திருப்புகழ் 476 அத்தன் அன்னை (சிதம்பரம்)

Thiruppugal 476 Aththanannai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய – தனதான

அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வ – ருடனாகி

அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
லற்று நின்னை வல்ல – படிபாடி

முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
முத்த னென்ன வுள்ள – முணராதே

முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
முட்ட னிங்ங னைவ – தொழியாதோ

தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
தித்து மன்னு பிள்ளை – முருகோனே

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
சித்ர வண்ண வல்லி – யலர்சூடும்

பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
பத்தர் கன்னி புல்லு – மணிமார்பா

பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய – தனதான

அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வர் – உடனாகி

அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல்
அற்று நின்னை வல்லபடி – பாடி

முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி
முத்தன் என்ன உள்ளம் – உணராதே

முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும்
முட்டன் இங்ஙன் நைவது – ஒழியாதோ

தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணின் உள்
உதித்து மன்னு பிள்ளை – முருகோனே

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய
சித்ர வண்ணவல்லி – அலர் சூடும்

பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் வெள்
இபத்தர் கன்னி புல்லும் – மணி மார்பா

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள
பச்சை மஞ்ஞை வல்ல – பெருமாளே.

English

aththa nannai yillam vaiththa sonnam veLLi
aththai naNNu selva – rudanAki

aththu paNNu kalvi sutRa mennu malla
laRtRu ninnai valla – padipAdi

muththa nenna vallai yaththa nenna vaLLi
muththa nenna vuLLa – muNarAthE

mutta veNmai yuLLa patta neNmai koLLu
mutta ningnga naiva – thozhiyAthO

thiththi mannu thillai nirththar kaNNi nuLLu
thiththu mannu piLLai – murukOnE

siththi mannu seyya saththi thunnu kaiya
cithra vaNNa valli – yalarcUdum

paththa ruNmai sollu LutRa semmal veLLi
paththar kanni pullu – maNimArpA

pacchai vanni yalli cecchai cenni yuLLa
pacchai manjnjai valla – perumALE.

English Easy Version

aththan annai illam vaiththa sonnam veLLi
aththai naNNu selvar – udanAki

aththu paNNu kalvi sutRam ennum allal
atRu ninnai vallapadi – pAdi

muththan enna vallai aththan enna vaLLi
muththan enna uLLam – uNarAthE

mutta veNmai uLLa pattan eNmai koLLum
muttan ingngan naivathu – ozhiyAthO

thiththi mannum thillai nirththar kaNNin uL
uthiththu mannu piLLai – murukOnE

siththi mannu seyya saththi thunnum kaiya
cithra vaNNavalli – alar cUdum

paththar uNmai sol uL utRa semmal veL
ipaththar kanni pullum – maNi mArpA

pacchai vanni alli secchai cenni uLLa
pacchai manjnjai valla – perumALE.