Thiruppugal 484 Thadhumamalar
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன – தனதான
தாது மாமலர் முடியா லேபத
றாத நூபுர அடியா லேகர
தாள மாகிய நொடியா லேமடி – பிடியாலே
சாடை பேசிய வகையா லேமிகு
வாடை பூசிய நகையா லேபல
தாறு மாறுசொல் மிகையா லேயன – நடையாலே
மோதி மீறிய முலையா லேமுலை
மீதி லேறிய கலையா லேவெகு
மோடி நாணய விலையா லேமயல் – தருமானார்
மோக வாரிதி தனிலே நாடொறு
மூழ்கு வேனுன தடியா ராகிய
மோன ஞானிக ளுடனே சேரவு – மருள்வாயே
காத லாயருள் புரிவாய் நான்மறை
மூல மேயென வுடனே மாகரி
காண நேர்வரு திருமால் நாரணன் – மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ்சபை
நாத னார்தம திடமே வாழ்சிவ
காம நாயகி தருபா லாபுலி – சையில்வாழ்வே
வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புனைமூ வாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை – புரிகோவே
வீறு சேர்வரை யரசாய் மேவிய
மேரு மால்வரை யெனநீள் கோபுர
மேலை வாயிலின் மயில்மீ தேறிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன
தான தானன தனனா தானன – தனதான
தாது மா மலர் முடியாலே
பதறாத நூபுர அடியாலே கர
தாளமாகிய நொடியாலே மடி – பிடியாலே
சாடை பேசிய வகையாலே மிகு
வாடை பூசிய நகையாலே பல
தாறுமாறு சொல் மிகையாலே அ(ன்)ன – நடையாலே
மோதி மீறிய முலையாலே முலை
மீதில் ஏறிய கலையாலே வெகு
மோடி நாணய(ம்) விலையாலே மயல் – தரு(ம்) மானார்
மோக வாரிதி தனிலே நாள் தொறு(ம்)
மூழ்குவேன் உனது அடியார் ஆகிய
மோன ஞானிகளுடனே சேரவும் – அருள்வாயே
காதலாய் அருள் புரிவாய் நான் மறை
மூலமே என உடனே மா கரி
காண நேர் வரு திருமால் நாரணன் – மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ் சபை
நாதனார் தமது இடமே வாழ் சிவ
காம நாயகி தரு பாலா புலிசையில் – வாழ்வே
வேத நூன் முறை வழுவாமே தினம்
வேள்வியால் எழில் புனை மூவாயிர(ம்)
மேன்மை வேதியர் மிகவே பூசனை – புரிகோவே
வீறு சேர் வரை அரசாய் மேவிய
மேரு மால் வரை என நீள் கோபுர
மேலை வாயிலின் மயில் மீது ஏறிய – பெருமாளே.
English
thAthu mAmalar mudiyA lEpatha
RAtha nUpura adiyA lEkara
thALa mAkiya nodiyA lEmadi – pidiyAlE
sAdai pEsiya vakaiyA lEmiku
vAdai pUsiya nakaiyA lEpala
thARu mARusol mikaiyA lEyana – nadaiyAlE
mOthi meeRiya mulaiyA lEmulai
meethi lERiya kalaiyA lEveku
mOdi nANaya vilaiyA lEmayal – tharumAnAr
mOka vArithi thanilE nAdoRu
mUzhku vEnuna thadiyA rAkiya
mOna njAnika LudanE sEravu – maruLvAyE
kAtha lAyaruL purivAy nAnmaRai
mUla mEyena vudanE mAkari
kANa nErvaru thirumAl nAraNan – marukOnE
kAthal mAthavar valamE cUzhsapai
nAtha nArthama thidamE vAzhsiva
kAma nAyaki tharubA lApuli – saiyilvAzhvE
vEtha nUnmuRai vazhuvA mEthinam
vELvi yAlezhil punaimU vAyira
mEnmai vEthiyar mikavE pUsanai – purikOvE
veeRu sErvarai yarasAy mEviya
mEru mAlvarai yenaneeL kOpura
mElai vAyilin mayilmee thERiya – perumALE.
English Easy Version
thAthu mA malar mudiyAlE patha
RAtha nUpura adiyAlE kara
thALamAkiya nodiyAlE madi – pidiyAlE
sAdai pEsiya vakaiyAlE miku
vAdai pUsiya nakaiyAlE pala
thARumARu sol mikaiyAlE a(n)na – nadaiyAlE
mOthi meeRiya mulaiyAlE mulai
meethil ERiya kalaiyAlE veku
mOdi nANaya(m) vilaiyAlE mayal – tharu(m) mAnAr
mOka vArithi thanilE nAL thoRu(m)
mUzhkuvEn unathu adiyAr Akiya
mOna njAnikaLudanE sEravum – aruLvAyE
kAthalAy aruL purivAy nAn maRai
mUlamE ena udanE mA kari
kANa nEr varu thirumAl nAraNan – marukOnE
kAthal mAthavar valamE cUzh sapai
nAthanAr thamathu idamE vAzh
sivakAma nAyaki tharu bAlA – pulisaiyil vAzhvE
vEtha nUn muRai vazhuvAmE thinam
vELviyAl ezhil punai mUvAyira(m)
mEnmai vEthiyar mikavE pUsanai – purikOvE
veeRu sEr varai arasAy mEviya
mEru mAl varai ena neeL kOpura
mElai vAyilin mayil meethu ERiya – perumALE.