Thiruppugal 495 Irasabakoththamozhi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன தானனந் தனன
தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன தானனந் தனன
தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன தானனந் தனன – தந்ததான
இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை
யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர்
எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க
ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர்
எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக
ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு – திங்கள்மேவும்
இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி
லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி
யிணைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையி
னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி
யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட
ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச – தங்கமார்பின்
வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின்
வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய
மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை
மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல்
மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென்
வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை – ரம்பைமாதர்
மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு
மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை
வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர்
மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி
வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ்
வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை – தந்துஆள்வாய்
முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள்
முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை
முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை
முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர்
முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ
டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை – யெங்குமோட
முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர்
முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள்
முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள்
முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள்
முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர
முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு – கந்தவேளே
அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி
ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன்
அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க
ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய
அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க
ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் – சந்தவேலா
அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி
யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை
அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி
யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ்
அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ
டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன தானனந் தனன
தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன தானனந் தனன
தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன தானனந் தனன – தந்ததான
இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும் பொன் நீரார்
எழிலி நேர் ஒத்த இருள் அளக பாரச் செயல்கள்
எழுத ஒணாதப் பிறையினார் அரும் புருவர்
எழுது தோடிட்ட செவி பவள நீலக் கொடிகள்
இகலி ஆடப் படிகமோடு அடும் பொன் உரு – திங்கள் மேவும்
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில்
இலகு நாசிக் கமுகு மால சங்கின் ஒளி
இணை சொல் க்ரீவத் தரள இன ஒள் தாலப் பனையின்
இயல் கலா புத்தகம் ஒடு ஏர் சிறந்த அடி
இணை இலா ஆனைக் குவடு எனா ஒளி நிலா துத்தி படர்
இகலி ஆரத் தொடையும் ஆரும் இன்ப ரச – தங்க மார்பில்
வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின்
வயிறு நாபிக் கமலம் ஆம் எனும் சுழிய
மடு உரோமக் கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை
மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல்
மணம் எலாம் உற்ற நறை கமல போதுத் தொடை என்
வளமை ஆர்புக் கதலி சேரு செம் பொன் உடை – ரம்பை
மாதர்
மயல் அதால் இற்று அடியென் அவர்கள் பால் உற்று வெகு
மதன பாணத்தினுடன் மேவி மஞ்ச மிசை
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர்
மயில் புறா தத்தை குயில் போல் இலங்க அமளி
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ்
வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை – தந்து
ஆள்வாய்
முரசு பேரித் திமிலை துடிகள் பூரித் தவில்கள்
முருடு காளப் பறைகள் தாரை கொம்பு வளை
முகடு பேர் உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை
முதுவர் பாடிக் குமுறவே இறந்த அசுரர்
முடிகளோடு எற்றி அரி இரதம் யானைப் பிணம் ஒடு
இவுளி வேலைக் குருதி நீர் மிதந்து திசை – எங்கும் ஓட
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர்
முநிவர் ஆடிப் புகழ வேத விஞ்சையர்கள்
முழுவு வீணைக் கி(ன்)னரி அமுர்த கீதத் தொனிகள்
முறையதாகப் பறைய ஓதி ரம்பையர்கள்
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர
முடி பதாகைப் பொலியவே நடம் குலவு – கந்த வேளே
அரசு மா கற்பகம் ஒடு அகில் பலா இர்ப்பை மகிழ்
அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பை உடன்
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள்
அளிகள் தோகைக் கிளிகள் கோ என பெரிய
அமுர்த வாவிக் கழனி வயலில் வாளைக் கயல்கள்
அடையும் ஏர் அக் கனக நாடெனும் புலியுர் – சந்த வேலா
அழகு மோகக் குமரி விபுதை ஏனல் புனவி
அளி குலா உற்ற குழல் சேர் படம்பு தொடை
அரசி வேதச் சொருபி கமல பாதக் கரவி
அரிய வேடச் சிறுமியாள் அணைந்த புகழ்
அருண ரூபப் பதம் ஒடு இவுளி தோகைச் செயல் கொடு
அணை தெய்வானைத் தனமுமே மகிழ்ந்து புணர் – தம்பிரானே
English
irasapA koththamozhi yamurthamA Nikkanakai
yiNaiyilA saththivizhi yArpasum ponirar
ezhilinE roththairu LaLakapA raccheyalka
LezhuthoNA thappiRaiyi nArarum puruvar
ezhuthuthO dittasevi pavaLanee lakkodika
LikaliyA dappadika mOdadum ponuru – thingaLmEvum
ilavuthA viththaithazh kumizhainE roththaezhi
lilakunA sikkamuku mAlasang kinoLi
yiNaisolkree vaththaraLa vinavoLthA lappanaiyi
niyalkalA puththakamo dErsiRan thavadi
yiNaiyilA naikkuvade noLinilA thuththipada
rikaliyA raththodaiyu mArumin parasa – thangamArpin
varikaLthA piththamulai yisaiyaA litRaLirin
vayiRunA pikkamala mAmenunj chuzhiya
maduvurO makkodiyen aLikaLcUzh vutRanirai
maruvunU loththaidai yArasam paiyalkul
maNamelA mutRanaRai kamalapO thuththodaiyen
vaLamaiyAr pukkathali sErusem ponudai – rampaimAthar
mayalathA litRadiye navarkaLpA lutRuveku
mathanapA Naththinudan mEviman jamisai
vathanamvEr vutRavira mulaikaLpU rikkamidar
mayilpuRA thaththaikuyil pOlilang kamaLi
vasanamAy poththiyidai thuvaLamO kaththuLamizh
vasamelAm vittumaRa vERusin thanaiyai – thanthuALvAy
murasupE riththimilai thudikaLpU riththavilkaL
murudukA LappaRaikaL thAraikom puvaLai
mukadupEr vutRavoli yidikaLpO loththamaRai
muthuvarpA dikkumuRa vEyiRan thasurar
mudikaLO detRiyari yirathamA naippiNamo
divuLivE laikkuruthi neermithan thuthisai – yengumOda
mudukivEl vittuvada kuvaduvAy vittamarar
munivarA dippukazha vEthavin jaiyarkaL
muzhavuvee Naikkinari yamurthakee thaththonikaL
muRaiyathA kappaRaiya vOthiram paiyarkaL
mulaikaLpA rikkavuda nadanamA ditRuvara
mudipathA kaippoliya vEnadang kulavu – kanthavELE
arasumA kaRpakamo dakilpalA irppaimaki
zhazhakuvE yaththikamu kOdaram paiyudan
aLavimE kaththiloLir vanamodA dakkuyilka
LaLikaLthO kaikkiLikaL kOvenam periya
amurthavA vikkazhani vayalilvA Laikkayalka
LadaiyumE rakkanaka nAdenum puliyur – santhavElA
azhakumO kakkumari viputhaiyE naRpunavi
yaLikulA vutRakuzhal sErkadam puthodai
arasivE thacchorupi kamalapA thakkaravi
yariyavE dacchiRumi yALaNain thapukazh
aruNarU pappathamo divuLithO kaiccheyalko
daNaitheyvA naiththanamu mEmakizhn thupuNar – thambirAnE.
English Easy Version
irasa pAku oththa mozhi amurtha mANikka nakai
iNaiyilA saththi vizhiyAr pasum pon neerAr
ezhili nEr oththa iruL aLaka pArac cheyalkaL
ezhutha oNAthap piRaiyinAr arum puruvar
ezhuthu thOditta sevi pavaLa neelak kodikaL
ikali Adap padikamOdu adum pon uru – thingaL mEvum
ilavu thAviththa ithazh kumizhai nEr oththa ezhil
ilaku nAsik kamuku mAla sangkin oLi
iNai sol kreevath tharaLa ina oL thAlap panaiyin
iyal kalA puththakam odu Er siRantha adi
iNai ilA Anaik kuvadu enA oLi nilA thuththi padar
ikali Arath thodaiyum Arum inpa rasa – thanga mArpil
varikaL thApiththa mulai isaiya Alin thaLirin
vayiRu nApik kamalam Am enum chuzhiya
madu urOmak kodi en aLikaL cUzhvutRa nirai
maruvu nUl oththa idai Ara sampai alkul
maNam elAm utRa naRai kamala pOthuth thodai en
vaLamai Arpuk kathali sEru sem pon udai – rampai mAthar
mayal athAl itRu adiyen avarkaL pAl utRu veku
mathana pANaththinudan mEvi manja misai
vathanam vErvutRu avira mulaikaL pUrikka midar
mayil puRA thaththai kuyil pOl ilanga amaLi
vasanamAy poththi idai thuvaLa mOkaththu uL amizh
vasam elAm vittum aRa vERu sinthanaiyai – thanthu AlvAy
murasu pErith thimilai thudikaL pUrith thavilkaL
murudu kALap paRaikaL thArai kompu vaLai
mukadu pEr utRa oli idikaL pOloththa maRai
muthuvar pAdik kumuRavE iRantha asurar
mudikaLOdu etRi ari iratham yAnaip piNam odu
ivuLi vElaik kuruthi neer mithanthu thisai – engum Oda
muduki vEl vittu vada kuvadu vAy vittu amarar
munivar Adip pukazha vEtha vinjaiyarkaL
muzhuvu veeNaik ki(n)nari amurtha keethath thonikaL
muRaiyathAkap paRaiya Othi rampaiyarkaL
mulaikaL pArikka udan nadanam AditRu vara
mudi pathAkaip poliyavE nadam kulavu – kantha vELE
arasu mA kaRpakam odu akil palA irppai makizh
azhaku vEy aththi kamukOdu arampai udan
aLavi mEkaththil oLir vanamodu AdakuyilkaL
aLikaL thOkaik kiLikaL kO ena periya
amurtha vAvik kazhani vayalil vALaik kayalkaL
adaiyum Er ak kanaka nAdenum puliyur – santha vElA
azhaku mOkak kumari viputhai Enal punavi
aLi kulA utRa kuzhal sEr padampu thodai
arasi vEthac chorupi kamala pAthak
karaviariya vEdac chiRumiyAL aNaintha pukazh
aruNa rUpap patham odu ivuLi thOkaic cheyal kodu
aNai theyvAnaith thanamumE makizhnthu puNar – thambirAnE.