திருப்புகழ் 506 நாலு சதுரத்த பஞ்ச (சிதம்பரம்)

Thiruppugal 506 Nalusadhuraththapancha

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன
தானதன தத்த தந்தன – தந்ததான

நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை
நாடியின டத்தி மந்திர – பந்தியாலே

நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர்
நாறிசை நடத்தி மண்டல – சந்தியாறிற்

கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு
கோவென முழக்கு சங்கொலி – விந்துநாதங்


கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு
கோடிநட னப்ப தஞ்சபை – யென்றுசேர்வேன்

ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி
ஆரணர் தலைக்க லங்கொளி – செம்பொன்வாசி

ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை
ஆளுமை பரத்தி சுந்தரி – தந்தசேயே

வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர்
வீடெரி கொளுத்தி யெண்கட – லுண்டவேலா


வேதசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர்
வீறுநட னர்க்கி சைந்தருள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன
தானதன தத்த தந்தன – தந்ததான

நாலு சதுரத்த பஞ்ச அறை மூல கமலத்தில் அங்கியை
நாடியில் நடத்தி மந்திர – பந்தியாலே

நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர்
நாற இசை நடத்தி மண்டல – சந்தி ஆறில்

கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்து இதம் பெறு
கோ என முழக்கு சங்கு ஒலி – விந்து நாதம்

கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு
கோடி நடனப் பத அம் சபை – என்று சேர்வேன்

ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குலக் கொழுந்திலி
ஆரணர் தலைக் கலம் கொளி – செம் பொன் வாசி

ஆணவ மயக்கமும் க(ல்)லி காமியம் அகற்றி என்றனை
ஆள் உமை பரத்தி சுந்தரி – தந்த சேயே

வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர்
வீடு எரி கொளுத்தி எண் கடல் – உண்ட வேலா

வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர்
வீறு நடனர்க்கு இசைந்து அருள் – தம்பிரானே.

English

nAluchathu raththa panjaRai mUlakama laththi langiyai
nAdiyina daththi manthira – panthiyAlE

nAraNa puraththi linthuvi nUduRa iNakki nansudar
nARisai nadaththi maNdala – santhiyARiR

kOlamu muthippa kaNduLa nAlinai maRiththi thampeRu
kOvena muzhakku sangoli – vinthunAtham

kUdiya mukappi linthira vAnava muthaththai yuNdoru
kOdinada nappa thanjcapai – yenRusErvEn

Alamala rutRa sampavi vErili kulakko zhunthili
AraNar thalaikka langkoLi – semponvAsi

ANava mayakka mungkali kAmiya makatRi yenRanai
ALumai paraththi sunthari – thanthasEyE

vElathai yeduththu minthirar mAlvithi pizhaikka vanjakar
veederi koLuththi yeNkada – luNdavElA

vEthasathu raththar thenpuli yUruRai yoruththi panginar
veeRunada narkki saintharuL – thambirAnE.

English Easy Version

nAlu chathuraththa panja aRai mUla kamalaththil angiyai
nAdiyil nadaththi manthira – panthiyAlE

nAraNa puraththil inthuvin UduRa iNakki nan sudar
nARa isai nadaththi maNdala – santhi ARil

kOlamum uthippa kaNdu uLa nAlinai maRiththu itham peRu
kO ena muzhakku sangu oli – vinthu nAtham

kUdiya mukappil inthira vAna amuthaththai uNdu oru
kOdi nadanap patha am sapai – enRu sErvEn

Alam malarutRa sampavi vErili kulak kozhunthili
AraNar thalaik kalam koLi – sem pon vAsi

ANava mayakkamum ka(l)li kAmiyam akatRi enaRanai
AL umai paraththi sunthari – thantha sEyE

vEl athai eduththum inthirar mAl vithi pizhaikka vanjakar
veedu eri koLuththi eN kadal – uNda vElA

vEtha sathuraththar then puliyUr uRai oruththi panginar
veeRu nadanarkku isainthu aruL – thambirAnE.