திருப்புகழ் 502 சுடரனைய திருமேனி (சிதம்பரம்)

Thiruppugal 502 Sudaranaiyathirumeni

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான – தனதான

சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
சொருபகிரி யிடமேவு – முகமாறும்

சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய
துகிரிதழின் மொழிவேத – மணம்வீச

அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட
அயில்கரமொ டெழில்தோகை – மயிலேறி

அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை
அதிசயமெ னருள்பாட – வரவேணும்

விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட
மிடறடைய விடம்வாரி – யருள்நாதன்

மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
மிகமகிழ அநுபூதி – யருள்வோனே

இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி
னிணையிளநிர் முலைமார்பி – னணைமார்பா

இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி
யிருடியர்கள் புகழ்ஞான – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான – தனதான

சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
சொருபகிரி யிடமேவு – முகமாறும்

சுரர் தெரியல் அளிபாட மழலைகதி நறைபாய
துகிர் இதழின் மொழிவேத – மணம்வீச

அடர்பவள வொளிபாய அரிய பரிபுரம் ஆட
அயில்கரமொடு எழில் தோகை – மயிலேறி

அடியனிரு வினைநீறு பட அமரர் இது பூரை
அதிசயமென அருள்பாட – வரவேணும்

விடைபரவி அயன்மாலொடு அமரர் முநி கணமோட
மிடறடைய விடம்வாரி – யருள்நாதன்

மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
மிகமகிழ அநுபூதி – யருள்வோனே

இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதின்
இணையிளநிர் முலைமார்பின் – அணைமார்பா

இனிய முது புலிபாதனுடன் அரவு சதகோடி
யிருடியர்கள் புகழ்ஞான – பெருமாளே.

English

sudaranaiya thirumEni yudaiyazhaku muthugnAna
sorupakiri yidamEvu – mukamARum

surartheriya laLipAda mazhalaikathi naRaipAya
thukirithazhin mozhivEtha – maNamveesa

adArpavaLa voLipAya ariyapari puramAda
ayilkaramo dezhilthOkai – mayilERi

adiyaniru vinaineeRu pada amara rithupUrai
athisayame naruLpAda – varavENum

vidaiparavi ayanmAlo damararmuni kaNamOda
midaRadaiya vidamvAri – yaruLnAthan

minalanaiya idaimAthu idamaruvu kurunAthan
mikamakizha anupUthi – yaruLvOnE

idarkalikaL piNiyOda enaiyumaruL kuRamAthi
niNaiyiLanir mulaimArpi – naNaimArpA

iniyamuthu pulipAtha nudanaravu sathakOdi
yirudiyarkaL pukazhgnAna – perumALE.

English Easy Version

sudaranaiya thirumEni yudaiyazhaku muthugnAna
sorupakiri yidamEvu – mukamARum

surartheriya laLipAda mazhalaikathi naRaipAya
thukirithazhin mozhivEtha – maNamveesa

adArpavaLa voLipAya ariyapari puramAda
Ayilkaramodu ezhilthOkai – mayilERi

adiyaniru vinaineeRu pada amara rithupUrai
athisayame naruLpAda – varavENum

vidaiparavi ayanmAlo damararmuni kaNamOda
midaRadaiya vidamvAri – yaruLnAthan

minalanaiya idaimAthu idamaruvu kurunAthan
mikamakizha anupUthi – yaruLvOnE

idarkalikaL piNiyOda enaiyumaruL kuRamAthi
niNaiyiLanir mulaimArpi – naNaimArpA

iniyamuthu pulipAtha nudanaravu sathakOdi
yirudiyarkaL pukazhgnAna – perumALE.