திருப்புகழ் 482 காதைக் காதி (சிதம்பரம்)

Thiruppugal 482 Kadhaikkadhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத் தான தத்த தானத் தான தத்த
தானத் தான தத்த – தனதான

காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற
காமப் பூச லிட்டு – மதியாதே

காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி
னீழற் கேத ருக்கி – விளையாடிச்

சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த
சேலொத் தேவ ருத்தும் – விழிமானார்

தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க
தீமைக் காவி தப்ப – நெறிதாராய்

மாதைக் காத லித்து வேடக் கான கத்து
வாசத் தாள்சி வப்ப – வருவோனே

வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி
மாளப் போர்தொ லைத்த – வடிவேலா

வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன்
வீரத் தேர்ம றைத்த – புலியூர்வாழ்

மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க
வேதத் தோர்து தித்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத் தான தத்த தானத் தான தத்த
தானத் தான தத்த – தனதான

காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி அற்ற
காமப் பூசல் இட்டு – மதியாதே

கார் ஒத்த ஏய் நிறத்த ஓதிக் காவனத்தின்
நீழற்கே தருக்கி – விளையாடி

சேதித்தே கருத்தை நேர் உற்றே பெருத்த
சேல் ஒத்தே வருத்தும் – விழி மானார்

தேமல் பார வெற்பில் மூழ்கித் தாபம் மிக்க
தீமைக்கு ஆவி தப்ப – நெறி தாராய்

மாதைக் காதலித்து வேடக் கானகத்து
வாசத் தாள் சிவப்ப – வருவோனே

வாரிக்கே ஒளித்த மாயச் சூரை வெட்டி
மாளப் போர் தொலைத்த – வடிவேலா

வீதித் தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன்
வீரத் தேர் மறைத்த – புலியூர் வாழ்

மேலைக் கோபுரத்து மேவிக் கேள்வி மிக்க
வேதத்தோர் துதித்த – பெருமாளே.

English

kAthaik kAthi meththa mOthik kELvi yatRa
kAmap pUsa littu – mathiyAthE

kAroth thEyni Raththa vOthik kAva naththi
neezhaR kEtha rukki – viLaiyAdic

chEthith thEka ruththai nErut REpe ruththa
sEloth thEva ruththum – vizhimAnAr

thEmaR pAra veRpil mUzhkith thApa mikka
theemaik kAvi thappa – neRithArAy

mAthaik kAtha liththu vEdak kAna kaththu
vAsath thALsi vappa – varuvOnE

vArik kEyo Liththa mAyac cUrai vetti
mALap pOrtho laiththa – vadivElA

veethith thErna daththu thULath thAla rukkan
veerath thErma Raiththa – puliyUrvAzh

mElaik kOpu raththu mEvik kELvi mikka
vEthath thOrthu thiththa – perumALE.

English Easy Version

kAthaik kAthi meththa mOthik kELvi atRa
kAmap pUsal ittu – mathiyAthE

kAr oththa Ey niRaththa Othik kAvanaththin
neezhaRkE tharukki – viLaiyAdi

sEthiththE karuththai nEr utRE peruththa
sEl oththE varuththum – vizhi mAnAr

thEmal pAra veRpil mUzhkith thApam mikka
theemaikku Avi thappa – neRi thArAy

mAthaik kAthaliththu vEdak kAnakaththu
vAsath thAL sivappa – varuvOnE

vArikkE oLiththa mAyac cUrai vetti
mALap pOr tholaiththa – vadivElA

veethith thEr nadaththu thUL aththAl arukkan
veerath thEr maRaiththa – puliyUr vAzh

mElaik kOpuraththu mEvik kELvi mikka
vEthaththOr thuthiththa – perumALE.