திருப்புகழ் 503 தத்தை மயில் (சிதம்பரம்)

Thiruppugal 503 Thaththaimayil

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன – தனதான

தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை
யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்
சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி – பிடிபோல

தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ
யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென
தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ – ருடல்பூசி

வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு
கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற
வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி – யுடைசோர

மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட
னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்
வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி – செயலாமோ

சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை
தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை – யருள்பாலா

சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
ரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ
சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட – மிடுவோனே

துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு
சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை
சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர – மணிமார்பா

சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்
சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக
சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன – தனதான

தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை
இட்டும் உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர்
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி – பிடி போல

தைச் சரசமோடு உறவெ ஆடி அகமே கொடு போய்
எத்தி அணை மீதில் இது காலம் என் நி(நீ)ர் போவது என
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் – உடல் பூசி

வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக
குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி – உடை சோர

மச்ச விழி பூசலிட வாய் பு(ல்)லி உ(ல்)லாசமுடன்
ஒப்பி இருவோரு(ம்) மயல் மூழ்கிய பின் ஆபரணம்
வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார் கலவி – செயலாமோ

சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய
கல்யாணி எனை ஈண மலை மாது சிவை
தற் பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை – அருள் பாலா

சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட
ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ
சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடம் – இடுவோனே

துத்தி தனபார வெகு மோக சுக வாரி மிகு
சித்ர முக ரூபி எனது ஆயி வ(ள்)ளி நாயகியை
சுத்த அணையூடு வட மா முலை விடாத கர – மணி மார்பா

சுத்த மகா தவ சிகாமணி என ஓதும் அவர்
சித்தம் அதிலே குடியதா(ய்) உறையும் ஆறு முக
சுப்ரமணியா புலியூர் மேவி உறை தேவர் புகழ் – பெருமாளே.

English

thaththaimayil pOlumiyal pEsipala mOkanakai
yittumuda nANimulai meethuthukil mUdiyavar
satRavidam veedumini vArumena vOdimadi – pidipOla

thaiccharasa mOduRave yAdiyaka mEkodupo
yeththiyaNai meethilithu kAlamenir pOvathena
thattupuzhu kOdupani neerpalasa vAthaiyava – rudalpUsi

vaiththumuka mOdirasa vAyithazhi nURalperu
kakkuzhala LAvasuzhal vALvizhika LEpathaRa
vattamulai mArputhaiya vErvaithara thOLiRuki – yudaisOra

macchavizhi pUsalida vAypuliyu lAsamuda
noppiyiru vOrumayal mUzhkiyapin AparaNam
vaiththadaku thEduporuL cURaikoLu vArkalavi – seyalAmO

saththisara sOthithiru mAthuveku rUpisuka
niththiyakal yANiyenai yeeNamalai mAthusivai
thaRparano dAdumapi rAmisiva kAmiyumai – yaruLbAlA

chakrakiri mUrimaka mErukadal thULipada
rathnamayi lERiviLai yAdiyasu rAraivizha
saththiyinai yEviama rOrkaLsiRai meeLanada – miduvOnE

thuththithana pAraveku mOkasuka vArimiku
chithramuka rUpiyena thAyivaLi nAyakiyai
suththaaNai yUduvada mAmulaivi dAthakara – maNimArpA

suththavama kAthavasi kAmaNiye nOthumavar
siththamathi lEkudiya thAvuRaiyum ARumuka
supramaNi yApuliyur mEviyuRai thEvarpukazh – perumALE.

English Easy Version

thaththai mayil pOlum iyal pEsi pala mOka nakai
ittum udan nANi mulai meethu thukil mUdi avar
satRu avidam veedum ini vArum ena Odi madi – pidi pOla

thaic charasamOdu uRave Adi akamE kodu pOy
eththi aNai meethil ithu kAlam en ni(nee)r pOvathu ena
thattu puzhukOdu pani neer pala savAthai avar – udal pUsi

vaiththu mukamOdu irasa vAy ithazhin URal peruka
kuzhal aLAva suzhal vAL vizhikaLE pathaRa
vatta mulai mAr puthaiya vErvai thara thOL iRuki – udai sOra

maccha vizhi pUsalida vAy pu(l)li u(l)lAsamudan
oppi iruvOru(m) mayal mUzhkiya pin AparaNam
vaiththu adaku thEdu poruL cURai koLuvAr kalavi – seyalAmO

saththi sarasOthi thiru mAthu veku rUpi suka
niththiya kalyANi enai eeNa malai mAthu sivai
thaR paranodu Adum apirAmi sivakAmi umai – aruL pAlA

chakra kiri mUri maka mEru kadal thULipada
rathna mayil ERi viLaiyAdi asurArai vizha
saththiyinai Evi amarOrkaL siRai meeLa nadam – iduvOnE

thuththi thanapAra veku mOka suka vAri miku
chithra muka rUpi enathu Ayi va(L)Li nAyakiyai
suththa aNaiyUdu vada mA mulai vidAtha kara – maNi mArpA

suththa makA thava sikAmaNi ena Othum avar
siththam athilE kudiyathA(y) uRaiyum ARu muka
supramaNiyA puliyUr mEvi uRai thEvar pukazh – perumALE.