Thiruppugal 490 Vidungkaikkuoththa
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன – தனதான
விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட
மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும்
விழுங்கப் பட்டற வேயற லோதியர் – விழியாலே
விரும்பத் தக்கன போகமு மோகமும்
விளம்பத் தக்கன ஞானமு மானமும்
வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் – விடுநாளில்
இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்
கிடந்திட் டுத்தம ரானவர் கோவென
இடங்கட் டிச்சுடு காடுபு காமுன – மனதாலே
இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்
இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர – இசைவாயே
கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்
நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய
குரங்கைச் செற்றும கோததி தூளெழ – நிருதேசன்
குலங்கட் பட்டநி சாசரர் கோவென
இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய
குமண்டைக் குத்திர ராவண னார்முடி – அடியோடே
பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி
ப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல்
ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென – விருதூதும்
ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி
ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ
பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன
தனந்தத் தத்தன தானன தானன – தனதான
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம்
அடங்கிக் கைச் சிறையான அநேகமும்
விழுங்கப்பட்டு அறல் அறவே ஓதியர் – விழியாலே
விரும்பத் தக்கன போகமும் மோகமும்
விளம்பத் தக்கன ஞானமும் மானமும்
வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர் – விடும் நாளில்
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல்
கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என
இடம் கட்டி சுடு காடு புகா முனம் – மனதாலே
இறந்திட்டுப் பெறவே கதியாயினும்
இருந்திட்டுப் பெறவே மதியாயினும்
இரண்டில் தக்கது ஒரு ஊதியம் நீ தர – இசைவாயே
கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன்
நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய
குரங்கைச் செற்று மகா உததி தூள் எழ – நிருதேசன்
குலம் கண் பட்ட நிசாசரர் கோ என
இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய
குமண்டைக் குத்திர ராவணனார் முடி – அடியோடே
பிடுங்க தொட்ட சர அதிபனார் அதி
ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா
இயல் ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என – விருது ஊதும்
ப்ரசண்டச் சொல் சிவ வேத சிகாமணி
ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ
பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய – பெருமாளே.
English
vidungkaik koththaka dAvudai yAnida
madangik kaicciRai yAnA nEkamum
vizhungkap pattaRa vEyaRa lOthiyar – vizhiyAlE
virumpath thakkana pOkamu mOkamum
viLampath thakkana njAnamu mAnamum
veRunjcuth thaccala mAyveLi yAyuyir – vidunALil
idungkat taikkirai yAyadi yEnudal
kidanthit tuththama rAnavar kOvena
idangkat ticcudu kAdupu kAmuna – manathAlE
iRanthit tuppeRa vEkathi yAyinum
irunthit tuppeRa vEmathi yAyinum
iraNdit Rakkatho rUthiyam neethara – isaivAyE
kodungkaip pattama rAmara mEzhudan
nadungac cukriva nOdama rAdiya
kurangais cetRuma kOthathi thULezha – niruthEsan
kulangkat pattani sAsarar kOvena
ilangaik kuttazha lOnezha neediya
kumaNdaik kuththira rAvaNa nArmudi – adiyOdE
pidungath thottasa rAthipa nArathi
priyang kot takkanan mAmaru kAiyal
prapanjath thukkoru pAvala nArena – viruthUthum
prasaNdac coRciva vEthasi kAmaNi
prapanthath thukkoru nAthasa thAsiva
perumpat Rappuli yUrthanil mEviya – perumALE.
English Easy Version
vidungkaik koththaka dAvudai yAnida
madangik kaicciRai yAnA nEkamum
vizhungkap pattaRa vEyaRa lOthiyar – vizhiyAlE
virumpath thakkana pOkamu mOkamum
viLampath thakkana njAnamu mAnamum
veRunjcuth thaccala mAyveLi yAyuyir – vidunALil
idungkat taikkirai yAyadi yEnudal
kidanthit tuththama rAnavar kOvena
idangkat ticcudu kAdupu kAmunam – manathAlE
iRanthit tuppeRa vEkathi yAyinum
irunthit tuppeRa vEmathi yAyinum
iraNdit Rakkatho rUthiyam neethara – isaivAyE
kodungkaip pattama rAmara mEzhudan
nadunga cukriva nOdama rAdiya
kurangais cetRu ma kOthathi thULezha – niruthEsan
kulangkat patta nisAsarar kOvena:
ilangaik kuttazha lOnezha neediya
kumaNdaik kuththira rAvaNa nArmudi – adiyOdE
pidunga thottasa rAthipa nArathi
priyang kot takkanan mAmaru kA
iyal prapanjath thukkoru pAvala nArena – viruthUthum
prasaNdac coRciva vEthasi kAmaNi
prapanthath thukkoru nAthasa thAsiva
perumpat Rappuli yUrthanil mEviya – perumALE.