Thiruppugal 477 Irulkattu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய – தனதான
இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
னுதல்காட்டி வெல்லு – மிருபாண
இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
நகைகாட்டு வல்லி – யிடைமாதர்
மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல
இடுகாட்டி னெல்லை – நடவாத
வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
வினை வாட்டி யல்லல் – செயலாமோ
தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
மொழிகாட்டு தில்லை – யிளையோனே
தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
குறவாட்டி புல்லு – மணிமார்பா
அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
அடல்காட்டு வல்ல – சுரர்கோபா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய – தனதான
இருள்காட்டு செவ் விததிகாட்டி வில்லின்
நுதல்காட்டி வெல்லும் – இருபாண
இயல்காட்டு கொல் குவளைகாட்டி முல்லை
நகைகாட்டு வல்லி – இடைமாதர்
மருள்காட்டி நல்குரவு காட்டும் இல்ல
இடுகாட்டின் எல்லை – நடவாத
வழிகாட்டி நல்லறிவு காட்டி மெல்ல
வினை வாட்டி யல்லல் – செயலாமோ
தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
மொழிகாட்டு தில்லை – யிளையோனே
தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
குறவாட்டி புல்லு – மணிமார்பா
அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
அடல்காட்டு வல்ல – அசுரர்கோபா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல – பெருமாளே.
English
iruLkAttu sevvi thathikAtti villi
nuthalkAtti vellu – mirupANa
iyalkAttu kolku vaLaikAtti mullai
nakaikAttu valli – yidaimAthar
maruLkAtti nalku ravukAttu milla
idukAtti nellai – nadavAtha
vazhikAtti nalla RivukAtti mella
vinai vAtti yallal – seyalAmO
theruLkAttu thollai maRaikAttu mallal
mozhikAttu thillai – yiLaiyOnE
thinaikAttu kollai vazhikAtta valla
kuRavAtti pullu – maNimArpA
aruLkAttu kalvi neRikAttu selva
adalkAttu valla – surarkOpA
adipOtRi yalli mudicUtta valla
adiyArkku nalla – perumALE.
English Easy Version
iruLkAttu sev vithathikAtti villin
nuthalkAtti: vellum – irupANa
iyalkAttu kol kuvaLaikAtti mullai
nakaikAttu valli – idaimAthar
maruLkAtti nalkuravu kAttum illa
idukAttin ellai – nadavAtha
vazhikAtti nallaRivu kAtti mella
vinai vAtti yallal – seyalAmO
theruLkAttu thollai maRaikAttu mallal
mozhikAttu thillai – yiLaiyOnE
thinaikAttu kollai vazhikAtta valla
kuRavAtti pullu – maNimArpA
aruLkAttu kalvi neRikAttu selva
adalkAttu valla – asurarkOpA
adipOtRi yalli mudicUtta valla
adiyArkku nalla – perumALE.