திருப்புகழ் 474 கரிய மேகமெனும் (சிதம்பரம்)

Thiruppugal 474 Kariyamegamenum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன – தந்ததான

கரிய மேக மெனுங்குழ லார்பிறை
சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி
கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி – துண்டமாதர்

கமுக க்ரீவர் புயங்கழை யார்தன
மலைக ளாஇ ணையுங்குவ டார்கர
கமல வாழை மனுந்தொடை யார்சர – சுங்கமாடை

வரிய பாளி தமுந்துடை யாரிடை
துடிகள் நூலி யலுங்கவி னாரல்குல்
மணமு லாவி யரம்பையி னார்பொருள் – சங்கமாதர்

மயில்கள் போல நடம்புரி வாரியல்
குணமி லாத வியன்செய லார்வலை
மசகி நாயெ னழிந்திட வோவுன – தன்புதாராய்

சரியி லாத சயம்பவி யார்முகி
லளக பார பொனின்சடை யாள்சிவை
சருவ லோக சவுந்தரி யாளருள் – கந்தவேளே

சதப ணாம குடம்பொடி யாய்விட
அவுணர் சேனை மடிந்திட வேயொரு
தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக – செம்பொன்வாகா

அரிய மேனி யிலங்கையி ராவணன்
முடிகள் வீழ சரந்தொடு மாயவன்
அகில மீரெ ழுமுண்டவன் மாமரு – கண்டரோதும்

அழகு சோபி தஅங்கொளு மானன
விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி
அருள்கொ டாடி சிதம்பர மேவிய – தம்பிரானே

பதம் பிரித்தது

தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன – தந்ததான

கரிய மேகம் எனும் குழலார் பிறை
சிலை கொள் வாகு எ(ன்)னும் புருவார் விழி
கயல்கள் வாளி எ(ன்)னும் செயலார் மதி – துண்ட மாதர்

கமுக க்ரீவர் புயம் கழையார் தன
மலைகளா இணையும் குவடார் கர
கமல வாழை ம(ன்)னும் தொடையார் சர – சுங்க மாடை

வரிய பாளிதம் உந்து உடையார் இடை
துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல்
மணம் உலாவிய ரம்பையினார் பொருள் – சங்க மாதர்

மயில்கள் போல நடம் புரிவார் இயல்
குணம் இ(ல்)லாத வியன் செயலார் வலை
மசகி நாயென் அழிந்திடவோ உனது – அன்பு தாராய்

சரி இ(ல்)லாத சயம்பவியார் முகில்
அளக பார பொ(ன்)னின் சடையாள் சிவை
சருவ லோக சவுந்தரியாள் அருள் – கந்த வேளே

சத பணா மகுடம் பொடியாய் விட
அவுணர் சேனை மடிந்திடவே ஒரு
தழல் கொள் வேலை எறிந்திடு சேவக – செம்பொன் வாகா

அரிய மேனி இலங்கை இராவணண்
முடிகள் வீழ சரம் தொடு மாயவன்
அகிலம் ஈரெழும் உண்டவன் மா மருக – அண்டர் ஓதும்

அழகு சோபித அம் கொ(ள்)ளும் ஆனன
விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வ(ள்)ளி
அருள் கொடு ஆடி சிதம்பர(ம்) மேவிய – தம்பிரானே.

English

kariya mEka menungkuzha lArpiRai
silaikoL vAku venumpuru vArvizhi
kayalkaL vALi yenumcheya lArmathi – thuNdamAthar

kamuka kreevar puyangkazhai yArthana
malaika LAi Naiyungkuva dArkara
kamala vAzhai manunthodai yArsara – sungamAdai

variya pALi thamunthudai yAridai
thudikaL nUli yalungkavi nAralkul
maNamu lAvi yarampaiyi nArporuL – sangamAthar

mayilkaL pOla nadampuri vAriyal
kuNami lAtha viyanseya lArvalai
masaki nAye nazhinthida vOvuna – thanputhArAy

sariyi lAtha sayampavi yArmuki
laLaka pAra poninchadai yALsivai
saruva lOka savunthari yALaruL – kanthavELE

sathapa NAma kudampodi yAyvida
avuNar sEnai madinthida vEyoru
thazhalkoL vElai yeRinthidu sEvaka – semponvAkA

ariya mEni yilangaiyi rAvaNan
mudikaL veezha saranthodu mAyavan
akila meere zhumuNdavan mAmaru – kaNdarOthum

azhaku sOpi thaangoLu mAnana
viputhai mOki kuRinjiyin vAzhvaLi
aruLko dAdi chithampara mEviya – thambirAnE.

English Easy Version

kariya mEkam enum kuzhalAr piRai
silai koL vAku e(n)num puruvAr vizhi
kayalkaL vALi e(n)num seyalAr mathi – thuNda mAthar

kamuka kreevar puyam kazhaiyAr thana
malaikaLA iNaiyum kuvadAr kara
kamala vAzhai ma(n)num thodaiyAr sara – sunga mAdai

variya pALitham unthu udaiyAr idai
thudikaL nUliyalum kavin Ar alkul
maNam ulAviya rampaiyinAr poruL – sanga mAthar

mayilkaL pOla nadam purivAr iyal
kuNam i(l)lAtha viyan seyalAr valai
masaki nAyen azhinthidavO unathu – anpu thArAy

sari i(l)lAtha sayampaviyAr mukil
aLaka pAra po(n)nin sadaiyAL
sivai saruva lOka savunthariyAL aruL – kantha vELE

satha paNA makudam podiyAy vida
avuNar sEnai madinthidavE oru
thazhal koL vElai eRinthidu sEvaka – sempon vAkA

ariya mEni ilangai iravaNaN
mudikaL veezha saram thodu mAyavan
akilam eerezhum uNdavan mA maruka – aNdar Othum

azhaku sOpitha am ko(L)Lum Anana
viputhai mOki kuRinjiyin vAzh va(L)Li
aruL kodu Adi chithampara(m) mEviya – thambirAnE.