Thiruppugal 510 Machchamechchu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த – தனதான
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்
வைச்சி றைச்ச பாத்ர – மநுபோகம்
மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கை
மட்டு லப்ப தார்த்த – மிடிபாறை
எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு
மெய்ச்சி ளைச்ச ஈக்கு – மிரையாகும்
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
இப்படிக்கு மோக்ஷ – மருள்வாயே
பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி
பொற்ப தத்து ளாக்கு – புலியூரா
பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு
புத்தி மெத்த காட்டு – புனவேடன்
பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு
பைச்சி லைக்கு மாட்கொ – ளரன்வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட
பத்த ருக்கு வாய்த்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த – தனதான
மச்சம் மெச்சு(ம்) சூத்ரம் ரத்த பித்த மூத்(தி)ரம்
வைச்சு இறைச்ச பாத்திரம் – அநுபோகம்
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை
மண் குல பதார்த்தம் – இடி பாறை
எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும்
மெய்ச்சு இளைச்ச ஈக்கும் – இரையாகும்
இக் கடத்தை நீக்கி அக் கடத்துள் ஆக்கி
இப்படிக்கு மோக்ஷம் – அருள்வாயே
பொய்ச் சி(ன்)னத்தை மாற்றி மெய்ச் சி(ன்)னத்தை ஏற்றி
பொன் பதத்துள் ஆக்கு(ம்) – புலியூரா
பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு
புத்தி மெத்த காட்டு(ம்) – புன வேடன்
பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு
பைச் சிலைக்கும் ஆட்கொள் – அரன் வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட
பத்தருக்கு வாய்த்த – பெருமாளே.
English
maccha mecchu chUthram raththa piththa mUthram
vaicchi Raiccha pAthra – manupOkam
matka vitta sEkkai utpu zhuththa vAzhkkai
matku lappa thArththa – midipARai
eycchi Laiccha pEykku meycchi Laiccha nAykku
meycchi Laiccha eekku – miraiyAkum
ikka daththai neekki akka daththu LAkki
ippadikku mOksha – maruLvAyE
poycchi naththai mAtRi meycchi naththai yEtRi
poRpa thaththu LAkku – puliyUrA
pokka Naththu neetRai yitto ruththa nArkku
puththi meththa kAttu – punavEdan
pacchi laikkum vAykku Lecchi lukkum veekku
paicchi laikku mAtko – LaranvAzhvE
paththi siththi kAtti aththar siththa meetta
paththa rukku vAyththa – perumALE.
English Easy Version
maccha mecchu chUthram raththa piththa mUthram
vaicchi Raiccha pAthram – anupOkam
matka vitta sEkkai utpu zhuththa vAzhkkai
matku lap pathArththam – idipARai
eycchiLaiccha pEykkum eycchiLaiccha nAykkum
eycchiLaiccha eekkum – iraiyAkum
ikka daththai neekki akka daththu LAkki
ippadikku mOksham – aruLvAyE
poycchi(n)naththai mAtRi meycchi(n)naththai yEtRIi
poRpa thaththu LAkku – puliyUrA
pokka Naththu neetRai yitto ruththa nArkku
puththi meththa kAttu – punavEdan
pacchi laikkum vAykku Lecchi lukkum veekku
paicchi laikku mAtkoL – aranvAzhvE
paththi siththi kAtti aththar siththa meetta
paththa rukku vAyththa – perumALE.