திருப்புகழ் 471 கட்டி முண்டக (சிதம்பரம்)

Thiruppugal 471 Kattimundaga

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன – தனதான

கட்டி முண்டகர பாலி யங்கிதனை
முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி
கத்த மந்திரவ தான வெண்புரவி – மிசையேறிக்

கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர்
பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு
கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ – டசையாமற்

சுட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு
தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர்
சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத – முறமேவித்

துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்
வச்சி ரங்களென மேனி தங்கமுற
சுத்த கம்புகுத வேத விந்தையொடு – புகழ்வேனோ

எட்டி ரண்டுமறி யாத என்செவியி
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு – முருகோனே

எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் – விடுவோனே

செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளை – நவில்வோனே

செட்டி யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக
தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன
தத்த தந்ததன தான தந்ததன – தனதான

கட்டி முண்டக அரபாலி அங்கிதனை
முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி
கத்த மந்திர அவதான வெண் புரவி – மிசை ஏறி

கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர்
பட்டி மண்டபம் ஊடாடி இந்துவொடு
கட்டி விந்து பிசகாமல் வெண் பொடி கொடு – அசையாமல்

சுட்டு வெம் புரம் நீறு ஆக விஞ்சை கொடு
தத்துவங்கள் விழச் சாடி எண் குணவர்
சொர்க்கம் வந்து கையுள் ஆக எந்தை பதம் – உற மேவி

துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில்
வச்சிரங்கள் என மேனி தங்கம் உற
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு – புகழ்வேனோ

எட்டு இரண்டும் அறியாத என் செவியில்
எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு – முருகோனே

எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி
எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல்
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் – விடுவோனே

செட்டி என்று சிவகாமி தன் பதியில்
கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்)
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை – நவில்வோனே

செட்டி என்று வனம் மேவி இன்பரசச்
சத்தியின் செயல் இ(ன்)னாளை அன்பு உருக
தெட்டி வந்து புலியூரில் மன்றுள் வளர் – பெருமாளே.

English

katti muNdakara pAli angithanai
mutti aNdamodu thAvi vindhu oli
kaththa manthir avadhAna veNpuravi – misaiyERi

kaRpagam theruvil veedhi koNdu sudar
patti mandapam udAdi indhu vodu
katti vindhu pisagAmal veN podi kod – asaiyAmal

suttu vempura niRAga vinjai kodu
thaththuvangaL vizha chAdi eNguNavar
sorggam vandhu kaiyuL Aga endhai padham – uRamEvi

dhukkam vendhu vizha nyAnam uNdu kudil
vajjirangaLena mEni thangam uRa
sudhdhagam pugudha vEdha vindhaiyodu – pugazhvEnO

ettiraNdum aRiyAdha en seviyil
ettiraNdum idhuvAm ilingamena
ettiraNdum veLiyA mozhindha guru – murugOnE

ettiraNdu dhisai Oda senkurudhi
ettiraNdum uruvAgi vanchakar mel
ettiraNdu dhisaiyOrgaL pondra ayil – viduvOnE

chetti endru sivakAmi than padhiyil
kattu sengkai vaLai kURum endhai ida
chiththamum kuLir anAdhi vaN poruLai – navilvOnE

chetti endru vana mEvi inbarasa
saththiyin seyalinALai anburuga
thetti vandhu puliyUrin mandruL vaLar – perumALE.

English Easy Version

katti muNdakara pAli angithanai
Mutti aNdamodu thAvi vindhu oli
Kaththa manthir avadhAna veNpuravi – misaiyERi

kaRpagam theruvil veedhi koNdu sudar
patti mandapam udAdi indhu vodu
katti vindhu pisagAmal veN podi kod – asaiyAmal

suttu vempura niRAga vinjai kodu
thaththuvangaL vizha chAdi eNguNavar
sorggam vandhu kaiyuL Aga endhai padham – uRamEvi

dhukkam vendhu vizha nyAnam uNdu kudil
vajjirangaLena mEni thangam uRa
sudhdhagam pugudha vEdha vindhaiyodu – pugazhvEnO

ettiraNdum aRiyAdha en seviyil
ettiraNdum idhuvAm ilingamena
ettiraNdum veLiyA mozhindha guru – murugOnE

ettiraNdu dhisai Oda senkurudhi
ettiraNdum uruvAgi vanchakar mel
ettiraNdu dhisaiyOrgaL pondra ayil – viduvOnE

chetti endru sivakAmi than padhiyil
kattu sengkai vaLai kURum endhai ida(m)
chiththamum kuLir anAdhi vaN poruLai – navilvOnE

chetti endru vana mEvi inbarasa
saththiyin seyalinALai anburuga
thetti vandhu puliyUrin mandruL vaLar – perumALE.