திருப்புகழ் 509 மகரமொடுறு குழை (சிதம்பரம்)

Thiruppugal 509 Magaramodurukuzhai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தான தாத்தன
தனதன தனதன தான தாத்தன
தனதன தனதன தான தாத்தன – தனதான

மகரமொ டுறுகுழை யோலை காட்டியு
மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்
வரவர வரஇத ழூற லூட்டியும் – வலைவீசும்

மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில்
வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்
வளமையி லிளமையில் மாடை வேட்கையில் – மறுகாதே

இகலிய பிரமக பால பாத்திர
மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற
மிதழியை யழகிய வேணி யார்த்ததும் – விருதாக

எழில்பட மழுவுடன் மானு மேற்றது
மிசைபட இசைதரு ஆதி தோற்றமு
மிவையிவை யெனவுப தேச மேற்றுவ – தொருநாளே

ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு
தலைபறி யமணர்ச மூக மாற்றிய
தவமுனி சகமுளர் பாடு பாட்டென – மறைபாடி

தரிகிட தரிகிட தாகு டாத்திரி
கிடதரி கிடதரி தாவெ னாச்சில
சபதமொ டெழுவன தாள வாச்சிய – முடனேநீள்

அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல
அலகைக ளடைவுட னாடு மாட்டமு
மரனவ னுடனெழு காளி கூட்டமு – மகலாதே

அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு
மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு
மரிதென முறைமுறை யாடல் காட்டிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனதன தான தாத்தன
தனதன தனதன தான தாத்தன
தனதன தனதன தான தாத்தன – தனதான

மகரமொடு உறு குழை ஓலை காட்டியு(ம்)
மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும்
வரவர வர இதழ் ஊறல் ஊட்டியும் – வலை வீசும்

மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில்
வழி வழி ஒழுகும் உபாய வாழ்க்கையில்
வளமையில் இளமையில் மாடை வேட்கையில் – மறுகாதே

இகலிய பிரம கபால பாத்திரம்
எழில் பட இடு திரு நீறு சேர்த்திறம்
இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் – விருதாக

எழில் பட மழுவுடன் மானும் ஏற்றதும்
இசை பட இசை தரு ஆதி தோற்றமும்
இவை இவை என உபதேசம் ஏற்றுவது – ஒரு நாளே

ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொ(ண்)டு
தலை பறி அமணர் சமூகம் மாற்றிய
தவ முனி சகம் உளர் பாடு பாட்டு என – மறை பாடி

தரிகிட தரிகிட தாகு டாத்திரி
கிடதரி கிடதரி தாவெ னாச்சில
சபதமொடு எழுவன தாள் – வாச்சியமுடனே நீள்

அகு குகுகுகு என ஆளி வாய்ப் பல
அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும்
அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் – அகலாதே

அரி துயில் சயன வியாள மூர்த்தனு(ம்)
மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும்
அரிது என முறை முறை ஆடல் காட்டிய – பெருமாளே.

English

makaramo duRukuzhai yOlai kAttiyu
mazhaithavazh vanaikuzhal mAlai kAttiyum
varavara varaitha zhURa lUttiyum – valaiveesum

makaravi zhimakaLir pAdal vArththaiyil
vazhivazhi yozhukumu pAya vAzhkkaiyil
vaLamaiyi liLamaiyil mAdai vEtkaiyil – maRukAthE

ikaliya piramaka pAla pAththira
mezhilpada iduthiru neeRu sErththiRa
mithazhiyai yazhakiya vENi yArththathum – viruthAka

ezhilpada mazhuvudan mAnu mEtRathu
misaipada isaitharu Athi thOtRamu
mivaiyivai yenavupa thEsa mEtRuva – thorunALE

jakathala mathilaruL njAna vAtkodu
thalaipaRi yamaNarsa mUka mAtRiya
thavamuni sakamuLar pAdu pAttena – maRaipAdi

tharikida tharikida thAku dAththiri
kidathari kidathari thAve nAcchila
sapathamo dezhuvana thALa vAcchiya – mudanEneeL

akukuku kukuvena ALi vAyppala
alakaika Ladaivuda nAdu mAttamu
maranava nudanezhu kALi kUttamu – makalAthE

arithuyil sayanavi yALa mUrththanu
maNithikazh mikupuli yUrvi yAkranu
marithena muRaimuRai yAdal kAttiya – perumALE.

English Easy Version

makaramodu uRu kuzhai Olai kAttiyu(m)
mazhai thavazh vanai kuzhal mAlai kAttiyum
varavara vara ithazh URal Uttiyum – valai veesum

makara vizhi makaLir pAdal vArththaiyil
vazhi vazhi ozhukum upAya vAzhkkaiyil
vaLamaiyil iLamaiyil mAdai vEtkaiyil – maRukAthE

ikaliya pirama kapAla pAththiram
ezhil pada idu thiru neeRu sErththiRam
ithazhiyai azhakiya vENi Arththathum – viruthAka

ezhil pada mazhuvudan mAnum EtRathum
isai pada isai tharu Athi thOtRamum
ivai ivai ena upathEsam EtRuvathu – oru nALE

jakathalam athil aruL njAna vAL ko(N)du
thalai paRi amaNar samUkam mAtRiya
thava muni sakam uLar pAdu pAttu ena – maRai pAdi

tharikida tharikida thAku dAththiri kidathari
kidathari thAve nAcchila
sapathamodu ezhuvana thAL vAcchiya – mudanE neeL

aku kukukuku ena ALi vAyp pala
alakaikaL adaivudan Adum Attamum
aran avanudan ezhu kALi kUttamum – akalAthE

ari thuyil sayana viyALa mUrththanu(m)
maNi thikazh miku puliyUr viyAkranum
arithu ena muRai muRai Adal kAttiya – perumALE.