திருப்புகழ் 517 திரு நிலம் மருவி (கயிலைமலை)

Thiruppugal 517 Thirunilammaruvi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனனத் தான தனதன தனனத் தான
தனதன தனனத் தான – தனதான

திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி
சிவவழி யுடனுற் றேக – பரமீதே

சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
திரிபுர மெரியத் தீயி – னகைமேவி

இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
யிருள்கதி ரிலிபொற் பூமி – தவசூடே

இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
ரிளையவ னெனவித் தார – மருள்வாயே

பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
பழமறை பணியச் சூல – மழுமானும்

பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
பரியினை மலர்விட் டாடி – அடியார்கள்

அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
மருள்செயு முமையிற் பாக – ரருள்பாலா

அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
டடியவர் கயிலைக் கான – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனனத் தான தனதன தனனத் தான
தனதன தனனத் தான – தனதான

திரு நிலம் மருவிக் காலின் இரு வழி அடை பட்டு ஓ(ட்)டி
சிவ வழி உடன் உற்று ஏக – பர(ம்) மீதே

சிவ சுடர் அதனைப் பாவை மணம் என மருவி கோல
திரி புரம் எரியத் தீயில் – நகை மேவி

இரு வினை பொரியக் கோல திருவருள் உருவத்து ஏகி
இருள் கதிர் இலி பொன் பூமி – தவசு ஊடே

இருவரும் உருகிக் காய(ம்) நிலை என மருவி தேவர்
இளையவன் என வித்தாரம் – அருள்வாயே

பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள் பட முத்தேவர்
பழ மறை பணிய சூலம் – மழு மானும்

பரிவோடு சுழல சேடன் முடி நெறு நெறு என கோவு
பரியினை மலர் விட்டு ஆடி – அடியார்கள்

அரஹர உருகிச் சே செ என திரு நடனக் கோலம்
அருள் செ(ய்)யும் உமையின் பாகர் – அருள் பாலா

அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளிப்
போரொடு
அடியவர் கயிலைக்கு ஆன – பெருமாளே

English

thirunila maruvik kAli niruvazhi yadaipat tOti
sivavazhi yudanut REka – parameethE

sivasuda rathanaip pAvai maNamena maruvik kOla
thiripura meriyath theeyi – nakaimEvi

iruvinai poriyak kOla thiruvaru Luruvath thEki
yiruLkathi rilipoR pUmi – thavacUdE

iruvaru murukik kAya nilaiyena maruvith thEvar
iLaiyava nenavith thAra – maruLvAyE

paripura kazhalet tAsai sevidukaL padamuth thEvar
pazhamaRai paNiyac cUla – mazhumAnum

parivodu cuzhalac cEdan mudineRu neRenak kOvu
pariyinai malarvit tAdi – adiyArkaL

arahara vurukic cEce yenathiru nadanak kOlam
aruLseyu mumaiyiR pAka – raruLbAlA

alaraNi kuzhalpoR pAvai thirumaka LamaLip pOro
dadiyavar kayilaik kAna – perumALE.

English Easy Version

thiru nilam maruvik kAlin iru vazhi adai pattu O(t)ti
siva vazhi udan utRu Eka – para(m) meethE

siva sudar athanaip pAvai maNam ena maruvi kOla
thiri puram eriyath theeyil – nakai mEvi

iru vinai poriyak kOla thiruvaruL uruvaththu Eki
iruL kathir ili pon pUmi – thavasu UdE

iruvarum urukik kAya(m) nilai ena maruvi thEvar
iLaiyavan ena viththAram – aruLvAyE

paripura kazhal ettu Asai sevidukaL pada muththEvar
pazha maRai paNiya cUlam – mazhu mAnum

parivOdu suzhala\ sEdan mudi neRu neRu ena kOvu
pariyinai malar vittu Adi – adiyArkaL

arahara urukic cE ce ena thiru nadanak kOlam
aruL se(y)yum umaiyin pAkar – aruL pAlA

alar aNi kuzhal pon pAvai thiru makaL amaLip pOrodu
adiyavar kayilaikku Ana – perumALE.