திருப்புகழ் 500 சகுட முந்தும் (சிதம்பரம்)

Thiruppugal 500 Sagudamundhum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம்
தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம்
தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம் – தனதான

சகுடமுந்துங் கடலடைந்துங்
குளமகிழ்ந்துந் தோய்சங்கங்
கமுகடைந்தண் டமுதகண்டந்
தரளகந்தந் தேர்கஞ்சஞ்
சரமெனுங்கண் குமிழதுண்டம்
புருவெனுஞ்செஞ் சாபம்பொன் – திகழ்மாதர்

சலசகெந்தம் புழுகுடன்சண்
பகமணங்கொண் டேய்ரண்டந்
தனகனம்பொன் கிரிவணங்கும்
பொறிபடுஞ்செம் பேர்வந்தண்
சலனசம்பொன் றிடைபணங்கின்
கடிதடங்கொண் டாரம்பொன் – தொடர்பார்வை

புகலல்கண்டஞ் சரிகரம்பொன்
சரணபந்தந் தோதிந்தம்
புரமுடன்கிண் கிணிசிலம்பும்
பொலியலம்புந் தாள்ரங்கம்
புணர்வணைந்தண் டுவரொடுந்தொண்
டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் – கடைநாயேன்

புகழடைந்துன் கழல்பணிந்தொண்
பொடியணிந்தங் காநந்தம்
புனல்படிந்துண் டவசமிஞ்சுந்
தவசர்சந்தம் போலுந்திண்
புவனிகண்டின் றடிவணங்குஞ்
செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் – கழல்தாராய்

திகுடதிந்திந் தகுடதந்தந்
திகுடதிந்திந் தோதிந்தம்
டகுடடண்டண் டிகுடடிண்டிண்
டகுடடண்டண் டோடிண்டிண்
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்
டிமுடடிண்டென் றேசங்கம் – பலபேரி

செககணஞ்சஞ் சலிகைபஞ்சம்
பறைமுழங்கும் போரண்டஞ்
சிலையிடிந்துங் கடல்வடிந்தும்
பொடிபறந்துண் டோர்சங்கஞ்
சிரமுடைந்தண் டவுணரங்கம்
பிணமலைந்தன் றாடுஞ்செங் – கதிர்வேலா

அகிலஅண்டஞ் சுழலஎங்கும்
பவுரிகொண்டங் காடுங்கொன்
புகழ்விளங்குங் கவுரிபங்கன்
குருவெனுஞ்சிங் காரங்கொண்
டறுமுகம்பொன் சதிதுலங்குந்
திருபதங்கந் தாஎன்றென் – றமரோர்பால்

அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண்
சரணமுங்கொண் டோதந்தம்
புனைகுறம்பெண் சிறுமியங்கம்
புணர்செயங்கொண் டேயம்பொன்
அமைவிளங்கும் புலிசரம்பொன்
திருநடங்கொண் டார்கந்தம் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம்
தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம்
தனனதந்தம் தனனதந்தம்
தனனதந்தம் தானந்தம் – தனதான

சகுடம் உந்தும் கடல் அடைந்து
உங்கு உ(ள்)ள மகிழ்ந்தும் தோய் சங்கம்
கமுகு அடைந்து அண்டு அமுது கண்டம்
தரள கந்தம் தேர் கஞ்சம்
சரம் எனும் கண் குமிழ துண்டம்
புரு எனும் செம் சாபம் பொன் – திகழ் மாதர்

சலச கெந்தம் புழுகு உடன் சண்
பக மணம் கொண்டு ஏய் (இ)ரண்டு அம்
தன கனம் பொன் கிரி வணங்கும்
பொறி படும் செம் பேர் வந்து அண்
சலன சம்பை ஒன்று இடை பணங்கின்
கடி தடம் கொண்டார் அம் பொன் – தொடர் பார்வை

புகலல் கண்டு அம் சரி கரம் பொன்
சரண பந்தம் தோதிந்தம் புரம்
உடன் கிண்கிணி சிலம்பும்
பொலி அலம்பும் தாள் ரங்கம்
புணர்வு அணைந்து அண்டுவர் ஒடும் தொண்டு
இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் – கடை நாயேன்

புகழ் அடைந்து உன் கழல் பணிந்து ஒண்
பொடி அணிந்து அங்கு ஆநந்தம்
புனல் படிந்துண்டு அவச(ம்) மிஞ்சும்
தவசர் சந்தம் போலும் திண்
புவனி கண்டு இன்று அடி வணங்கும்
செயல் கொள அம் செம் சீர் செம் பொன் – கழல் தாராய்

திகுட திந்திந் தகுட தந்தந்
திகுட திந்திந் தோதிந்தம்
டகுட டண்டண் டிகுட டிண்டிண்
டகுட டண்டண் டோடிண்டிண்
டிமுட டிண்டிண் டுமுட டுண்டுண்
டிமுட டிண்டு என்றே சங்கம் – பல பேரி

செக கணம் சஞ்ச(ல்)லிகை பஞ்சம்
பறை முழங்கும் போர் அண்டம்
சிலை இடிந்தும் கடல் வடிந்தும்
பொடி பறந்து உண்டோர் சங்கம்
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம்
பிணம் அலைந்து அன்று ஆடும் செம் – கதிர் வேலா

அகில அண்டம் சுழல எங்கும்
பவுரி கொண்டு அங்கு ஆடும் கொ(கோ)ன்
புகழ் விளங்கும் கவுரி பங்கன்
குரு எனும் சிங்காரம் கொண்டு
அறு முகம் பொன் சதி துலங்கும்
திரு பதம் கந்தா என்று என்று – அமரோர் பால்

அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண்
சரணமும் கொண்டு ஓத அந்தம்
புனை குறம் பெண் சிறுமி அங்கம்
புணர் செயம் கொண்டே அம் பொன்
அமை விளங்கும் புலிசரம் பொன்
திரு நடம் கொண்டார் கந்த அம் – பெருமாளே.

English

chakudamunthung kadaladainthung
kuLamakizhnthun thOysangang
kamukadainthaN damuthakaNdan
tharaLakanthan thErkanjanj
charamenungaN kumizhathuNdam
puruvenunjenj chApampon – thikazhmAthar

salasakentham puzhukudansaN
pakamaNangoN dEyraNdan
thanakanampon kirivaNangum
poRipadunjem pErvanthaN
salanasampon RidaipaNangin
kadithadangoN dArampon – thodarpArvai

pukalalkaNdanj charikarampon
saraNapanthan thOthintham
puramudankiN kiNisilampum
poliyalampun thALrangam
puNarvaNainthaN duvarodunthoN
didarkidanthuN dErkonjung – kadainAyEn

pukazhadainthun kazhalpaNinthoN
podiyaNinthang kAnantham
punalpadinthuN davasaminjun
thavasarsantham pOlunthiN
puvanikaNdin RadivaNangunj
seyalkoLanjenj cheersempon – kazhalthArAy

thikudathinthin thakudathanthan
thikudathinthin thOthintham
dakudadaNdaN dikudadiNdiN
dakudadaNdaN dOdiNdiN
dimudadiNdiN dumudaduNduN
dimudadiNden REsangam – palapEri

sekakaNanjanj chalikaipanjam
paRaimuzhangum pOraNdanj
chilaiyidinthung kadalvadinthum
podipaRanthuN dOrsanganj
siramudainthaN davuNarangam
piNamalainthan RAdunjeng – kathirvElA

akila-aNdanj chuzhalaengum
pavurikoNdang kAdungon
pukazhviLangung kavuripangan
guruvenunjing kArangoN
daRumukampon sathithulangun
thirupathangan thAenRen – RamarOrpAl

alarpozhinthang karamukizhnthoN
charaNamungoN dOthantham
punaikuRampeN siRumiyangam
puNarseyangoN dEyampon
amaiviLangum pulisarampon
thirunadangoN dArkantham – perumALE.

English Easy Version

sakudam unthum kadal adainthu
ungu u(L)La makizhnthum thOy sangam
kamuku adainthu aNdu amuthu kaNdam
tharaLa kantham thEr kanjam
saram enum kaN kumizha thuNdam
puru enum sem sApam pon – thikazh mAthar

salasa kentham puzhuku udan
saNpaka maNam koNdu Ey (i)raNdu
am thana kanam pon kiri vaNangum
poRi padum sem pEr vanthu aN
salana sampai onRu idai paNangin
kadi thadam koNdAr am pon – thodar pArvai

pukalal kaNdu am sari karam pon
charaNa pantham thOthintham
puram udan kiNkiNi silampum
poli alampum thAL rangam
puNarvu aNainthu aNduvar odum thoNdu
idar kidanthuNdu Er konjum – kadai nAyEn

pukazh adainthu un kazhal paNinthu oN
podi aNinthu angu Anantham
punal padinthuNdu avasa(m) minjum
thavasar santham pOlum thiN
puvani kaNdu inRu adi vaNangum
seyal koLa am sem cheer sem pon – kazhal thArAy

thikuda thinthin thakuda thanthan
thikuda thinthin thOthintham
dakuda daNdaN dikuda diNdiN
dakuda daNdaN dOdiNdiN
dimuda diNdiN dumuda duNduN
dimuda diNdu enRE sangam – pala pEri

seka kaNam chanja(l)likai panjam
paRai muzhangum pOr aNdam
silai idinthum kadal vadinthum
podi paRanthu uNdOr sangam
siram udainthu aNdu avuNar angam
piNam alainthu anRu Adum sem – kathir vElA

akila aNdam chuzhala engum
pavuri koNdu angu Adum ko(kO)n
pukazh viLangum kavuri pangan
guru enum singAram koNdu
aRu mukam pon sathi thulangum
thiru patham kanthA enRu – enRu amarOr pAl

alar pozhinthu am karam mukizhnthu
oN charaNamum koNdu Otha antham
punai kuRam peN siRumi angam
puNar seyam koNdE am pon
amai viLangum pulisaram pon
thiru nadam koNdAr kantha am – perumALE.