திருப்புகழ் 472 நஞ்சினைப் போலுமன (சிதம்பரம்)

Thiruppugal 472 Nanjinaippolumana

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தனத் தானதன தந்தனத் தானதன
தந்தனத் தானதன – தந்ததான

நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதற் றீதெனநி – னைந்துநாயேன்

நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை
நங்களப் பாசரண – மென்றுகூறல்

உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
உன்சொலைத் தாழ்வுசெய்து – மிஞ்சுவாரார்

உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்
உம்பருக் காவதினின் – வந்துதோணாய்

கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு
கண்களிப் பாகவிடு – செங்கையோனே

கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
கஞ்சுகப் பான்மைபுனை – பொன்செய்தோளாய்

அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
அந்தரத் தேறவிடு – கந்தவேளே

அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
அம்பலத் தாடுமவர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தந்தனத் தானதன தந்தனத் தானதன
தந்தனத் தானதன – தந்ததான

நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதல் தீதெனநினைந்து – நாயேன்

நண்பு உகப் பாதமதில் அன்புறத் தேடி யுனை
நங்களப்பா சரண – மென்றுகூறல்

உன்செவிக்கு ஏறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
உன்சொலைத் தாழ்வுசெய்து – மிஞ்சுவாரார்

உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர்துணைவர்
உம்பருக்கு ஆவதினின் – வந்து தோணாய்

கஞ்சனைத் தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு
கண்களிப்பாக விடு – செங்கையோனே

கண்கயற் பாவை குற மங்கைபொற்றோள் தழுவு
கஞ்சுகப் பான்மைபுனை பொன் – செய்தோளாய்

அஞ்சவெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர்குலம்
அந்தரத்து ஏறவிடு – கந்தவேளே

அண்டமுற் பார்புகழும் எந்தை பொற்பூர்புலிசை
அம்பலத் தாடுமவர் – தம்பிரானே.

English

nanjinaip pOlumana vanjakak kOLarkaLai
namputhaR Reethenani – nainthunAyEn

naNpukap pAthamathi lanpuRath thEdiyunai
nangaLap pAsaraNa – menRukURal

unsevik kERalaikol peNkaLmeR pArvaiyaikol
unsolaith thAzhvuseythu – minjuvArAr

unRanak kEparamum enRanak kArthuNaivar
umparuk kAvathinin – vanthuthONAy

kanjanaith thAvimudi munpukut tEyamiku
kaNkaLip pAkavidu – sengaiyOnE

kaNkayaR pAvaikuRa mangaipoR ROthazhuvu
kanjukap pAnmaipunai – ponseythOLAy

anjaveR pEzhukadal mangkanit tUrarkulam
antharath thERavidu – kanthavELE

aNdamuR pArpukazhu menthaipoR pUrpulisai
ampalath thAdumavar – thambirAnE.

English Easy Version

nanjinaip pOlumana vanjakak kOLarkaLai
namputhaR Reethenani – nainthunAyEn

naNpukap pAthamathi lanpuRath thEdiyunai
nangaLap pAsaraNa – menRukURal

unsevik kERalaikol peNkaLmeR pArvaiyaikol
unsolaith thAzhvuseythu – minjuvArAr

unRanak kEparamum enRanak kArthuNaivar
umparuk kAvathinin – vanthuthONAy

kanjanaith thAvimudi munpukut tEyamiku
kaNkaLip pAkavidu – sengaiyOnE

kaNkayaR pAvaikuRa mangaipoR ROthazhuvu
kanjukap pAnmaipunai – ponseythOLAy

anjaveR pEzhukadal mangka nittUrarkulam
antharath thERavidu – kanthavELE

aNdamuR pArpukazhu menthaipoR pUrpulisai
ampalath thAdumavar thambirAnE.