திருப்புகழ் 489 இணங்கித் தட்பொடு (சிதம்பரம்)

Thiruppugal 489 Inangiththatpodu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன – தனதான

இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்
மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள்
இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள் – கடிதாகும்

இடும்பைப் பற்றிய தாமென மேயினர்
பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர்
இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் – எவரேனும்

பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள்
மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள்
பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் – அவரோடே

பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர
கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன
பதம்பற் றிப்புக ழானது கூறிட – அருள்வாயே

வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்
சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ
மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் – மருகோனே

மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர்
குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை
வளைந்திட் டுக்கள மீதினி லேகொல – விடும்வேலா

பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள்
பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ
பிளந்திட் டுப்பல மாமயி லேறிய – முருகோனே

பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள்
சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு
பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன – தனதான

இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்
மணந்திட்டுச் சுகமாய் விளையாடிகள்
இளம் சொல் செப்பிகள் சாதனை வீணிகள் – கடிது ஆகும்

இடும்பைப் பற்றிய தாம் என மேயினர்
பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர்
இரும்பில் பற்றிய கூர் விழி மாதர்கள் – எவரேனும்

பணம் சுற்றிக் கொள் உபாய உதாரிகள்
மணம் கட்டுக் குழல் வாசனை வீசிகள்
பலம் செப்பித் தர மீள அழையாதவர் – அவரோடே

பதம் துய்த்துக் கொடு தீமைய மா நரகு
அடைந்திட்டுச் சவமாகி விடாது உன(து)
பதம் பற்றிப் புகழானது கூறிட – அருள்வாயே

வணங்கச் சித்தம் இலாத இராவணன்
சிரம் பத்துக் கெட வாளி கடாவியெ
மலங்கப் பொக்கரை ஈடு அழி மாதவன் – மருகோனே

மதம் பட்டுப் பொரு சூரபன்ம(ன்) ஆதியோர்
குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை
வளைந்திட்டுக் களம் மீதினிலே கொ(ல்)ல – விடும் வேலா

பிணம் பற்றிக் கழுகோடு பல் கூளிகள்
பிடுங்கிக் கொத்திடவே அமர் ஆடியெ
பிளந்திட்டுப் பல மா மயில் ஏறிய – முருகோனே

பிரிந்திட்டுப் பரிவாகிய ஞானிகள்
சிலம்பு அத்தக் கழல் சேரவெ நாடிடு
பெரும் பற்றப் புலியூர் தனில் மேவிய – பெருமாளே.

English

iNangith thatpodu pAlmozhi pEsikaL
maNanthit tucchuka mAyviLai yAdikaL
iLanchoR cheppikaL sAthanai veeNikaL – kadithAkum

idumpaip patRiya thAmena mEyinar
peruchoR piththaLai thAnumvai yAthavar
irumpiR patRiya kUrvizhi mAtharkaL – evarEnum

paNamchut RikkoLu pAyavu thArikaL
maNamkat tukkuzhal vAsanai veesikaL
palanchep piththara meeLazhai yAthavar – avarOdE

pathanthuyth thukkodu theemaiya mAnara
kadainthit tucchava mAkivi dAthuna
pathampat Rippuka zhAnathu kURida – aruLvAyE

vaNangac chiththami lAthai rAvaNan
sirampath thukkeda vALika dAviye
malangap pokkarai yeedazhi mAdhavan – marukOnE

mathampat tupporu cUrapan mAthiyar
kulamkot taththikal kURiya mOdarai
vaLainthit tukkaLa meethini lEkola – vidumvElA

piNampat Rikkazhu kOdupal kULikaL
pidungik koththida vEyama rAdiye
piLanthit tuppala mAmayi lERiya – murukOnE

pirinthit tuppari vAkiya njAnikaL
silampath thakkazhal sErave nAdidu
perumpat Rappuli yUrthanil mEviya – perumALE.

English Easy Version

iNangith thatpodu pAlmozhi pEsikaL
maNanthittuc chukamAy viLaiyAdikaL
iLam choR cheppikaL sAthanai veeNikaL – kadithu Akum

idumpaip patRiya thAm ena mEyinar
perum sol piththaLai thAnum vaiyAthavar
irumpil patRiya kUr vizhi mAtharkaL – evarEnum

paNam sutRik koL upAya uthArikaL
maNam kattuk kuzhal vAsanai veesikaL
palam seppith thara meeLa azhaiyAthavar – avarOdE

patham thuyththuk kodu theemaiya mA naraku
adainthittuc chavamAki vidAthu una(thu)
patham patRip pukazhAnathu kURida – aruLvAyE

vaNangac chiththam ilAtha irAvaNan
siram paththuk keda vALi kadAviye
malangap pokkarai eedu azhi mAdhavan – marukOnE

matham pattup poru cUrapanma(n) AthiyOr
kulam kottaththu ikal kURiya mOdarai
vaLainthittuk kaLam meethinilE ko(l)la – vidum vElA

piNam patRik kazhukOdu pal kULikaL
pidungik koththidavE amar Adiye
piLanthittup pala mA mayil Eriya – murukOnE

pirinthittup parivAkiya njAnikaL
silampu aththak kazhal sErave nAdidu
perum patRap puliyUr thanil mEviya – perumALE.