திருப்புகழ் 480 அக்குப் பீளை (சிதம்பரம்)

Thiruppugal 480 Akkuppeelai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தத் தானன தானன தானன
தத்தத் தானன தானன தானன
தத்தத் தானன தானன தானன – தனதான

அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ
டுப்புக் காய்பனி நீர்மயிர் தோல்குடி
லப்புச் சீபுழு வோடடை யார்தசை – யுறமேவி

அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ
ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ
ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி – விரகாளர்

சுக்கத் தாழ்கட லேசுக மாமென
புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள்
தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ – டதனாலே

துக்கத் தேபர வாமல்ச தாசிவ
முத்திக் கேசுக மாகப ராபர
சொர்க்கப் பூமியி லேறிட வேபத – மருள்வாயே

தக்கத் தோகிட தாகிட தீகிட
செக்கச் சேகண தாகண தோகண
தத்தத் தானன டீகுட டாடுடு – வெனதாளந்

தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி
கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட
சத்திக் கேயிரை யாமென வேவிடு – கதிர்வேலா

திக்கத் தோகண தாவென வேபொரு
சொச்சத் தாதையர் தாமென வேதிரு
செக்கர்ப் பாதம தேபதி யாசுதி – யவைபாடச்

செப்பொற் பீலியு லாமயில் மாமிசை
பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு
தெற்குக் கோபுர வாசலில் மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தத் தானன தானன தானன
தத்தத் தானன தானன தானன
தத்தத் தானன தானன தானன – தனதான

அக்குப் பீளை மூளா இளை மூளையொடுப்
புக்(குக்) காய் பனி நீர் மயிர் தோல் குடிலப்
பூச்சி புழுவோடு அடை ஆர் தசை – உற மேவி

அத்திப் பால் பல நாடி குழாய் அள்
வழுப்புச் சார் வலமே விளை ஊளை கொள்
அச்சுத் தோல் குடிலாம் அதிலே பொறி – விரகாளர்

சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என
புக்கிட்டு ஆசை பெ(ண்)ணாசை ம(ண்)ணாசைகள்
தொக்குத் தீ வினை ஊழ் வினை காலமொடு – அதனாலே

துக்கத்தே பரவாமல் சதாசிவ
முத்திக்கே சுகமாக பராபர
சொர்க்கப் பூமியில் ஏறிடவே பதம் – அருள்வாயே

தக்கத் தோகிட தாகிட தீகிட
செக்கச் சேகண தாகண தோகண
தத்தத் தானன டீகுட டாடுடு – என தாளம்

தத்தி சூரர் குழாமொடு தேர் பரி
கெட்டுக் கேவலமாய் கடல் மூழ்கிட
சத்திக்கே இரையாம் எனவே விடு – கதிர் வேலா

திக்கத் தோகண தாவெனவே பொரு
சொச்சத் தாதையர் தாம் எனவே திரு
செக்கர்ப் பாதம் அதே பதியா சு(ரு)தி – அவை பாட

செம் பொன் பீலி உலா மயில் மாமிசை
பக்கத்தே குற மாதொடு சீர் பெறு
தெற்குக் கோபுர வாசலில் மேவிய – பெருமாளே.

English

akkup peeLaimu LAviLai mULaiyo
duppuk kAypani neermayir thOlkudi
lappuc cheepuzhu vOdadai yArthasai – yuRamEvi

aththip pAlpala nAdiku zhAyaLva
zhuppuc chArvala mEviLai yULaiko
Lacchuth thOlkudi lAmathi lEpoRi – virakALar

sukkath thAzhkada lEsuka mAmena
pukkit tAsaipe NAsaima NAsaikaL
thokkuth theevinai yUzhvinai kAlamo – dathanAlE

thukkath thEpara vAmalsa thAsiva
muththik kEsuka mAkapa rApara
sorkkap pUmiyi lERida vEpatha – maruLvAyE

thakkath thOkida thAkida theekida
sekkac chEkaNa thAkaNa thOkaNa
thaththath thAnana deekuda dAdudu – venathALan

thaththic chUrarku zhAmodu thErpari
kettuk kEvala mAykadal mUzhkida
saththik kEyirai yAmena vEvidu – kathirvElA

thikkath thOkaNa thAvena vEporu
socchath thAthaiyar thAmena vEthiru
sekkarp pAthama thEpathi yAsuthi – yavaipAdac

cheppoR peeliyu lAmayil mAmisai
pakkath thEkuRa mAthodu seerpeRu
theRkuk kOpura vAsalil mEviya – perumALE.

English Easy Version

akkup peeLai mULA iLai mULaiyodup
puk(kuk) kAy pani neer mayir thOl kudilap
pUcchi puzhuvOdu adai Ar thasai – uRa mEvi

aththip pAl pala nAdi kuzhAy aL
vazhuppuc chAr valamE viLai ULai koL
acchuth thOl kudilAm athilE poRi – virakALar

sukkaththu Azh kadalE sukamAm ena
pukkittu Asai pe(N)NAsai ma(N)NAsaikaL
thokkuth thee vinai Uzh vinai kAlamodu – athanAlE

thukkaththE paravAmal sathAsiva
muththikkE sukamAka parApara
sorkkap pUmiyil ERidavE patham – aruLvAyE

thakkath thOkida thAkida theekida
sekkac chEkaNa thAkaNa thOkaNa
thaththath thAnana deekuda dAdudu – ena thALam

thaththi cUrar kuzhAmodu thEr pari
kettuk kEvalamAy kadal mUzhkida
saththikkE iraiyAm enavE vidu – kathirvElA

thikkath thOkaNa thAvenavE poru
socchath thAthaiyar thAm enavE thiru
sekkarp pAtham athE pathiyA su(ru)thi – avai pAda

sem pon peeli ulA mayil mAmisai
pakkaththE kuRa mAthodu seer peRu
theRkuk kOpura vAsalil mEviya – perumALE.