திருப்புகழ் 473 செம் கலச (சிதம்பரம்)

Thiruppugal 473 Semkalasa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்ததன – தனதான
தந்ததன – தனதான

செங்கலச – முலையார்பால்
சிந்தைபல – தடுமாறி

அங்கமிக – மெலியாதே
அன்புருக – அருள்வாயே

செங்கைபிடி – கொடியோனே
செஞ்சொல்தெரி – புலவோனே

மங்கையுமை – தருசேயே
மன்றுள்வளர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்ததன – தனதான
தந்ததன – தனதான

செம் கலச – முலையார்பால்
சிந்தைபல – தடுமாறி

அங்கம் மிக – மெலியாதே
அன்பு உருக – அருள்வாயே

செம் கை பிடி – கொடியோனே
செம் சொல் தெரி – புலவோனே

மங்கை உமை – தரு சேயே
மன்றுள் வளர் – பெருமாளே.

English

sengkalasa – mulaiyArpAl
sinthaipala – thadumARi

angkamika – meliyAthE
anburuka – aruLvAyE

sengkaipidi – kodiyOnE
sencholtheri – pulavOnE

mangkaiyumai – tharusEyE
manRuLvaLar – perumALE.

English Easy Version

sem kalasa – mulaiyArpAl
sinthaipala – thadumARi

angam mika – meliyAthE
anpu uruka – aruLvAyE

sem kai pidi – kodiyOnE
sem sol theri – pulavOnE

mangai umai – tharu sEyE
manRuL vaLar – perumALE.