Thiruppugal 511 Madhiyamanguna
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன – தந்ததான
மதிய மண்குண மஞ்சு நால்முக
நகர முன்கலை கங்கை நால்குண
மகர முன்சிக ரங்கி மூணிடை – தங்குகோண
மதன முன்தரி சண்ட மாருத
மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு
வகர மிஞ்சிய கன்ப டாகமொ – ரொன்றுசேருங்
கதிர டங்கிய அண்ட கோளகை
யகர நின்றிடும் ரண்டு கால்மிசை
ககன மின்சுழி ரண்டு கால்பரி – கந்துபாயுங்
கருணை யிந்திரி யங்கள் சோதிய
அருண சந்திர மண்ட லீகரர்
கதிகொள் யந்திர விந்து நாதமொ – டென்றுசேர்வேன்
அதிர பம்பைகள் டங்கு டாடிக
முதிர அண்டமொ டைந்து பேரிகை
டகுட டண்டட தொந்த தோதக – என்றுதாளம்
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ
டிதவி தம்பெறு சிந்து பாடிட
அமரர் துந்துமி சங்கு தாரைகள் – பொங்கவூடு
உதிர மண்டல மெங்கு மாயொளி
யெழகு மண்டியெ ழுந்து சூரரை
உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி – சிந்திவீழ
உறுசி னங்கொடெ திர்ந்த சேவக
மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற
வுரக னும்புலி கண்ட வூர்மகிழ் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன – தந்ததான
மதியம் மண் குணம் அஞ்சு நால் முக(ம்)
நகர(ம்) முன்கலை கங்கை நால் குண(ம்)
மகரம் முன் சிகர(ம்) அங்கி மூணிடை – தங்கு கோண(ம்)
மதனம் முன் தரி சண்ட மாருதம்
இரு குணம் பெறில் அஞ்சு எல் ஓர் தெரு
வகரம் மிஞ்சி அகன் படா கம் ஒர் – ஒன்று சேரும்
கதிர் அடங்கிய அண்ட கோளகை
யகர(ம்) நின்றிடும் (இ)ரண்டு கால் மிசை
ககன(ம்) மின் சுழி (இ)ரண்டு கால் பரி – கந்து பாயும
கருணை இந்திரியங்கள் சோதிய
அருண சந்திர மண்டலீகரர்
கதி கொள் யந்திர விந்து நாதமொடு – என்று சேர்வேன்
அதிர பம்பைகள் டங்கு டாடிக
முதிர அண்டமொடு ஐந்து பேரிகை
டகுட டண்டட தொந்ததோதக – என்று தாளம்
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரொடு
இத விதம் பெறு சிந்து பாடிட
அமரர் துந்துமி சங்கு தாரைகள் – பொங்க ஊடு
உதிர மண்டலம் எங்குமாய் ஒளி
எழ குமண்டி எழுந்து சூரரை
உயர் நரம்பொடு எலும்பு மா முடி – சிந்தி வீழ
உறு சினம் கொண்டு எதிர்த்த சேவக
மழை புகுந்து உயர் அண்டம் வாழ்வுற
உரகனும் புலி கண்ட ஊர் மகிழ் – தம்பிரானே.
English
mathiya maNkuNa manju nAlmuka
nakara munkalai kangai nAlkuNa
makara munsika rangi mUNidai – thangukONa
mathana munthari saNda mArutha
miruku NampeRi lanje lErtheru
vakara minjiya kanpa dAkamo – ronRusErung
kathira dangiya aNda kOLakai
yakara ninRidum raNdu kAlmisai
kakana minsuzhi raNdu kAlpari – kanthupAyung
karuNai yinthiri yangaL sOthiya
aruNa santhira maNda leekarar
kathikoL yanthira vinthu nAthamo – denRusErvEn
athira pampaikaL dangu dAdika
muthira aNdamo dainthu pErikai
dakuda daNdada thontha thOthaka – enRuthALam
athika vinjaiyar thumpru nArtharO
dithavi thampeRu sinthu pAdida
amarar thunthumi sangu thAraikaL – pongavUdu
uthira maNdala mengu mAyoLi
yezhaku maNdiye zhunthu cUrarai
uyarna rampode lumpu mAmudi – sinthiveezha
uRusi nangode thirntha sEvaka
mazhaipu kunthuya raNdam vAzhvuRa
vuraka numpuli kaNda vUrmakizh – thambirAnE.
English Easy Version
mathiyam maN kuNam anju nAl muka(m)
nakara mun kalai kangai nAl kuNa(m)
Makaram mun sikara(m) angi mUNidai – thangu kONa(m)
mathanam mun thari saNda mArutham
iru kuNam peRil anju el Or theru
Vakaram minji akan padA kam or – onRu sErum
kathir adangiya aNda kOLakai
yakara(m) ninRidum (i)raNdu kAl misai
kakana(m) min suzhi (i)raNdu kAl pari – kanthu pAyum
karuNai inthiriyangaL sOthiya
aruNa santhira maNdalIkarar
kathi koL yanthira vinthu nAthamodu – enRu sErvEn
athira pampaikaL dangu dAdika
muthira aNdamodu ainthu pErikai
dakuda daNdada thonthathOthaka – enRu thALam
Athika vinjaiyar thumpru nArtharodu
itha vitham peRu sinthu pAdida
amarar thunthumi sangu thAraikaL – ponga Udu
uthira maNdalam engumAy oLi
ezha kumaNdi ezhunthu cUrarai
uyar narampodu elumpu mA mudi – sinthi vIzha
uRu sinam koNdu ethirththa sEvaka
mazhai pukunthu uyar aNdam vAzhvuRa
urakanum puli kaNda Ur makizh – thambirAnE.