Thiruppugal 478 Mullaimalarpolum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தய்யதன தானனத் தானனந் தானதன
தய்யதன தானனத் தானனந் தானதன
தய்யதன தானனத் தானனந் தானதன – தனதான
முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை
வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை
முல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழ – லலைபோதம்
மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல்
கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக
முன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலை – மலையானை
வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி
றுள்ளதுகில் நூலிடைக் காமபண் டாரஅல்குல்
வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி – புரவோசை
மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல்
தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு
வல்லவர்கள் போலபொற் சூறைகொண் டார்கள்மய – லுறவாமோ
அல்லல்வினை போகசத் தாதிவிண் டோடநய
வுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகி
ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர – முருகோனே
அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிரல்
என்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல்
அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி – மணவாளா
செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோடதிர
வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி
செல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுக – வடிவேலா
தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி
வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல்
தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு – பெருமாளே.
பதம் பிரித்தது
தய்யதன தானனத் தானனந் தானதன
தய்யதன தானனத் தானனந் தானதன
தய்யதன தானனத் தானனந் தானதன – தனதான
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை
வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் – அலை போது
அம் மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல்
கிள்ளை குரலார் இதழ்ப் பூ எனும் போது முகம்
முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய – முலை மலை
யானை வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு
உள்ள துகில் நூல் இடைக் காம பண்டார அல்குல்
வழ்ழை தொடையார் மலர்க் கால் அணிந்து ஆடும் பரிபுர – ஓசை
மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட மயல்
தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொ(ண்)டு
வல்லவர்கள் போல பொன் சூறை கொண்டார்கள் மயல் – உறவாமோ
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய
உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ்
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர – முருகோனே
அன்ன நடையாள் குறப் பாவை பந்து ஆடு விரல்
என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல்
அன்னை வலி சேர் தனக் கோடு இரண்டு ஆன வ(ள்)ளி – மணவாளா
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர
வல்ல அசுரர் சேனை பட்டே மடிந்தே குருதி
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக – வடிவேலா
தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி
வல்லியோடு கூடி திக்கோர்கள் கொண்டாட இயல்
தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு(ம்) – பெருமாளே.
English
mullaimalar pOlumuth thAyuthirn thAnanakai
vaLLaikodi pOlunaR kAthilang kAdukuzhai
mullaimalar mAlaisut RAdukon thArukuzha – lalaipOtham
moLkusilai vANuthaR pArvaiyam pAnakayal
kiLLaikura lArithazhp pUvenum pOthumuka
munnalkamu kArkaLath thOysuNang kAyamulai – malaiyAnai
vallakuva dAlilaip pOlusan thAnavayi
RuLLathukil nUlidaik kAmapaN dAraalkul
vazhzhaithodai yArmalark kAlaNin thAdupari – puravOsai
mallisali yAdapat tAdaikoN dAdamayal
thaLLunadai yOdusat REmozhin thAsaikodu
vallavarkaL pOlapoR cURaikoN dArkaLmaya – luRavAmO
allalvinai pOkasath thAthiviN dOdanaya
vuLLamuRa vAkavaith thALumen thAthaimaki
zhaLLamaiya njAnavith thOthukan thAkumara – murukOnE
annanadai yALkuRap pAvaipan thAduviral
ennudaiya thAyveNmuth thArkadam pAdukuzhal
annaivali sErthanak kOdiraN dAnavaLi – maNavALA
sellumuka EzhkadaR pAzhiviN dOdathira
vallasurar sEnaipat tEmadin thEkuruthi
sellathisai yOduvit tAdusing kAramuka – vadivElA
theLLuthamizh pAdiyit tAsaikoN dAdasasi
valliyodu kUdithik kOrkaLkoN dAdaiyal
thillainakar kOpurath thEmakizhn thEkulavu – perumALE.
English Easy Version
mullai malar pOlum muththAy uthirnthAna nakai
vaLLai kodi pOlum nal kAthu ilangu Adu kuzhai
mullai malar mAlai suRRu Adum konthu Arum kuzhal – alai pOthu
am moLku silai vAL nuthal pArvai ampAna kayal
kiLLai kuralAr ithazhp pU enum pOthu mukam
munnal kamukAr kaLam thOy suNangAya mulai malai – yAnai
valla kuvadu Alilai pOlum santhAna vayiRu
uLLa thukil nUl idaik kAma paNdAra alkul
vazhzhai thodaiyAr malark kAl aNinthu Adum – paripura Osai
malli saliyAda pattu Adai koNdAda mayal
thaLLu nadaiyOdu satRE mozhinthu Asai ko(N)du
vallavarkaL pOla pon cURai koNdArkaL mayal – uRavAmO
allal vinai pOka asaththu Athi viNdu Oda naya
uLLam uRavAka vaiththu ALum em thAthai makizh
aL amaiya njAna viththu Othum kanthA kumara – murukOnE
anna nadaiyAL kuRap pAvai panthu Adu viral
ennudaiya thAy veN muththAr kadampu Adu kuzhal
annai vali sEr thanak kOdu iraNdu Ana va(L)Li – maNavALA
sellum uka Ezh kadal pAzhi viNdOdi athira
valla asurar sEnai paddE madinthE kuruthi
sella thisaiyOdu vittu Adu singAra muka – vadivElA
theLLu thamizh pAdiyittu Asai koNdAda sasi
valliyOdu kUdi thikkOrkaL koNdAda iyal
thillai nakar kOpuraththE makizhnthE kulavu(m) – perumALE.