Thiruppugal 475 Kundhalazhavirindhu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன – தந்ததான
கூந்த லாழவி ரிந்து சரிந்திட
காந்து மாலைகு லைந்து பளிங்கிட
கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட – கொங்கைதானுங்
கூண்க ளாமென பொங்கந லம்பெறு
காந்தள் மேனிம ருங்குது வண்டிட
கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர – சங்கள்பாயச்
சாந்து வேர்வின ழிந்து மணந்தப
வோங்க வாகில்க லந்து முகங்கொடு
தான்ப லாசுளை யின்சுவை கண்டித – ழுண்டுமோகந்
தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட
வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு
சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் – மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் – பொங்குசூரைச்
சேண்சு லாமகு டம்பொடி தம்பட
வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்
சேந்த வேலது கொண்டு நடம்பயில் – கந்தவேளே
மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட
தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு
வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் – செங்கைவேலா
மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர
மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்
வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய – தம்பிரானே.
பதம் பிரித்தது
தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன – தந்ததான
கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட
காந்து மாலை குலைந்து பளிங்கிட
கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட – கொங்கை தானும்
கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு
காந்தள் மேனி மருங்கு துவண்டிட
கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு – இரசங்கள் பாய
சாந்து வேர்வின்அழிந்து மணம் த(ப்)ப
ஓங்கு அவாவில் கலந்து முகம் கொடு
தான் பலா சுளையின் சுவை கண்டு – இதழுண்டு மோகம்
தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட
வாஞ்சை மாதருடன் புளகம் கொடு
சார்ந்து நாய் என அழிந்து விழுந்து உடல் – மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் – பொங்கு சூரைச்
சேண் சுலா மகுடம் பொடிதம் பட
ஓங்கு அவ்வேழ் கடலும் சுவற அம் கையில்
சேந்த வேலது கொண்டு நடம் பயில் – கந்த வேளே
மாந் தண் ஆரு(ம்) வனம் குயில் கொஞ்சிட
தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு
வான் குலாவு சிதம்பரம் வந்து அமர் – செங்கை வேலா
மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம்
ஏய்ந்த நாயகி சம்பை மருங்கு பொன்
வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய – தம்பிரானே.
English
kUntha lAzhavi rinthusa rinthida
kAnthu mAlaiku lainthupa Lingida
kUrntha vALvizhi keNdaika langida – kongaithAnung
kUNka LAmena pongana lampeRu
kAnthaL mEnima runguthu vaNdida
kUrntha Adaiku lainthupu raNdira – sangaLpAyac
chAnthu vErvina zhinthuma Nanthapa
vOnga vAkilka lanthumu kangodu
thAnpa lAchuLai yinsuvai kaNditha – zhuNdumOkan
thAmpu RAmayi linkural konjida
vAnjai mAtharu danpuLa kangodu
sArnthu nAyena zhinthuvi zhunthudal – manguvEnO
theentha thOthaka thanthana thinthimi
ANda pErikai thunthumi sangodu
sErntha pUrikai pampaitha vaNdaikaL – pongucUraic
chENsu lAmaku dampodi thampada
vOnga vEzhkada lunjuva Rangaiyil
sEntha vElathu koNdu nadampayil – kanthavELE
mAntha NAruva nanguyil konjida
thEngu vAzhaika rumpukaL vinjidu
vAnku lAvuchi thamparam vanthamar – sengaivElA
mANpra kAsatha nangiri sunthara
mEyntha nAyaki sampaima rungupon
vArntha rUpiku RampeNva Nangiya – thambirAnE.
English Easy Version
kUnthal Azha virinthu sarinthida
kAnthu mAlai kulainthu paLingida
kUrntha vAL vizhi keNdai kalangida – kongai thAnum
kUNkaL Am ena ponga nalam peRu
kAnthaL mEni marungu thuvaNdida
kUrntha Adai kulainthu puraNdu – irasangaL pAya
chAnthu vErvinazhinthu maNam tha(p)pa
Ongu avAvil kalanthu mukam kodu
thAn palA chuLaiyin suvai kaNdu – ithazhuNdu
mOkam thAm puRA mayilin kural konjida
vAnjai mAtharudan puLakam kodu
sArnthu nAy ena azhinthu vizhunthu udal – manguvEnO
theentha thOthaka thanthana thinthimi
ANda pErikai thunthumi sangodu
sErntha pUrikai pampai thavaNdaikaL – pongu cUraic
chEN sulA makudam poditham pada
Ongu avvEzh kadalum chuvaRa am kaiyil
sEntha vElathu koNdu nadam payil – kantha vELE
mAn thaN Aru(m) vanam kuyil konjida
thEngu vAzhai karumpukaL vinjidu
vAn kulAvu sithamparam vanthu amar – sengai vElA
mAN prakAsa thanam kiri suntharam
Eyntha nAyaki sampai marungu pon
vArntha rUpi kuRa peN vaNangiya – thambirAnE.