Thiruppugal 516 Vanjamekodi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தனா தான தானன தந்தனா தான தானன
தந்தனா தான தானன – தனதான
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வன்கணா ரார வாரமு – மருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்
வந்தியா ஆசை யேதரு – விலைமாதர்
பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு
பஞ்சியே பேசி நாடொறு – மெலியாதே
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை – யருள்வாயே
அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்
அன்றுதா னேவி வானவர் – சிறைமீள
அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்
அண்டர்கோ வேப ராபர – முதல்வோனே
கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய
கொன்றையா னாளு மேமகிழ் – புதல்வோனே
கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு
குன்றுதோ றாடல் மேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தனா தான தானன தந்தனா தான தானன
தந்தனா தான தானன – தனதான
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வண் க(ண்)ணார் ஆரவாரமும் – அருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்
வந்தியா ஆசையே தரு – விலைமாதர்
பஞ்ச மா பாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு
பஞ்சியே பேசி நாள் தொறும் – மெலியாதே
பந்தியாய் வான் உளோர் தொழ நின்ற சீரே குலாவிய
பண்பு சேர் பாத தாமரை – அருள்வாயே
அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில்
அன்று தான் ஏவி வானவர் – சிறை மீள
அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள்
அண்டர் கோவே பராபர – முதல்வோனே
கொஞ்சவே காலின் மேவு சதங்கைதான் ஆட ஆடிய
கொன்றையான் நாளுமே மகிழ் – புதல்வோனே
கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு
குன்று தோறாடல் மேவிய – பெருமாளே
English
vanjamE kOdi kOdikaL nenjamE sEra mEviya
vankaNA rAra vAramu – maruLvOrAy
vampilE vAthu kURikaL konjiyE kAma leelaikaL
vanthiyA Asai yEtharu – vilaimAthar
panjamA pAva mEtharu kongaimEl nEsa mAyveku
panjiyE pEsi nAdoRu – meliyAthE
panthiyAy vAnu LOrthozha ninRasee rEku lAviya
paNpusEr pAtha thAmarai – yaruLvAyE
anjavE cUra nAnava nuynjupO kAma lEyayil
anRuthA nEvi vAnavar – siRaimeeLa
anpinO dEma nOratha minjamE lAna vAzhvaruL
aNdarkO vEpa rApara – muthalvOnE
konjavE kAlin mEvusa thangaithA nAda Adiya
konRaiyA nALu mEmakizh – puthalvOnE
konthusEr sOlai mEviya kunRusUzh vAka vEvaru
kunRuthO RAdal mEviya – perumALE.
English Easy Version
vanjamE kOdi kOdikaL nenjamE sEra mEviya
vaN ka(N)NAr AravAramum – aruLvOrAy
vampilE vAthu kURikaL konjiyE kAma leelaikaL
vanthiyA AsaiyE tharu – vilai mAthar
panja mA pAvamE tharu kongai mEl nEsamAy veku
panjiyE pEsi nAL thoRum – meliyAthE
panthiyAy vAn uLOr thozha ninRa seerE kulAviya
paNpu sEr pAtha thAmarai – aruLvAyE
anjavE cUran Anavan uynju pOkAmalE ayil
anRu thAn Evi vAnavar – siRai meeLa
anpinOdE manOratham minja mElAna vAzhvu aruL
aNdar kOvE parApara – muthalvOnE
konjavE kAlin mEvu sathangaithAn Ada Adiya
konRaiyAn nALumE makizh – puthalvOnE
konthu sEr sOlai mEviya kunRu** sUzhvAkavE varu
kunRu thORAdal mEviya – perumALE.