திருப்புகழ் 507 நீலக் குழலார் (சிதம்பரம்)

Thiruppugal 507 Neelakkuzhalar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன – தனதான

நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை
நீளச்சசி யார்பொட்டணி – நுதல்மாதர்

நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி
நேமித்தெழு தாசித்திர – வடிவார்தோள்

ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை
யாகத்தமி யேனித்தமு – முழல்வேனோ


ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
மாகக்கொள வேமுத்தியை – யருள்வாயே

மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி
மார்பிற்பிர காசக்கிரி – தனபார

வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி
மாணிக்கமி னாள்நிஷ்கள – உமைபாகர்

சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு
சோதிப்பொருள் கேள்விக்கிடு – முருகோனே

சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர்
சோதிப்புலி யூர்நத்திய – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன – தனதான

நீலக் குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தைப்பிறை
நீளச் சசியார் பொட்டு அணி – நுதல் மாதர்

நீலக் கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நற் கணி
நேமித்து எழுதா சித்திர – வடிவார் தோள்

ஆலைக் கழையார் துத்தி கொள் ஆரக் குவடார் கட்டளையாகத்
தமியேன் நித்தமும் – உழல்வேனோ

ஆசைப்பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திர
மாகக் கொளவே முத்தியை – அருள்வாயே

மாலைக் குழலாள் அற்புத வேதச் சொருபாள் அக்கினி
மார்பில் பிரகாசக் கிரி – தனபார

வாசக் குயிலாள் நல் சிவகாமச் செயலாள் பத்தினி
மாணிக்க மி(ன்)னாள் நிஷ்கள – உமை பாகர்

சூலக் கையினார் அக்கினி மேனிப் பரனாருக்கு ஒரு
சோதிப் பொருள் கேள்விக்கு இடு – முருகோனே

சோதிப் பிரகாசச் செயலாள் முத்தமிழ் மானைப் புணர்
சோதிப் புலியூர் நத்திய – பெருமாளே.

English

neelakkuzha lArmuththaNi vAysarkkarai yArthaippiRai
neeLacscasi yArpottaNi – nuthalmAthar

neelakkaya lArpaththira vEloppidu vArnaRkaNi
nEmiththezhu thAsiththira – vadivArthOL

Alaikkazhai yArthuththiko LArakkuva dArkattaLai
yAkaththami yEniththamu – muzhalvEnO

Asaippatha mElpuththimey njAnaththuda nEpaththira
mAkakkoLa vEmuththiyai – yaruLvAyE

mAlaikkuzha lALaRputha vEthaccoru pALakkini
mArpiRpira kAsakkiri – thanapAra

vAsakkuyi lALnaRciva kAmaccheya lALpaththini
mANikkami nALnishkaLa – umaipAkar

cUlakkaiyi nArakkini mEnippara nArukkoru
sOthipporuL kELvikkidu – murukOnE

sOthippira kAsaccheya lALmuththamizh mAnaippuNar
sOthippuli yUrnaththiya – perumALE.

English Easy Version

neelak kuzhalAr muththu aNi vAy sarkkaraiyAr thaippiRai
neeLac casiyAr pottu aNi – nuthal mAthar

neelak kayalAr paththira vEl oppiduvAr naR kaNi
nEmiththu ezhuthA siththira – vadivAr thOL

Alaik kazhaiyAr thuththi koL Arak kuvadAr kattaLaiyAkath
thamiyEn niththamum – uzhalvEnO

Asaippatham mEl puththi mey njAnaththudanE paththiramAkak
koLavE muththiyai – aruLvAyE

mAlaik kuzhalAL aRputha vEthas sorupAL akkini
mArpil pirakAsak kiri – thanapAra

vAsak kuyilAL nal sivakAmac cheyalAL paththini
mANikka mi(n)nAL nishkaLa – umai pAkar

cUlak kaiyinAr akkini mEnip paranArukku oru
sOthip poruL kELvikku idu – murukOnE

sOthip pirakAsac cheyalAL muththamizh mAnaip puNar
sOthip puliyUr naththiya – perumALE.