Thiruppugal 504 Thuththipotrana
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன – தனதான
துத்தி பொற்றன மேரு வாமென
வொத்தி பத்திரள் வாகு வாயவிர்
துப்பு முத்தொடு மார்பி னாடிட – மயில்போலே
சுக்கை மைக்குழ லாட நூலிடை
பட்டு விட்டவிர் காம னாரல்குல்
சுற்று வித்துறு வாழை சேர்தொடை – விலைமாதர்
தத்தை பட்குர லோசை நூபுர
மொத்த நட்டமொ டாடி மார்முலை
சற்ற சைத்துகு லாவும் வேசிய – ரவரோடே
தர்க்க மிட்டுற வாடி யீளைநொய்
கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட – வுழல்வேனோ
தித்தி மித்திமி தீத தோதக
தத்த னத்தன தான தீதிமி
திக்கு முக்கிட மூரி பேரிகை – தவில்போடச்
சித்ர வித்தைய ராட வானவர்
பொற்பு விட்டிடு சேசெ சேயென
செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட – விடும்வேலா
செத்தி டச்சம னார்க டாபட
அற்று தைத்தசு வாமி யாரிட
சித்தி ரச்சிவ காமி யாரருள் – முருகோனே
தெற்க ரக்கர்கள் தீவு நீறிட
விட்ட அச்சுத ரீன மானொடு
சித்தி ரப்புலி யூரில் மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன – தனதான
துத்தி பொன் தனம் மேருவாம் என
ஒத்து இபத் திரள் வாகுவாய் அவிர்
துப்பு முத்தோடு மார்பின் ஆடிட – மயில் போலே
சுக்கை மைக் குழல் ஆட நூல் இடை
பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல்
சுற்றுவித்து உறு வாழை சேர் தொடை – விலை மாதர்
தத்தை புட் குரல் ஓசை நூபுரம்
ஒத்த நட்டமொடு ஆடி மார் முலை
சற்று அசைத்து குலாவும் வேசியர் – அவரோடே
தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய்
கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என
சிச்சி சிச்சி என நால்வர் கூறிட – உழல்வேனோ
தித்தி மித்திமி தீத தோதக
தத்த னத்தன தான தீதிமி திக்கு
முக்கிட மூரி பேரிகை – தவில் போட
சித்ர வித்தையர் ஆட வானவர்
பொன் பூ இட்டு இ(ட்)டு சே செ சே என
செக்குவிட்டு அசுரோர்கள் தூள்பட – விடும் வேலா
அச்சமனார் செத்திட கடா பட
அற்று உதைத்த சுவாமியார் இட
சித்திரச் சிவகாமியார் அருள் – முருகோனே
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட
விட்ட அச்சுதர் ஈன மானோடு
சித்திரப் புலியூரில் மேவிய – பெருமாளே.
English
thuththi potRana mEru vAmena
voththi paththiraL vAku vAyavir
thuppu muththodu mArpi nAdida – mayilpOlE
sukkai maikkuzha lAda nUlidai
pattu vittavir kAma nAralkul
sutRu viththuRu vAzhai sErthodai – vilaimAthar
thaththai patkura lOsai nUpura
moththa nattamo dAdi mArmulai
satRa saiththuku lAvum vEsiya – ravarOdE
tharkka mittuRa vAdi yeeLainoy
kakkal vikkalko LULai nAyena
chicchi chicchiye nAlvar kURida – vuzhalvEnO
thiththi miththimi theetha thOthaka
thaththa naththana thAna theethimi
thikku mukkida mUri pErikai – thavilpOdac
chithra viththaiya rAda vAnavar
poRpu vittidu sEse sEyena
chekku vittasu rOrkaL thULpada – vidumvElA
cheththi dacchama nArka dApada
atRu thaiththasu vAmi yArida
siththi racchiva kAmi yAraruL – murukOnE
theRka rakkarkaL theevu neeRida
vitta acchutha reena mAnodu
siththi rappuli yUril mEviya – perumALE.
English Easy Version
thuththi pon thanam mEruvAm ena
oththu ipath thiraL vAkuvAy avir
thuppu muththOdu mArpin Adida – mayil pOlE
sukkai maik kuzhal Ada nUl idai
pattuvittu avir kAmanAr alkul
sutRuviththu uRu vAzhai sEr thodai – vilai mAthar
thaththai put kural Osai nUpuram
oththa nattamodu Adi mAr mulai
satRu asaiththu kulAvum vEsiyar – avarOdE
tharkkam ittu uRavAdi eeLai nOy
kakkal vikkal koL ULai nAy ena
sicchi sicchi ena nAlvar kURida – uzhalvEnO
thiththi miththimi theetha thOthaka
thaththa naththana thAna theethimi
thikku mukkida mUri pErikai – thavil pOda
chithra viththaiyar Ada vAnavar
pon pU ittu i(t)tu sE se sE ena
chekkuvittu asurOrkaL thULpada – vidum vElA
acchamanAr cheththida kadA pada
atRu uthaiththa suvAmiyAr ida
siththirac chivakAmiyAr aruL – murukOnE
theRku arakkarkaL theevu neeRu ida
vitta acchuthar eena mAnOdu
siththirap puliyUril mEviya – perumALE.