோள மாமட வார்கள் பங்க
யத்து கொங்கை யுற்றி ணங்கி – நொந்திடாதே

வேத கீத போத மோனமெய் ஞான நந்த
முற்றி டின்ப முத்தி யொன்று – தந்திடாயோ

மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
விக்ர மங்கொள் வெற்பி டந்த – செங்கைவேலா

வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை
யைப்பு ணர்ந்த வெற்ப கந்த – செந்தில்வேளே

ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ
ழுத்த ழங்க முட்ட நின்று – துன்றுசோதீ

ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப
லச்சி தம்ப ரத்த மர்ந்த – தம்பிரானே.

பதம் பிரித்தது

தான தான தான தானன தான தந்த
தத்த தந்த தத்த தந்த – தந்ததான

காய மாய வீடு மீறிய கூடு நந்து
புற்புதந்தனில் குரம்பை – கொண்டு நாளுங்

காசி லாசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரியப்ர
மந்த டித்த லைந்து – சிந்தைவேறாய்

வேயிலாய தோள மா மடவார்கள் பங்கயத்து
கொங்கை யுற்றிணங்கி – நொந்திடாதே

வேத கீத போத மோனமெய்ஞான நந்த
முற்றிடு இன்ப முத்தி யொன்று – தந்திடாயோ

மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
விக்ரமங்கொள் வெற்பு இடந்த – செங்கைவேலா

வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையைப்
புணர்ந்த வெற்ப கந்த – செந்தில்வேளே

ஆயும் வேத கீதம் ஏழிசை பாட அஞ்
செழுத்தழங்க முட்ட நின்று – துன்றுசோதீ

ஆதி நாதராடு நாடக சாலை அம்பலச்
சிதம்ப ரத்தமர்ந்த – தம்பிரானே.

English

kAya mAya veedu meeRiya kUdu nandhu
puRpudhan thaniR kurambai – koNdu nALum

kAsil Asai thEdi vAzh vinai nAdi indhriya
braman thadith alaindhu – chinthai vERAy

vEyil Aya thOLa mAmada vArgaL panga
yaththu kongai utriNangi – nondhidAdhE

vEdha geetha bOdha mOna mey nyAna nandham
utrid inba muththi ondru – thandhidAyO

mAya veera dheera sUrargaL pARa nindra
vikramam koL veRp idandha – sengkaivElA

vAgai vEdar pEdhai kAdhala vEzha mangai
yaippu NarnDa veRpa kanDa – chenDilvELE

Ayum vEdha geetham Ezh isai pAda anje
zhuth thazhanga mutta nindru – thundru jOthee

Adhi nAthar Adu nAtaka sAlai amba
lach chidhambarath amarndha – thambirAnE.

English Easy Version

kAya mAya veedu meeRiya kUdu nandhu
puRpudhan thaniR kurambai – koNdu nALum

kAsil Asai thEdi vAzh vinai nAdi indhriya
braman thadith alaindhu – chinthai vERAy

vEyil Aya thOLa mAmada vArgaL
pangayaththu kongai utriNangi – nondhidAdhE

vEdha geetha bOdha mOna mey nyAna nandha
mutrid inba muththi ondru – thandhidAyO

mAya veera dheera sUrargaL pARa nindra
vikramam koL veRp idandha – sengkaivElA

vAgai vEdar pEdhai kAdhala vEzha mangai
yaippu NarnDa veRpa kanDa – chenDilvELE

Ayum vEdha geetham Ezh isai pAda anjezhuth
thazhanga mutta nindru – thundru jOthee

Adhi nAthar Adu nAtaka sAlai ambalach
chidhambarath amarndha – thambirAnE.