Thiruppugal 499 Sagasambakkudaisuzh
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன – தனதான
சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல்
மதவின்பத் துடனே பலபணி
தனிதம்பட் டுடையோ டிகல்முர – சொலிவீணை
தவளந்தப் புடனே கிடுகிடு
நடைதம்பட் டமிடோல் பலவொலி
சதளம்பொற் றடிகா ரருமிவை – புடைசூழ
வெகுகும்பத் துடனே பலபடை
கரகஞ்சுற் றிடவே வரஇசை
வெகுசம்பத் துடனே யழகுட – னிதமேவும்
விருமஞ்சித் திரமா மிதுநொடி
மறையும்பொய்ப் பவுஷோ டுழல்வது
விடவும்பர்க் கரிதா மிணையடி – தருவாயே
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுர்தஞ்செச் செகசே செககண – எனபேரித்
திமிர்தங்கற் குவடோ டெழுகட
லொலிகொண்டற் றுருவோ டலறிட
திரள்சண்டத் தவுணோர் பொடிபட – விடும்வேலா
அகரம்பச் சுருவோ டொளியுறை
படிகம்பொற் செயலா ளரனரி
அயனண்டர்க் கரியா ளுமையருள் – முருகோனே
அமுர்தம்பொற் குவடோ டிணைமுலை
மதிதுண்டப் புகழ்மான் மகளொடும்
அருள்செம்பொற் புலியூர் மருவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன – தனதான
சக சம்பக் குடை சூழ் சிவிகை மெல்
மத இன்பத்துடனே பல பணி
பட்டு உடையோடு தனிதம் இகல் முரசு – ஒலி வீணை
தவளம் தப்பு உடனே கிடுகிடு
நடை தம்பட்டம் இடோல் பல ஒலி
சதளம் பொன் தடிகாரரும் இவை – புடை சூழ
வெகு கும்பத்துடனே பல படை
கரகம் சுற்றிடவே வர இசை
வெகு சம்பத்துடனே அழகுடன் – நிதம் மேவும்
விருமம் சித்திரமாம் இது நொடி
மறையும் பொய்ப் பவுஷோடு உழல்வது
விட உம்பர்க்கு அரிதாம் இணை அடி – தருவாயே
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுர்தஞ்செச் செகசே செககண – என பேரி
திமிர்தம் கல் குவடோடு எழு கடல்
ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட
திரள் சண்டத்து அவுணோர் பொடிபட – விடும் வேலா
அகரம் பச் (சை) உருவோடு ஒளி உறை
படிகம் பொன் செயலாள் அரன் அரி
அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள் – முருகோனே
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை
மதி துண்டம் புகழ் மான் மகளொடும்
அருள் செம் பொன் புலியூர் மருவிய – பெருமாளே.
English
chakachampak kudaiCuzh sivikaimel
mathavinpath thudanE palapaNi
thanithampat tudaiyO dikalmura – soliveeNai
thavaLanthap pudanE kidukidu
nadaithampat tamidOl palavoli
sathaLampot RadikA rarumivai – pudaicUzha
vekukumpath thudanE palapadai
karakanjchut RidavE varaisai
vekusampath thudanE yazhakuda – nithamEvum
virumanjith thiramA mithunodi
maRaiyumpoyp pavushO duzhalvathu
vidavumpark karithA miNaiyadi – tharuvAyE
thikuthanthith thikuthO thikuthiku
thikuthanthith thikuthO thikuthiku
thikurthanjec chekasE sekakaNa – enapErith
thimirthangaR kuvadO dezhukada
lolikoNdat RuruvO dalaRida
thiraLsaNdath thavuNOr podipada – vidumvElA
akarampac churuvO doLiyuRai
padikampoR cheyalA Laranari
ayanaNdark kariyA LumaiyaruL – murukOnE
amurthampoR kuvadO diNaimulai
mathithuNdap pukazhmAn makaLodum
aruLsempoR puliyUr maruviya – perumALE.
English Easy Version
chaka champak kudai cUzh sivikai mel
matha inpaththudanE pala paNi
pattu udaiyOdu thanitham ikal murasu – oli veeNai
thavaLam thappu udanE kidukidu
nadai thampattam idOl pala oli
sathaLam pon thadikArarum ivai – pudai cUzha
veku kumpaththudanE pala padai
karakam sutRidavE vara isai
veku sampaththudanE azhakudan – nitham mEvum
virumam siththiramAm ithu nodi
maRaiyum poyp pavushOdu uzhalvathu
vida umparkku arithAm iNai adi – tharuvAyE
thikuthanthith thikuthO thikuthiku
thikuthanthith thikuthO thikuthiku
thikurthanjec chekasE sekakaNa – ena pEri
thimirtham kal kuvadOdu ezhu kadal
oli koNdu atRu uruvOdu alaRida
thiraL saNdaththu avuNOr podipada – vidum vElA
akaram pas(sai) uruvOdu oLi uRai
padikam pon seyalAL aran ari
ayan aNdarkkum ariyAL umai aruL – murukOnE
amurtham pon kuvadOdu iNai mulai
mathi thuNdam pukazh mAn makaLodum
aruL sem pon puliyUr maruviya – perumALE.