திருப்புகழ் 485 எலுப்புத் தோல் (சிதம்பரம்)

Thiruppugal 485 elupputh thOl (chidhambaram)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தத் தானன தானன தானன
தனத்தத் தானன தானன தானன
தனத்தத் தானன தானன தானன – தந்ததான

எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை
இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள்
இரத்தச் சாகர நீர்மல மேவிய – கும்பியோடை

இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி
உளைப்புச் சூலையொ டேவலு வாகிய
இரைப்புக் கேவல மூலவி யாதியொ – டண்டவாதங்

குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ
டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை
குருட்டுக் கால்முட மூமையு ளூடறு – கண்டமாலை

குடிப்புக் கூனமி தேசத மாமென
எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு
னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ – அன்புதாராய்

கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி
ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட – கண்டவேலா

கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ
யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி
கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி – பங்கின்மேவும்

வலித்துத் தோள்மலை ராவண னானவன்
எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து
மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர – சம்புபாலா

மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை
அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய
வடக்குக் கோபுர வாசலில் மேவிய – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனத்தத் தானன தானன தானன
தனத்தத் தானன தானன தானன
தனத்தத் தானன தானன தானன – தந்ததான

எலுப்புத் தோல் மயிர் நாடி குழாம் மிடை
இறுக்குச் சீ புழுவோடு அடை மூளைகள்
இரத்தச் சாகர நீர் மலம் மேவிய – கும்பி ஓடை

இளைப்புச் சோகைகள் வாதம் விலா வலி
உளைப்புச் சூலையொடே வலுவாகிய
இரைப்பு கேவல மூல வியாதியொடு – அண்ட வாதம்

குலைப்புக் காய் கனல் நீரிழிவு ஈளையொடு
அளைப்பு காது அடை கூனல் விசூசிகை
குருட்டுக் கால்முடம் ஊமை உள் ஊடு அறு – கண்டமாலை

குடிப் புக்கு ஊனம் இதே சதமாம் என
எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன்
உன் இடத்துத் தாள் பெற ஞான சதாசிவ – அன்பு தாராய்

கெலிக்கப் போர் பொரு சூரர் குழாம் உமிழ்
இரத்தச் சேறு எழ தேர் பரி யாளிகள்
கெடுத்திட்டே கடல் சூர் கிரி தூள்பட – கண்ட வேலா

கிளர் பொன் தோளி சராசரம் மேவி எய்
அசைத்துப் பூசைகொள் ஆயி பராபரி
கிழப் பொன் காளை மேல் ஏறும் எம் – நாயகி பங்கின் மேவும்

வலித்துத் தோள் மலை ராவணன் ஆனவன்
எடுத்தப் போது உடல் கீழ் விழவே செய்து
மகிழ்ப் பொன் பாத சிவாய நமோ அர – சம்பு பாலா

மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை
அணைத்து சீர் புலியூர் பரமாகிய
வடக்குக் கோபுர வாசலில் மேவிய – தம்பிரானே.

English

elupputh thOl mayir nAdi kuzhAm idai
iRukku chee puzhuvOd adai mULaigaL
iraththa sAgara neer mala mEviya – kumbiyOdai

iLaippu sOgaigaL vAtham vilA vali
uLaippu sUlaiyodE valu vAgiya
iraippuk kEvala mUla viyAdhiyodu – aNdavAtham

kulaippuk kAy kanal neerizhiv eeLaiyodu
aLaippuk kAdhadai kUnal visUsigai
kuruttuk kAl mudam UmaiyuL UdaRu – kaNta mAlai

kudippuk kUnam idhE satham Amena
eduththup pAzh vinaiyAl uzhal nAyen
unidaththu thALpeRa nyAna sadhAsiva – anbuthArAy

kelikkap pOr poru sUrar kuzhAm umizh
iraththa sERezha thEr pari yALigaL
keduththittE kadal sUr giri thUL pada – kaNda vElA

kiLarp potrOLi charAchara mEviye
asaiththup pUjaikoL Ayi parApari
kizhappoR kALai melERum enAyaki – panginmEvum

valiththuth thOLmalai rAvaNan Anavan
eduththap pOdhudal keezh vizhavE seydhu
magizh poRpAdha sivAya namO ara – sambu bAlA

malaik oppA mulaiyAL kuRamAdhinai
aNaiththu seerpuliyUr paramAgiya
vadakku gOpura vAsalil mEviya – thambirAnE.

English Easy Version

elupputh thOl mayir nAdi kuzhAm idai
iRukku chee puzhuvOd adai mULaigaL
iraththa sAgara neer mala mEviya – kumbiyOdai

iLaippu sOgaigaL vAtham vilA vali
uLaippu sUlaiyodE valu vAgiya
iraippu kEvala mUla viyAdhiyodu – aNdavAtham

kulaippuk kAy kanal neerizhiv eeLaiyodu
aLaippu kAdhadai kUnal visUsigai
kuruttuk kAl mudam UmaiyuL UdaRu – kaNta mAlai

kudippuk kUnam idhE satham Amena
eduththu pAzh vinaiyAl uzhal nAyen
unidaththu thALpeRa nyAna sadhAsiva – anbuthArAy

kelikkap pOr poru sUrar kuzhAm umizh
iraththa sERezha thEr pari yALigaL
keduththittE kadal sUr giri thUL pada – kaNda vElA

kiLarp potrOLi charAchara mEviye
asaiththup pUjaikoL Ayi parApari
kizhappoR kALai melERum enAyaki – panginmEvum

valiththuth thOLmalai rAvaNan Anavan
eduththap pOdhu udal keezh vizhavE seydhu
magizh poRpAdha sivAya namO ara – sambu bAlA

malaik oppA mulaiyAL kuRamAdhinai
aNaiththu seerpuliyUr paramAgiya
vadakku gOpura vAsalil mEviya – thambirAnE.