Thiruppugal 513 Manameunakkurudhi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனா தனத்ததன தனனா தனத்ததன
தனனா தனத்ததன – தனதானா
மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
வருவா யுரைத்தமொழி – தவறாதே
மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு
மனமாயை யற்றசுக – மதிபாலன்
நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல
நிலைவே ரறுக்கவல – பிரகாசன்
நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
நிழலாளி யைத்தொழுது – வருவாயே
இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய
இளையோ ளொரொப்புமிலி – நிருவாணி
எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை
யிதழ்வேணி யப்பனுடை – குருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர
முதுசூ ரரைத்தலை கொள் – முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு
முருகா தமிழ்ப்புலியுர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனா தனத்ததன தனனா தனத்ததன
தனனா தனத்ததன – தனதானா
மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில்
வருவாய் உரைத்தமொழி – தவறாதே
மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கரசு
மனமாயை யற்ற சுக – மதிபாலன்
நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல
நிலை வேர் அறுக்கவல – பிரகாசன்
நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம
நிழல் ஆளியைத் தொழுது – வருவாயே
இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய
இளையோள் ஒர் ஒப்புமிலி – நிருவாணி
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை
இதழ்வேணியப்பனுடை – குருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்துவர
முது சூரரைத் தலை கொள் – முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்கு உருகு
முருகா தமிழ்ப்புலியுர் – பெருமாளே.
English
manamE unakkuRuthi pukalvE nenakkarukil
varuvA yuraiththamozhi – thavaRAthE
mayilvAka nakkadavuL adiyAr thamakkarasu
manamAyai yatRasuka – mathipAlan
ninaivE thunakkamarar sivalOka mittumala
nilaivE raRukkavala – pirakAsan
nithikA namakkuRuthi avarE parappirama
nizhalALi yaiththozhuthu – varuvAyE
inamO thoruththirupi nalamEr maRaikkariya
iLaiyO Loroppumili – niruvANi
enaiyee Neduththapukazh kaliyANi pakkamuRai
yithazhvENi yappanudai – gurunAthA
munavOr thuthiththu malar mazhaipO liRaiththuvara
muthucU raraiththalai koL – murukOnE
mozhipAku muththunakai mayilAL thanakkuruku
murukA thamizhppuliyUr- perumALE.
English Easy Version
manamE unakku uRuthi pukalvEn enakku arukil
varuvAy uraiththamozhi – thavaRAthE
mayil vAkanakkadavuL adiyAr thamakkarasu
manamAyai yatRa suka – mathipAlan
ninaivEthu unakku amarar sivalOkam ittu mala
nilai vEr aRukkavala – pirakAsan
nithi kA namakku uRuthi avarE parappirama
nizhal ALiyaith thozhuthu – varuvAyE
inam Othu oruththi rupi nalam Er maRaikku ariya
iLaiyOL or oppumili – niruvANi
enai eeNeduththa pukazh kaliyANi pakkam uRai
ithazhvENiyappanudai – gurunAthA
munavOr thuthiththu malar mazhaipOl iRaiththuvara
muthu cUraraith thalai koL – murukOnE
mozhipAku muththunakai mayilAL thanakku uruku
murukA thamizhppuliyUr – perumALE.