Thiruppugal 519 Nagaiththuurukki
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்த தனத்த தனத்த தனத்த
தனத்த தனத்த – தனதான
நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
நடித்து விதத்தி – லதிமோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
நலத்தி லணைத்து – மொழியாலுந்
திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை
திரட்டி யெடுத்து – வரவேசெய்
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு கலைக்குள் – விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
படர்ச்சி கறுத்த – மயிலேறிப்
பணைத்த கரத்த குணத்த மணத்த
பதத்த கனத்த – தனமாதை
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
வெளுத்த பொருப்பி – லுறைநாதா
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
ம்ருகத்தை யெடுத்தொர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்த தனத்த தனத்த தனத்த
தனத்த தனத்த – தனதான
நகைத்து உருக்கி விழித்து மிரட்டி
நடித்து விதத்தில் – அதி மோகம்
நடத்து(ம்) சமத்தி முகத்தை மினுக்கி
நலத்தில் அணைத்து – மொழியாலும்
கைத்த வரத்தில் அடுத்த பொருள் கை
திரட்டி எடுத்து – வரவே செய்
திருட்டு முலைப் பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு கலைக்குள் – விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து
படர்ச்சி கறுத்த – மயில் ஏறி
பணைத்த கரத்த குணத்த மணத்த
பதத்த கனத்த – தன மாதை
மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து
வெளுத்த பொருப்பில் – உறை நாதா
விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க
ம்ருகத்தை எடுத்தொர் – பெருமாளே.
English
nakaiththu vurukki vizhiththu miratti
nadiththu vithaththi – lathimOkam
nadaththu samaththi mukaththai minukki
nalaththi laNaiththu – mozhiyAlun
thikaiththa varaththi laduththa porutkai
thiratti yeduththu – varavEsey
thiruttu mulaippeN maruttu valaikkuL
thevittu kalaikkuL – vizhuvEnO
pakaiththa arakkar siraththai yaRuththu
padarcchi kaRuththa – mayilERip
paNaiththa karaththa kuNaththa maNaththa
pathaththa kanaththa – thanamAthai
mikaiththa punaththi liruththi yaNaiththu
veLuththa poruppi – luRainAthA
viriththa sadaikku Loruththi yirukka
mrukaththai yeduththor – perumALE.
English Easy Version
nakaiththu urukki vizhiththu miratti
nadiththu vithaththil – athi mOkam
nadaththu(m) samaththi mukaththai minukki
nalaththil aNaiththu – mozhiyAlum
thikaiththa varaththil aduththa poruL kai
thiratti eduththu – varavE sey
thiruttu mulaip peN maruttu valaikkuL
thevittu kalaikkuL – vizhuvEnO
pakaiththa arakkar siraththai aRuththu
padarcchi kaRuththa – mayil Eri
paNaiththa karaththa kuNaththa maNaththa
pathaththa kanaththa – thana mAthai
mikaiththa punaththil iruththi aNaiththu
veLuththa poruppil – uRai nAthA
viriththa sadaikkuL oruththi irukka
mrukaththai eduththor – perumALE.