திருப்புகழ் 492 நகையா லெத்திகள் (சிதம்பரம்)

Thiruppugal 492 Nagaiyaleththigal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனா தத்தன தானத்தம்
தனனா தத்தன தானத்தம்
தனனா தத்தன தானத்தம் – தனதான

நகையா லெத்திகள் வாயிற்றம்
பலமோ டெத்திகள் நாணற்றின்
நயனா லெத்திகள் நாறற்புண் – தொடைமாதர்

நடையா லெத்திக ளாரக்கொங்
கையினா லெத்திகள் மோகத்தின்
நவிலா லெத்திகள் தோகைப்பைங் – குழல்மேகச்

சிகையா லெத்திக ளாசைச்சங்
கடியா லெத்திகள் பாடிப்பண்
திறனா லெத்திகள் பாரத்திண் – தெருவூடே

சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொண்
டுழல்வா ருக்குழல் நாயெற்குன்
செயலா லற்புத ஞானத்திண் – கழல்தாராய்

பகையா ருட்கிட வேலைக்கொண்
டுவரா ழிக்கிரி நாகத்தின்
படமோ டிற்றிட சூரைச்சங் – கரிசூரா

பணநா கத்திடை சேர்முத்தின்
சிவகா மிககொரு பாகத்தன்
பரிவால் சத்துப தேசிக்குங் – குரவோனே

சுகஞா னக்கடல் மூழ்கத்தந்
தடியே னுக்கருள் பாலிக்குஞ்
சுடர்பா தக்குக னேமுத்தின் – கழல்வீரா

சுகரே சத்தன பாரச்செங்
குறமா தைக்கள வால்நித்தஞ்
சுகமூழ் கிப்புலி யூர்நத்தும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனா தத்தன தானத்தம்
தனனா தத்தன தானத்தம்
தனனா தத்தன தானத்தம் – தனதான

நகையால் எத்திகள் வாயில்
தம்பலமோடு எத்திகள் நாண் அற்று
இன்நயனால் எத்திகள் நாறல் புண் – தொடை மாதர்

நடையால் எத்திகள் ஆரக்
கொங்கையினால் எத்திகள் மோகத்தின்
நவிலால் எத்திகள் தோகைப் பைம் – குழல் மேகச்

சிகையால் எத்திகள் ஆசைச்
சங்கடியால் எத்திகள் பாடிப் பண்
திறனால் எத்திகள் பாரத் திண் – தெரு ஊடே

சிலர் கூடிக் கொ(ண்)டு ஆடிக் கொண்டு
உழல்வாருக்கு உழல் நாயெற்கு உன்
செயலால் அற்புத ஞானத் திண் – கழல் தாராய்

பகையார் உட்கிட வேலைக் கொண்டு
உவர் ஆழிக் கிரி நாகத்தின்
படமோடு இற்றிட சூரைச் – சங்கரி சூரா

பண நாகத்து இடை சேர் முத்தின்
சிவகாமிக்கு ஒரு பாகத்தன்
பரிவால் சத்து உபதேசிக்கும் – குரவோனே

சுக ஞானக் கடல் மூழ்கத் தந்து
அடியேனுக்கு அருள் பாலிக்கும்
சுடர் பாதக் குகனே முத்தின் – கழல் வீரா

சுக ரேசத் தன பாரச் செம்
குற மாதைக் களவால் நித்தம்
சுகம் மூழ்கிப் புலியூர் நத்தும் – பெருமாளே.

English

nakaiyA leththikaL vAyitRam
palamO deththikaL nANatRin
nayanA leththikaL nARaRpuN – thodaimAthar

nadaiyA leththika LArakkong
kaiyinA leththikaL mOkaththin
navilA leththikaL thOkaippaing – kuzhalmEkac

chikaiyA leththika LAsaicchang
kadiyA leththikaL pAdippaN
thiRanA leththikaL pAraththiN – theruvUdE

silarkU dikkodu AdikkoN
duzhalvA rukkuzhal nAyeRkun
seyalA laRputha njAnaththiN – kazhalthArAy

pakaiyA rutkida vElaikkoN
duvarA zhikkiri nAkaththin
padamO ditRida cUraicchang – karicUrA

paNanA kaththidai sErmuththin
sivakA mikakoru pAkaththan
parivAl saththupa thEsikkum – kuravOnE

sukanjA nakkadal mUzhkaththan
thadiyE nukkaruL pAlikkum
sudarpA thakkuka nEmuththin – kazhalveerA

sukarE saththana pAraccheng
kuRamA thaikkaLa vAlniththam
sukamUzh kippuli yUrnaththum – perumALE.

English Easy Version

nakaiyAl eththikaL vAyil tham
palamOdu eththikaL nAN atRu
innayanAl eththikaL nARal puN – thodai mAthar

nadaiyAl eththikaL Arak kongaiyinAl
eththikaL mOkaththin
navilAl eththikaL thOkaip paim – kuzhal mEkac

chikaiyAl eththikaL Asaic changadiyAl
eththikaL pAdip paN
thiRanAl eththikaL pArath thiN – theru UdE

silar kUdik ko(N)du Adik koNdu
uzhalvArukku uzhal nAyeRku un
seyalAl aRputha njAnath thiN – kazhal thArAy

pakaiyAr utkida vElaik koNdu
uvar Azhik kiri nAkaththin
padamOdu itRida cUraic chang – kari cUrA

paNa nAkaththu idai sEr muththin
sivakAmikku oru pAkaththan
parivAl saththu upathEsikkum – kuravOnE

suka njAnak kadal mUzhkath thanthu
adiyEnukku aruL pAlikkum
sudar pAthak gukanE muththin – kazhal veerA

suka rEsath thana pArac chem
kuRa mAthaik kaLavAl niththam
sukam mUzhkip puliyUr naththum – perumALE.