திருப்புகழ் 501 சாந்துடனே புழுகு (சிதம்பரம்)

Thiruppugal 501 Sandhudanepuzhugu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன – தனதான

சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை
மோந்துப யோதரம – தணையாகச்

சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தநு ராகசுக
காந்தமொ டூசியென – மடவார்பால்

கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி
ஓர்ந்துண ராவுணர்வி – லடிநாயேன்

கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை
பூண்டுற வாடுதின – முளதோதான்

பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள்
நீண்டிடு மாலொடய – னறியாது

பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன்
ஏய்ந்தெதிர் காணநட – மிடுபாதர்

பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட
மாங்கன காபுரியி – லமர்வாழ்வே

பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை
சூழ்ம்புலி யூரிலுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன – தனதான

சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை
மோந்து பயோதரம் அது – அணையாக

சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்து அநுராக சுக
காந்தமொடு ஊசி என – மடவார் பால்

கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி
ஓர்ந்து உணரா உணர்வு இல் – அடி நாயேன்

கூம்பு அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை
பூண்டு உறவாடு தினம் – உளதோ தான்

பாந்தளின் மீது இனிதின் ஓங்கு க(ண்)ணே துயில்கொள்
நீண்டிடும் மாலொடு அயன் – அறியாது

பாம்பு உருவான முநி வா(வு)ம் புலியான பதன்
ஏய்ந்து எதிர் காண நடம் – இடும் பாதர்

பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம்
கனகா புரியில் – அமர் வாழ்வே

பூ ங்கமுகு ஆர்வு செறி(யூ)யும் கநகா புரிசை
சூழு(ழ்)ம் புலியூரில் உறை – பெருமாளே.

English

chAnthuda nEpuzhuku thOynthazha kArkuzhalai
mOnthupa yOtharama – thaNaiyAka

sAynthupra thApamudan vAzhnthanu rAkasuka
kAnthamo dUsiyena – madavArpAl

kUrnthakru pAmanathu pOnthuna thALkuRuki
OrnthuNa rAvuNarvi – ladinAyEn

kUmpavizh kOkanaka pUmpatha kOthiliNai
pUNduRa vAduthina – muLathOthAn

pAnthaLin meethinithi nOnguka NEthuyilkoL
neeNdidu mAlodaya – naRiyAthu

pAmpuru vAnamuni vAmpuli yAnapathan
Eynthethir kANanada – midupAthar

pUnthuNar pAthimathi vEynthasa dAmakuda
mAngana kApuriyi – lamarvAzhvE

pUnkamu kArvuseRi yUngana kApurisai
sUzhmpuli yUriluRai – perumALE.

English Easy Version

chAnthudanE puzhuku thOynthu azhaku Ar kuzhalai
mOnthu payOtharam athu – aNaiyAka

sAynthu prathApamudan vAzhnthu anurAka suka
kAnthamodu Usi ena – madavAr pAl

kUrntha krupA manathu pOnthu una thAL kuRuki
Ornthu uNarA uNarvu il – adi nAyEn

kUmpu avizh kOkanaka pUm patha kOthu il iNai
pUNdu uRavAdu thinam – uLathO thAn

pAnthaLin meethu inithin Ongu ka(N)NE thuyilkoL
neeNdidum mAlodu ayan – aRiyAthu

pAmpu uruvAna muni vA(vu)m puliyAna pathan
Eynthu ethir kANa nadam – idum pAthar

pUnthu uNar pAthi mathi vEyntha sadA makudamAm
kanakA puriyil – amar vAzhvE

pUnkamuku Arvu seRi(yU)yum kanakA purisai
sUzhu(zh)m puliyUril uRai – perumALE.