திருப்புகழ் 498 கோதிக் கோதி (சிதம்பரம்)

Thiruppugal 498 Kodhikkodhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத் தானத் தாந்தன தானன
தானத் தானத் தாந்தன தானன
தானத் தானத் தாந்தன தானன – தனதான

கோதிக் கோதிக் கூந்தலி லேமலர்
பாவித் தாகச் சாந்தணி வார்முலை
கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி – குயில்போலக்

கூவிக் கூவிக் காண்டிசை போலவெ
நாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர்
கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள் – வருமோவென்

றோதித் தோளிற் பூந்துகி லால்முலை
மூடிச் சூதிற் றூங்கமி லார்தெரு
வோடித் தேடிச் சோம்பிடு வார்சில – விலைமாதர்

ஓருச் சேரச் சேர்ந்திடு வார்கலி
சூளைக் காரச் சாங்கமி லார்சில
வோரைச் சாகத் தீம்பிடு வார்செய – லுறவாமோ

வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை
மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி
வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல் – விடும்வேலா

வேளைச் சீறித் தூங்கலொ டேவய
மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட
மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை – தருசேயே

நாதத் தோசைக் காண்டுணை யேசுடர்
மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர்
நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள் – சுரமானை

ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளி
மாதைக் கானிற் சேர்ந்தணை வாய்சிவ
ஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத் தானத் தாந்தன தானன
தானத் தானத் தாந்தன தானன
தானத் தானத் தாந்தன தானன – தனதான

கோதிக் கோதிக் கூந்தலிலே மலர்
பாவித்து ஆக(ம்) சாந்து அணிவார் முலை
கோடுத் தானை தேன் துவர் வாய் மொழி – குயில் போலக்

கூவிக் கூவிக் காண்டு இசை போலவெ
நாணி கூனி பாய்ந்திடுவார் சிலர்
கூடித் தேறிச் சூழ்ந்திடுவார் பொருள் – வருமோ என்று

ஓதித் தோளில் பூந்துகிலால் முலை
மூடிச் சூதில் தூங்கம் இலார் தெரு
ஓடித் தேடிச் சோம்பிடுவார் சில – விலைமாதர்

ஓருச் சேரச் சேர்ந்திடுவார் கலி
சூளைக்காரச் சாங்கமிலார்
சிலவோரைச் சாகத் தீம்பிடுவார் செயல் – உறவாமோ

வேதத்தோனைக் காந்தள் கையால் தலை
மேல் குட்டு ஆடிப் பாந்தள் சதா முடி
வீரிட்டு ஆடக் காய்ந்து அசுரார்கள் மெல் – விடும் வேலா

வேளைச் சீறித் தூங்கலொடே
வயமாவைத் தோலைச் சேர்ந்து அணிவார் இட
மீது உற்றாள் பொன் சாம்பவி மாது உமை – தரு சேயே

நாதத்து ஓசைக் காண் துணையே சுடர்
மூலத்தோனைத் தூண்டிடவே உயிர்
நாடிக் காலில் சேர்ந்திடவே அருள் – சுர மானை

ஞானப் பால் முத்தேன் சுருபாள் வ(ள்)ளி
மாதைக் கானில் சேர்ந்து அணைவாய்
சிவ ஞானப் பூமி தேன் புலியூர் மகிழ் – பெருமாளே.

English

kOthik kOthik kUnthali lEmalar
pAvith thAkac chAnthaNi vArmulai
kOduth thAnaith thEnthuvar vAymozhi – kuyilpOlak

kUvik kUvik kANdisai pOlave
nANik kUnip pAynthidu vArsilar
kUdith thERic cUzhnthidu vArporuL – varumOven

ROthith thOLiR pUnthuki lAlmulai
mUdic cUthit RUngami lArtheru
vOdith thEdic chOmpidu vArsila – vilaimAthar

Oruc chErac chErnthidu vArkali
cULaik kArac chAngami lArsila
vOraic chAkath theempidu vArseya – luRavAmO

vEthath thOnaik kAnthaLkai yAlthalai
mElkut tAdip pAnthaLsa thAmudi
veerit tAdak kAynthasu rArkaLmel – vidumvElA

vELaic cheeRith thUngalo dEvaya
mAvaith thOlaic chErnthaNi vArida
meethut RALpoR chAmpavi mAthumai – tharusEyE

nAthath thOsaik kANduNai yEsudar
mUlath thOnaith thUNdida vEyuyir
nAdik kAliR chErnthida vEyaruL – suramAnai

njAnap pAlmuth thEnsuru pALvaLi
mAthaik kAniR chErnthaNai vAysiva
njAnap pUmith thEnpuli yUrmakizh – perumALE.

English Easy Version

kOthik kOthik kUnthalilE malar
pAviththu Aka(m) sAnthu aNivAr mulai
kOduth thAnai thEn thuvar vAy mozhi – kuyil pOlak

kUvik kUvik kANdu isai pOlave
nANi kUni pAynthiduvAr silar
kUdith thERic cUzhnthiduvAr poruL – varumO enRu

Othith thOLil pUnthukilAl mulai
mUdic cUthil thUngam ilAr theru
Odith thEdic chOmpiduvAr sila – vilai mAthar

Oruc chErac chErnthiduvAr kali
cULaikkArac chAngamilAr silavOraic
chAkath theempiduvAr seyal – uRavAmO

vEthaththOnaik kAnthaL kaiyAl thalai
mEl kuttu Adip pAnthaL sathA mudi
veerittu Adak kAynthu asurArkaL mel – vidum vElA

vELaic cheeRith thUngalodE
vayamAvaith thOlaic chErnthu aNivAr ida
meethu uRRAL pon sAmpavi mAthu umai – tharu sEyE

nAthaththu Osaik kAN thuNaiyE sudar
mUlaththOnaith thUNdidavE uyir
nAdik kAlil sErnthidavE aruL – sura mAnainjAnap

pAl muththEn surupAL va(L)Li
mAthaik kAnil sErnthu aNaivAy siva
njAnap pUmi thEn puliyUr makizh – perumALE.