Thiruppugal 481 Araththoduani
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன – தனதான
ஆரத் தோடணி மார்பிணை யானைகள்
போருக் காமென மாமுலை யேகொடு
ஆயத் தூசினை மேவிய நூலிடை – மடமாதர்
ஆலைக் கோதினி லீரமி லாமன
நேசத் தோடுற வானவர் போலுவர்
ஆருக் கேபொரு ளாமென வேநினை – வதனாலே
காருக் கேநிக ராகிய வோதிய
மாழைத் தோடணி காதொடு மோதிய
காலத் தூதர்கை வேலெனு நீள்விழி – வலையாலே
காதற் சாகர மூழ்கிய காமுகர்
மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள்
காமத் தோடுற வாகையி லாவருள் – புரிவாயே
சூரர்க் கேயொரு கோளரி யாமென
நீலத் தோகைம யூரம தேறிய
தூளிக் கேகடல் தூரநி சாசரர் – களமீதே
சோரிக் கேவெகு ரூபம தாவடு
தானத் தானன தானன தானன
சூழிட் டேபல சோகுக ளாடவெ – பொரும்வேலா
வீரத் தால்வல ராவண னார்முடி
போகத் தானொரு வாளியை யேவிய
மேகத் தேநிக ராகிய மேனியன் – மருகோனே
வேதத் தோன்முத லாகிய தேவர்கள்
பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்
மேலைக் கோபுர வாசலில் மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன – தனதான
ஆரத்தோடு அணி மார்பு இணை யானைகள்
போருக்கு ஆம் என மா முலையே கொடு
ஆயத் தூசினை மேவிய நூல் இடை – மட மாதர்
ஆலைக் கோதினில் ஈரம் இலா மன
நேசத்தோடு உறவானவர் போலுவர்
ஆருக்கே பொருளாம் எனவே நினைவு – அதனாலே
காருக்கே நிகராகிய ஓதிய
மாழைத் தோடு அணி காதொடு மோதிய
காலத் தூதர் கை வேல் எனு நீள் விழி – வலையாலே
காதல் சாகர மூழ்கிய காமுகர்
மேலிட்டே எறி கீலிகள் நீலிகள்
காமத்தோடு உறவாகை இலா – அருள் புரிவாயே
சூரர்க்கே ஒரு கோளரியாம் என
நீலத் தோகை மயூரம் அது ஏறிய
தூளிக்கே கடல் தூர நிசாசரர் – கள(ம்) மீதே
சோரிக்கே வெகு ரூபமதா(ய்) அடு
தானத் தானன தானன தானன
சூழிட்டே பல சோகுகள் ஆடவெ – பொரும் வேலா
வீரத்தால் வல ராவணனார் முடி
போகத் தான் ஒரு வாளியை ஏவிய
மேகத்தே நிகராகிய மேனியன் – மருகோனே
வேதத்தோன் முதலாகிய தேவர்கள்
பூசித்தே தொழ வாழ் புலி ஊரினில்
மேலைக் கோபுர வாசலில் மேவிய – பெருமாளே.
English
Arath thOdaNi mArpiNai yAnaikaL
pOruk kAmena mAmulai yEkodu
Ayath thUsinai mEviya nUlidai – madamAthar
Alaik kOthini leerami lAmana
nEsath thOduRa vAnavar pOluvar
Aruk kEporu LAmena vEninai – vathanAlE
kAruk kEnika rAkiya vOthiya
mAzhaith thOdaNi kAthodu mOthiya
kAlath thUtharkai vElenu neeLvizhi – valaiyAlE
kAthaR sAkara mUzhkiya kAmukar
mElit tEyeRi keelikaL neelikaL
kAmath thOduRa vAkaiyi lAvaruL – purivAyE
cUrark kEyoru kOLari yAmena
neelath thOkaima yUrama thERiya
thULik kEkadal thUrani sAsarar – kaLameethE
sOrik kEveku rUpama thAvadu
thAnath thAnana thAnana thAnana
sUzhit tEpala sOkuka LAdave – porumvElA
veerath thAlvala rAvaNa nArmudi
pOkath thAnoru vALiyai yEviya
mEkath thEnika rAkiya mEniyan – marukOnE
vEthath thOnmutha lAkiya thEvarkaL
pUsith thEthozha vAzhpuli yUrinil
mElaik kOpura vAsalil mEviya – perumALE.
English Easy Version
AraththOdu aNi mArpu iNai yAnaikaL
pOrukku Am ena mA mulaiyE kodu
Ayath thUsinai mEviya nUl idai – mada mAthar
Alaik kOthinil eeram ilA mana
nEsaththOdu uRavAnavar pOluvar
ArukkE poruLAm enavE ninaivu – athanAlE
kArukkE nikarAkiya Othiya
mAzhaith thOdu aNi kAthodu mOthiya
kAlath thUthar kai vEl enu neeL vizhi – valaiyAlE
kAthal sAkara mUzhkiya kAmukar
mElittE eRi keelikaL neelikaL
kAmaththOdu uRavAkai ilA – aruL purivAyE
cUrarkkE oru kOLariyAm ena
neelath thOkai mayUram athu ERiya
thULikkE kadal thUra nisAsarar – kaLa(m)meethE
sOrikkE veku rUpamathA(y) adu
thAnath thAnana thAnana thAnana
sUzhittE pala sOkukaL Adave – porum vElA
veeraththAl vala rAvaNanAr mudi
pOkath thAn oru vALiyai Eviya
mEkaththE nikarAkiya mEniyan – marukOnE
vEthaththOn muthalAkiya thEvarkaL
pUsiththE thozha vAzh puli Urinil
mElaik kOpura vAsalil mEviya – perumALE.