திருப்புகழ் 483 கொள்ளை ஆசை (சிதம்பரம்)

Thiruppugal 483 Kollaiasai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தய்ய தானத் தானன தானன
தய்ய தானத் தானன தானன
தய்ய தானத் தானன தானன – தனதான

கொள்ளை யாசைக் காரிகள் பாதக
வல்ல மாயக் காரிகள் சூறைகள்
கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் – விழியாலே

கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்
வெல்லு மோகக் காரிகள் சூதுசொல்
கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு – மவர்போலே

உள்ள நோவைத் தேயுற வாடியர்
அல்லை நேரொப் பாமன தோஷிகள்
உள்வி ரோதக் காரிகள் மாயையி – லுழல்நாயேன்

உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு
கையு நீபத் தார்முக மாறுமுன்
உள்ள ஞானப் போதமு நீதர – வருவாயே

கள்ள மாயத் தாருகன் மாமுடி
துள்ள நீலத் தோகையின் மீதொரு
கையின் வேல்தொட் டேவிய சேவக – முருகோனே

கல்லி லேபொற் றாள்பட வேயது
நல்ல ரூபத் தேவர கானிடை
கெளவை தீரப் போகுமி ராகவன் – மருகோனே

தெள்ளி யேமுற் றீரமு னோதிய
சொல்வ ழாமற் றானொரு வானுறு
செல்வி மார்பிற் பூஷண மாயணை – மணவாளா

தெள்ளு மேனற் சூழ்புன மேவிய
வள்ளி வேளைக் காரம னோகர
தில்லை மேலைக் கோபுர மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தய்ய தானத் தானன தானன
தய்ய தானத் தானன தானன
தய்ய தானத் தானன தானன – தனதான

கொள்ளை ஆசைக் காரிகள் பாதக
வல்ல மாயக் காரிகள் சூறைகள்
கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் – விழியாலே

கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்
வெல்லும் மோகக் காரிகள் சூது சொல்
கொவ்வை வாய் நிட்டூரிகள் மேல் விழும் – அவர் போலே

உள்ள நோ(வ) வைத்து உறவாடியர்
அல்லை நேர் ஒப்பா(ம்) மன தோஷிகள்
உள் விரோதக் காரிகள் மாயையில் – உழல் நாயேன்

உய்யவே பொன் தோள்களும் ஆறு இரு
கையும் நீபத் தார் முகம் ஆறும் முன்
உள்ள ஞானப் போதமும் நீ தர – வருவாயே

கள்ள மாயத் தாருகன் மா முடி
துள்ள நீலத் தோகையின் மீது ஒரு
கையில் வேல் தொட்டு ஏவிய சேவக – முருகோனே

கல்லிலே பொன் தாள் படவே அது
நல்ல ரூபத்தே வர கான் இடை
கெளவை தீரப் போகும் இராகவன் – மருகோனே

தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய
சொல் வழாமல் தான் ஒரு வான் உறு
செல்வி மார்பில் பூஷணமாய் அணை – மணவாளா

தெள்ளும் ஏனல் சூழ் புன(ம்) மேவிய
வள்ளி வேளைக்கார மனோகர
தில்லை மேலைக் கோபுரம் மேவிய – பெருமாளே.

English

koLLai yAsaik kArikaL pAthaka
valla mAyak kArikaL cURaikaL
koLLum Ayak kArikaL veeNikaL – vizhiyAlE

kollum leelaik kArikaL yAraiyum
vellu mOkak kArikaL cUthusol
kovvai vAynit tUrikaL mElvizhu – mavarpOlE

uLLa nOvaith thEyuRa vAdiyar
allai nErop pAmana thOshikaL
uLvi rOthak kArikaL mAyaiyi – luzhalnAyEn

uyya vEpot ROLkaLum ARiru
kaiyu neepath thArmuka mARumun
uLLa njAnap pOthamu neethara – varuvAyE

kaLLa mAyath thArukan mAmudi
thuLLa neelath thOkaiyin meethoru
kaiyin vElthot tEviya sEvaka – murukOnE

kalli lEpot RALpada vEyathu
nalla rUpath thEvara kAnidai
kauvai theerap pOkumi rAkavan – marukOnE

theLLi yEmut Reeramu nOthiya
solva zhAmat RAnoru vAnuRu
selvi mArpiR pUshaNa mAyaNai – maNavALA

theLLu mEnaR sUzhpuna mEviya
vaLLi vELaik kArama nOkara
thillai mElaik kOpura mEviya – perumALE.

English Easy Version

koLLai Asaik kArikaL pAthaka
valla mAyak kArikaL cURaikaL
koLLum Ayak kArikaL veeNikaL – vizhiyAlE

kollum leelaik kArikaL yAraiyum
vellum mOkak kArikaL cUthu sol
kovvai vAy nittUrikaL mEl vizhum – avar pOlE

uLLa nO(va)vaiththu uRavAdiyar
allai nEr oppA(m) mana thOshikaL
uL virOthak kArikaL mAyaiyil – uzhal nAyEn

uyyavE pon thOLkaLum ARu iru
kaiyum neepath thAr mukam ARum mun
uLLa njAnap pOthamum nee thara – varuvAyE

kaLLa mAyath thArukan mA mudi
thuLLa neelath thOkaiyin meethu
oru kaiyil vEl thottu Eviya sEvaka – murukOnE

kallilE pon thAL padavE athu
nalla rUpaththE vara kAn idai
kauvai theerap pOkum irAkavan – marukOnE

theLLi EmutRu eeram mun Othiya
sol vazhAmal thAn oru vAn uRu
selvi mArpil pUshaNamAy aNai – maNavALA

theLLum Enal sUzh puna(m) mEviya
vaLLi vELaikkAra manOkara
thillai mElaik kOpuram mEviya – perumALE.