திருப்புகழ் 491 கொந்தள வோலைகள் ஆட (சிதம்பரம்)

Thiruppugal 491 Kondhalavolaigalada

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம் – தனதான

கொந்தள வோலைக ளாடப்பண்
சங்கொளி போல்நகை வீசித்தண்
கொங்கைகள் மார்பினி லாடக்கொண் – டையென்மேகம்

கொங்கெழு தோள்வளை யாடக்கண்
செங்கயல் வாளிகள் போலப்பண்
கொஞ்சிய கோகில மாகப்பொன் – பறிகாரர்

தந்திர மாமென வேகிப்பொன்
தொங்கலொ டாரமு மாடச்செந்
தம்பல வாயொடு பேசிக்கொண் – டுறவாடிச்

சம்பள மீதென வோதிப்பின்
பஞ்சணை மேல்மய லாடச்சஞ்
சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் – செயல்தீராய்

அந்தக னாருயிர் போகப்பொன்
திண்புர மோடெரி பாயப்பண்
டங்கச னாருடல் வேகக்கண் – டழல்மேவி

அண்டர்க ளோடட லார்தக்கன்
சந்திர சூரியர் வீழச்சென்
றம்பல மீதினி லாடத்தன் – குருநாதா

சிந்துர மோடரி தேர்வர்க்கம்
பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன்
சிந்திட வேல்விடு வாகைத்திண் – புயவேளே

செங்குற மாதுமி னாளைக்கண்
டிங்கித மாயுற வாடிப்பண்
செந்தமிழ் மால்புலி யூர்நத்தும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம் – தனதான

கொந்தள ஓலைகள் ஆடப் பண்
சங்கு ஒளி போல் நகை வீசித் தண்
கொங்கைகள் மார்பினில் ஆட – கொண்டை என் மேகம்

கொங்கு எழு தோள் வளை ஆடக் கண்
செம் கயல் வாளிகள் போல பண்
கொஞ்சிய கோகிலமாகப் பொன் – பறிகாரர்

தந்திரமாம் என ஏகி பொன்
தொங்கலொடு ஆரமும் ஆடச் செம்
தம்பல வாயொடு பேசிக் கொண்டு – உறவாடி

சம்பளம் ஈது என ஓதிப் பின்
பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம்
சங்கை இல் மூளியர் பால் வைக்கும் – செயல் தீராய்

அந்தகன் ஆருயிர் போகப் பொன்
திண் புரமோடு எரி பாயப் பண்டு
அங்கசனார் உடல் வேகக் கண் – தழல் மேவி

அண்டர்களோடு அடல் ஆர் தக்கன்
சந்திர சூரியர் வீழச் சென்று
அம்பல மீதினில் ஆடு அத்தன் – குருநாதா

சிந்துரமோடு அரி தேர் வர்க்கம்
பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன்
சிந்திட வேல் விடு வாகைத் திண் – புய வேளே

செம் குற மாது மி(ன்)னாளைக் கண்டு
இங்கிதமாய் உறவாடிப் பண்
செந்தமிழ் மால் புலியூர் நத்தும் – பெருமாளே.

English

konthaLa vOlaika LAdappaN
sangoLi pOlnakai veesiththaN
kongaikaL mArpini lAdakkoN – daiyenmEkam

kongezhu thOLvaLai yAdakkaN
sengayal vALikaL pOlappaN
konjiya kOkila mAkappon – paRikArar

thanthira mAmena vEkippon
thongalo dAramu mAdacchen
thampala vAyodu pEsikkoN – duRavAdic

champaLa meethena vOthippin
panjaNai mElmaya lAdacchanj
changaiyil mULiyar pAlvaikkum – seyaltheerAy

anthaka nAruyir pOkappon
thiNpura mOderi pAyappaN
dangasa nArudal vEkakkaN – dazhalmEvi

aNdarka LOdada lArthakkan
chanthira cUriyar veezhacchen
Rampala meethini lAdaththan – gurunAthA

sinthura mOdari thErvarkkam
pongamo dEzhkadal cUrpathman
sinthida vElvidu vAkaiththiN – puyavELE

senguRa mAthumi nALaikkaN
dingitha mAyuRa vAdippaN
senthamizh mAlpuli yUrnaththum – perumALE.

English Easy Version

konthaLa OlaikaL Adap paN
sangu oLi pOl nakai veesith thaN
kongaikaL mArpinil Ada koNdai – en mEkam

kongu ezhu thOL vaLai Adak kaN
sem kayal vALikaL pOla paN
konjiya kOkilamAkap pon – paRikArar

thanthiramAm ena Eki pon
thongalodu Aramum Adac chem
thampala vAyodu pEsik koNdu – uRavAdi

sampaLam eethu ena Othip pin
panjaNai mEl mayal Adu accham sangai
il mULiyar pAl vaikkum – seyal theerAy

anthakan Aruyir pOkap pon
thiN puramOdu eri pAyap paNdu
angasanAr udal vEkak kaN – thazhal mEvi

aNdarkaLOdu adal Ar thakkan
chanthira cUriyar veezhac chenRu
ampala meethinil Adu aththan – gurunAthA

sinthuramOdu ari thEr varkkam
pongamodu Ezh kadal cUr pathman
sinthida vEl vidu vAkaith thiN – puya vELE

sem kuRa mAthu mi(n)aLaik kaNdu
ingithamAy uRavAdip paN
senthamizh mAl puliyUr naththum – perumALE.